Pages

Saturday, April 2, 2011

சூரிய கிரண்

சூரிய கிரண்

சூரிய கதிர் என்று ஹிந்தியில் சொல்லப்படும் சூரிய கிரண் என்ற வார்தைகளுக்கு ஒரு தனி பெருமை இந்திய விமான படையில் உண்டு. சூரிய கிரண் என்பது 09 விமானங்கள் சேர்ந்த ஒரு ஏரோபடிக் குழு . உலகதில் 09 விமானங்களை கொண்ட ஏரோபடிக் குழு மொத்தம் மூன்று தான் உள்ளது. அதில் இந்தியாவும் ஒன்று. ( மற்ற இரண்டு ப்ரிடீஷ்- ரெட் ஏரோஸ், கனடா -ஸ்னௌ பேர்ட்ஸ் ) சூரிய கிரண் 1996 ல் ஆரம்பிக்க பட்டது. அதற்க்கு முன்னர் "தண்டெர் போல்ட் " என்ற பெயரில் ஹாவக் ஹன்டெர் விமானங்களை கொண்டு இருந்தது. விமான படையின் தூதுவராகவும் , இந்திய விமான படையின் திறமையை காட்டவும் சூரிய கிரண் அமைக்கப்பட்டது.




குறிப்பு : இந்த விடியோவை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SLOW DOWNLOAD   பட்டனை அமுக்கவும் , ஒரு 65 வினாடிகள் பொருத்து டவுன்லோட் ஆரம்பிக்கும் VLC பிளேயர்ரில் ப்ளே செய்யவும் .

விமான படையில் விமானியாக சேரும் அதிகாரிகள் முதலில் HP-32 என்று அழைக்கப்படும் ப்ரொபெல்லர் ( மூக்கின் முன் ஒரு காத்தாடி வச்சுட்டு விர் ரும்..ம்ம்..ம்..ம்ம்.ம்.ம்..சத்தம் போட்டுட்டு போகுமே அது தான் )விமானதில் பயிற்ச்சி பெருவார்கள். அதுக்கு அப்புறம் பெரிய ஜெட் விமானகளை ஒட்டி பழகும் முன் இந்த கிரணை பழக வேனும் .அதாவது புல்லெட் பைக்கை ஒட்டி பழகரதுக்கு முன்னாடி டிவிஎஸ் 50 ஒட்டி பழகரது மாதிரினு வசுக்கோங்க. இந்த சூரிய கிரண்ல இருக்குற பைலட்டுங்க எல்லாம் பறக்கறதுல பழம் தின்னு கொட்டை போட்டவங்க .குறைட்ந்த பட்சம் 2000 மனி நேரம் வானத்தில் பறந்த அனுபவம் வேண்டும் அது போக கடுமையான சோதனைகளுக்கு அப்புறம் தான் இதில் சேர்துக்குவாங்க. Fighter Pilot மட்டுமே சேர முடியும். பொதுவாக MIG-27,MIG-29,MIRAGE 2000 ல் பைலட்டாக இருந்தவர்கள் கிரணில் வருவார்கள். இதில் இன்னொரு விசேசம் எண்ணனா இது இரண்டு பெர் அமரகூடியது. ஆன எல்லா பயிற்சி விமானங்களில் முன்னாடி ,பின்னாடி என்ற அமைப்பில் தான் சீட் இருக்கும். ஆனல் இதில் பக்கது பக்கதில் இருக்கும். அதாவது இரண்டு பேர் போர கார் மாதிரி.

நல்லா கண்ணை பறிக்கும் விதமான ஆரஞ்சு மற்றும் வெள்ளை கலந்த வண்ணத்தில் இருக்கும். இவர்கள் செய்யும் ஏரோபடிக்கை பார்த்தாள் மயிர் கூச்செரியும்.மேலோட்டமாக பார்கையில் ஏதோ பறப்பது போல தோனும். ஆனால் ஒரு முலுமையான மன ஒருமைப்பாடு மற்றும் குழுவுகலுக்கு இடையேயான ஒத்துலைப்பு மிக மிக அவசியம். கரணம் தப்பினானால் ( கிரணில் ) மரணம் என்பது மிக உண்மை இங்கே. ( 2006 , 2009 ல் இரண்டு விபத்து நடந்து, விமானிகள் மரணம் அடைந்து உள்ளனர். )


கிரண் ஆரபிக்க பட்ட நாட்களிள் இருந்து பல்வேறு நாடுகளுக்கு சென்று நம்முடைய திறமையை நிருபித்து உள்ளார்கள். அது போக விமான படையில் சேர்வதர்க்கு நடத்தப்படும் ஆள் சேர்ப்பு முகாம்கலிலும் ஒரு விளம்பரதுக்காக சாகசங்கள் செய்து உள்ளார்கள். சென்னையிலும் மெரின்னா கடற்க்கரையில் நடத்தி உள்ளார்கள். இங்கு நான் கொடுது உள்ள விடியோவை பாருங்கள் உங்களுக்கே தெரிய வரும். இதயம் மாதிரி ஹார்ட்ஸ் போட்டு அதில் அம்பு விடுவது இவர்களுடைய ஹை லைட். புகை வருவதர்க்கு டீசல் பயன்படுத படுகிறது. மிகவும் காஸ்டிலியான டீசல். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஏரோ இண்டியாவில் தவறாமல் கிரணின் சாகசங்கள் இருக்கும்.


2007 ல் நடந்த ஏரோ இண்டியா சோவிற்க்கு நான் போய் இருந்தேன் .( ILS-Instrument Landing System என்ற Navigational Aids கருவியில் நான் தேர்ச்சி பெற்றவன், அதனால் என்னுடைய பங்களிப்பு தேவை என்று டெபுடெசனில் என்னை அழைதார்கள் என்ற தகவலை சொல்ல என்னுடைய அவை அடக்கம் தடுக்கிறது. ) அங்கு தான் தாரங்க் என்று அழைக்கப்படும் ஹெலிக்காப்டர் ஏரோபடிக் செய்து கொண்டு இருந்த போது விபதுக்குள்ளாகி அதன் பைலட் இரண்டு பேரும் இறந்து போனார்கள். இதை ஏன் சொல்லுரேன்னா, இப்படி எதாவது விபத்து நடந்துச்சுனா உடனே பறப்பதை நிறுத்தி விட மாட்டார்கள். எப்போதும் போல முழு வேகத்துடன் பறப்பார்கள். அப்போ தான் மற்ற விமானிகளுக்கு கான்ஃபிடன்ஸ் குறையாமல் இருக்கும். அது போக இறந்தவர்களுக்கு அவர்கள் செய்யும் அஞ்சலி அது. இது வரை மூன்று விமான விபத்துகளை நேரில் பார்த்து உள்ளேன். அதில் இரண்டு விபதுகளில் பைலட் மரணம் அடைந்தவர்கள். அனைவருக்கும் மனைவி ,குழந்தைகள் உண்டு. செரிமோனியல் துக்க பரேட் நடக்கும் போது இறந்து போன பைலட்டுகளின் குடும்பத்தை பார்க்கும் போது என்ன பொழப்புடா இதுனு இருக்கும்.

வித விதமான FORMATION

இந்த வருடம் பெங்கலூருவில் நடை பெற்ற (09-Feb-2011 to 13 Feb-2011 ) ஏரோ இண்டியா தான் கிரணின் கடைசி சாகச நிகழச்சி. பயிற்சி விமானங்கள் பற்றா குறையின் காரணமாக இந்த கிரண் ஏரோபடிக் குழு கலைக்கப்படுகிறது.இந்த செய்தியை கேள்விப்பட்டு கிரண் ஸ்கோட்ரனில் உள்ள என் நண்பர்களை விசாரித்தேன். உண்மை தான்.அவர்களும் விசனமாக உள்ளார்கள்.
ஏன்னெனில் ஒவ்வொரு டெச்னிசியனும் அவர்கள் வேலை செய்யும் விமானத்தை ஒரு குழந்தையை போல தான் பார்த்துக் கொள்வார்கள்.இனி வரும் காலங்களில்( ஒரு 2-3 வருடம் ) பிரிடீஷ் ஹாவாக் விமானம் பயிற்ச்சிக்காக வாங்க உள்ளார்கள். ஒரு வேளை ஹாவாக் விமானதை வைத்து மறுபடியும் ஏரோபடிக் டீம் அமைப்பார்களோ என்னவோ தெரியாது . அது வரை நான் ஏர் ஃபோர்ஸில் இருப்பேனா என்பதும் சந்தேகமே. ஆனால் ஒன்று சூரிய கிரண் ஒரு லெஜண்ட், அதன் இருப்பிடத்தை நிரப்ப எத்தனை புதிய விமானங்கள் வந்தாலும் முடியாது.
சூரிய  கிரண் 

4 comments:

  1. ஏதாவது சொல்லிட்டு போறதுன்னா??

    சரிங்க!தகவலுக்கு நன்றி!

    போயிட்டு வர்றோம்!!

    ReplyDelete
  2. @ siva: என்னங்க சிவா ,இப்படி சொல்லிட்டு போறீங்க. அடிக்கடி நம்ம கடை பக்கம் வந்துட்டு போங்க . இங்க கடையோட உரலிய தராம போய்டீங்களே ...! தந்தா நானும் உங்க கடைய ஒரு எட்டு எட்டி பார்ப்பேன்ல...!

    ReplyDelete
  3. ஒரு எட்டு எட்டி பார்க்கிறதுக்கு இங்க கடையெல்லாம் இல்லீங்க.நாங்க பார்வையாளர் மட்டுமே!

    ReplyDelete
  4. oh so sad to hear this news,but i am very lucky to saw that show at least one time because of you only.thank you so much not only that one another precious opportunity to see take off and landing of aircraft from ATC tower and watching of mi-17 and an-32 cockpits.

    ReplyDelete

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets