Pages

Tuesday, May 3, 2011

திரை விமர்சனம்- "கோ" & " வானம் "

விடுமுறைல வந்து சொந்த பந்தங்களை எல்லாம் பார்த்து விட்டு அப்படியே ரெண்டு படமும் பார்த்து விட்டேன். ( கோ , வானம் ) . இங்க இப்போ நல்ல மழை. அதனால் வெயில் அவ்வளவாக  தெரிய வில்லை.

" கோ " படத்தை கோயம்பத்தூரில் பார்த்தேன். நன்றாக இருந்தது. அங்கெங்கே கொஞ்சம் லாஜிக் உதைத்தாலும் ஒரு பத்திரிக்கை நிருபர் , போட்டோ கிராபர் , எப்படி எல்லாம் ஒரு ஆட்சியை மாற்ற முடியும் என்பதை வித்தியாசமாக காட்டி உள்ளார்கள். ஜீவா ஒரு போட்டோ கிராபர்ராக நன்றாக பொருந்துகிறார். பாம்ப் வெடித்த போதும் கூட ஓடி ஓடி புகை படம் எடுத்து ஒரு போட்டோ கிராபர்ரின் கடமையை நிலை நாட்டுகிறார். " பாம்ப் தான் வெடித்து விட்டதே போய் அடி பட்டவர்களுக்கு உதவி செய்யல்லாம் இல்ல அத விட்டுட்டு படம் எடுத்துட்டு இருக்கான் பரதேசி "னு தங்கமணி சொன்னார். ஒரு போட்டோ கிராபராக அவர் அதை தான் செய்யனும், அதை தான் இயக்குனர் நன்றாக காட்டி உள்ளார் என்றேன். வரலாற்றை சொல்ல  ஒரு புகை படம் போதும் , (புலிச்சர் விருது பெற்ற வியட்நாம் Kim Phuc - நிர்வாண சிறுமி ஒரு உதாரணம் . வியட்நாமின் போர் அவலங்களை அது உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது. ..இப்படி நிறைய உதாரணங்களை சொல்லலாம் ). 


பாடல்கள் கேட்ட்கும் விதமாக உள்ளது . " என்னமோ ஏதோ " " அமிலி துமிழி நெளியும்"  இரண்டு பாடல்களும் அருமை. இன்னும்  கொஞ்ச நாட்களுக்கு இளைஞ்சர்களுக்கு இது தாம் செல் போனின் ரிங் டோன்னாக இருக்கும். பாடல்கள் எடுத்த இடங்களில் இயக்குனர் மிகவும் மெனக் கெட்டு இருப்பது தெரிய வருகிறது.  ராதாவின் மகள்  அடக்கி வாசித்து இருக்கிறார். ஆனால் அவருடைய புருவங்கள் தான் எனக்கு பிடிக்கவில்லை. வில்   போன்ற   புருவம்  என்று சொல்லுவார்கள்  ஆனால் அவருக்கு  நொம்பவுமே வளைந்து   இருக்கிறது. பியா நல்ல வாயாடி பெண்ணாக வந்து இடையில் அநியாமாக செத்து போகிறார். நல்ல படம். இயக்குனர் ஏன் கோ என்று பெயர் வைத்தார் என்று தான் தெரிய வில்லை. இதற்க்கு முன்னரும் அயன் என்று வைத்தார். படத்துக்கும் அயன்னுக்கும் என்ன தொடர்பு என்று இன்று வரை எனக்கு புரிய வில்லை. அதே மாதிரி  தான் " கோ" வும்.

======================================

வானம் படம் ஈரோட்டில் பார்த்தேன் . ஏண்டா பார்த்தேன் என்று நொந்து நூலாகி போனேன். படம் பார்த்து கொண்டு இருக்கும் போது 5 முறை பவர் கட். வாழ்க மின் வெட்டு. பாடல்கள் ஒன்று கூட புரியவில்லை. காதில் சத்தம் கேட்டு செவிடாகி போனது தான் மிச்சம். படத்தில்  அநியாயத்திற்கு க்ளோஸ் அப்  காட்சி வருகிறது . அதுவும் சோனியா அகர்வாலின் முகம் " உவ்வ்வே " ரகம். அதே மாதிரி பிரகாஷ்  ராஜ்   முகமும் .கன்னக் கொழுப்பு மினு மினுக்கிறது. கன்றாவி. சிம்பு முன்னை விட கொஞ்சம் உடம்பு போட்டு இருக்கிறார். சந்தானம் காமெடி நம்மை கொஞ்சமாக சிரிக்க வைக்க நொம்ப சிரம படுகிறார்.  வேற வழி இல்லை சிம்புவிற்கு. சேம் ஏஜ் காமடியனுக்கு அவரு பாவம் எங்க தான் போவார். வடிவேல் எலக்சனில் பிஸி ஆகி விட்டார். விவேக்கை போட்டு இருக்கலாம்.
படத்தின் இயக்குனர் நிறைய ராஜேஷ் குமார் , பட்டுகோட்டை பிரபாகர் நாவல்கள் எல்லாம் பார்ப்பார் போல இருக்கு. ஏன் என்றால் படத்தின் காட்சிகள்  எல்லாம் பிட்டு பிட்டாக வருகிறது.அவர்கள் நாவலில் தான் அத்தியாயம் 1 : இடம் : தூத்துக்குடி , அத்தியாயம் 2 : இடம் : சென்னை என வந்து எல்லாம் 9  தாவது அத்தியாயத்தில் ஒன்று சேரும் . அதே போல் இதிலும் இடை வேலைக்கு அப்புறம் எல்லாம் ஒன்று சேர்கிறது. அது கூட நாம் யூகிக்கும் வகையாக இருக்கிறது. புதுசாக வித்தியாசமாக செய்கிறாராம் . நமக்கு தலை கிறுகிறுத்தது தான் மிச்சம் . அட வித்தியாசமாக செய்யட்டும், அதுக்காக ஒவ்வொரு மூன்று நிமிசத்துக்கு ஒரு தடவை காட்சி மாறுவது கொடுமை. பிரகாஷ் ராஜின் பிளாஷ் பேக், பிளாஷ்பேக் தான என தடுமாற வைக்கிறது . ஒரு கொசு வர்த்தி சுருளை கட்டி இருக்கலாம் .
பரத் - எதோ ஒரு மூன்றாம் வகை ஹீரோ போன்று வந்துட்டு போகிறார். வேண்டாத வேலை. ஒரு முன்னணி ஹீரோ ஆனதுக்கு பிறகு இப்படி மற்ற ஹீரோ வுடன் ஏன் சேர்ந்து நடிக்க வேண்டும் அதுவும் உப்பு சப்பில்லாத ஒரு கதா பாத்திரதிர்க்காக. ஒரு வேலை சிம்புவின் ரசிகர்களை தன பக்கம் கொஞ்சம் ஈர்க்கலாம் என்ற நோக்கமாக இருக்கலாம். 

ஹிந்து ,முஸ்லீம்  ஒற்றுமை எப்படி பார்க்க படுகிறது , அதிகாரத்தில் இருக்கும் ஒரு போலீஸ் ஆபிசர் ஒரு ஹிந்து வெறியராக இருந்ததால் என்ன என்ன விளைவுகள் ஏற்ப்பட்டது , போன்றவற்றை இயக்குனர் நன்றாக சொல்லி இருக்கிறார். அனால் அது மட்டுமே போதாதே ஒரு படம் வெற்றி அடைய. சிம்புவுக்கு ஏற்ற கதை களம் கிடையாது வானம். அதுவும் கேபிள் ராஜா கேரட்டர். வேறு எந்த கேரட்டரும் பொருந்தி இருக்கும். கட்டிடம் கட்டிடமாக தாவுவதர்கன சீன்கள் இருப்பதாலேயே கேபிள் ராஜா என்று பேர் வச்சு இருப்பாங்க போல் இருக்கு. 

கோ படத்தை பார்த்த பிறகு வானம் பார்த்த படியால் வானம் மனதில் ஓட்ட வில்லை. சுத்தமாக பிடிக்க வில்லை. நண்பர் சொன்னார், கோ படத்தில் சிம்பு நடிக்க வேண்டியதாம். ஹீரோயீனை மாத்து என்று தொல்லை கொடுத்ததினால் , ஜீவாவை போட்டார்கள் என்று. இந்த விசயத்தில் சிம்பு ஜீவாவுக்கு உதவி செய்து உள்ளார். ஜீவாவின் நிலை உயர்ந்து உள்ளது. சிம்பு  கோ வில் நடித்து இருந்தால் அது அவரை மேலும் உயர்த்தி இருக்கும். கடைசியில் இறந்து போவது மாதிரி வந்தால் , ஒரு சிம்பத்தி அலை அடித்து படம் ஓடி ... நல்ல வசூலை தந்து ...மார்கெட் உயர்ந்து ....இப்படி எல்ல்லாம் சிம்பு நினது இருந்தால் , தப்பு கணக்கு போட்டுட்டார்.   

1 comment:

  1. அண்ணே !!! ரெண்டு காமெடின்னே !!!! பரத் முண்ணனி ஹூரோன்னு சொன்னது அத விட காமெடி சொம்பு ச்சே சிம்புவுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்குன்னது !!!!

    ReplyDelete

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets