Pages

Thursday, April 28, 2011

தாமதம்

ஸ்..ஸ்..ஸ்...அப்பப்பா நாலு மாசதுள்ள மூன்று  தடவை வீடு மாத்தியாச்சு . மனுஷனுக்கு வாழ்கையே வெறுத்து போச்சு. இப்போ கிடச்ச (2 BHK ) வீடு நிரந்தரம் . போஸ்டிங் போக வரைக்கும் இங்கே இருக்கலாம் . எப்பா... ஒவ்வொரு முறையும் சாமானத்தை தூக்கி கொண்டு அலைவது என்பது நொம்ப கஷ்டம்மடா  சாமி . மிக்ஸி ,கிரைண்டர் , இப்படி பெரிய பெரிய சாமான்களை ஷிபிட் பண்ணுவது என்பதில் ஒரு பெரிய சிரமமே இருப்பது இல்லை.

இந்த சின்ன சின்ன சாமான்கள் தான் பெரிய தலை வலி. அதுல பாருங்க ,இந்த சின்ன சின்ன சாமான்கள் தான் நாம நெறைய நேரம் யூஸ் பண்ணுவோம். உதரணமாக , இந்த பேஸ்ட் , ஷேவிங் கிரீம் , பிரஷ் , சூ பாலிஷ்  இப்படி. வீடு ஷிபிட் பண்ணுன அடுத்த நாள் ஆபிஸ் போக ரெடி ஆகிக்கொண்டு இருக்கும் போது ஷேவிங் ரேசரை எங்கயோ வைத்து விட்டு நொம்ப டென்சன் ஆய்ட்டேன். கடைசில ஒரு மொன்ன  பிளேடுல சரச்சுட்டு போனேன். என்ன மாதிரி 5  வருடங்களுக்கு ஒரு முறை ட்ரான்ஸ்பர் ஆகும் மக்கள் உண்மையிலேயே நொம்ப பரிதாவதுக்கு உரிய ஜீவன்கள். 

இப்போ லீவுல தமிழ் நாடு வந்து உள்ளேன். இப்போ தான் எலக்சன் முடிஞ்சு எல்லோரும் அமைதியாக இருக்காங்க .பஸ்சுல கலைஞ்சர் பொன் மொழிகள் " வெள்ளி என்னும் ..." ஸ்டிக்கர்ல கூட மஞ்ச பெயிண்ட் அடிச்சு வச்சு இருக்காங்க .எலக்சன் கமிசன் கண்ணுல விரல விட்டு ஆட்டி இருக்கானகனு தெரிய வருது. ஆனாலும் நொம்ப இடத்துல பணம் விளையாடி இருக்காம். பார்க்கலாம் ரிசல்ட் வர அன்னைக்கு நான் இங்க தான் இருப்பேன். இப்படி நெட் செண்டர்ல உக்காந்து டைப் பண்ணுவது நொம்ப கஷ்டமா இருக்கு. அது போக இங்க கோபில ஒரு மணி நேரத்துக்கு 30 /= ருபாய். நொம்ப அநியாயம். ஈரோட்டுல 15 /=  தான் வாங்குறாங்க . ரெண்டு பதிப்ப போடுறதுக்கு பேப்பருல எழுதி வச்சு இருக்கேன்,அனேகமாக சனிக்கிழமை பதிப்ப போடுவேன் என நினைக்குறேன். அதுவரைக்கும் இப்போ என்னோட அலை பேசி குறுஞ்செய்திகளை படியுங்கள் .

No comments:

Post a Comment

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets