Pages

Sunday, May 8, 2011

திரை விமர்சனம்- எங்கேயும் காதல்

வேற வேல பொழப்பே இல்லாமல் சும்மா படம்மா பார்த்து தள்ளுகிறேன். நேத்து இரண்டாம் ஆட்டம் " எங்கேயும் காதல் " போய் இருந்தோம். பார்த்த தியேட்டர் ஒரு கொடுமைனா, படம் அதை விட செம கொடுமை. இதுல விமர்சனம்னு ஒன்னு போட்டா அதை விட ஒரு கொடுமை வேற ஏதும் இல்லை. 

படத்தில் கிளைமாக்சில் ஒரு புறா ஜெயம் ரவியீன் காதல் கடிதத்தை தனது கால்களில் எடுத்து கொண்டு , ஹீரோயீன் இடம் கொண்டு சேர்க்கிறது. பின்னர் இருவரும் ஒன்று சேர்கிறார்களாம். கருமம்ட சாமி. பிரபு தேவா மனசுல என்ன தான் நினச்சுட்டு இருக்கார். நாம எல்லாம் சுத்த மட சாம்பிராணிகள் , என்னத்த காட்டினாலும் பார்ப்போம் என்று நினச்சுட்டு இருக்கார் போல. ஜெயம் ரவி இப்படி இன்னும் ஒரு படம் நடித்தால் போதும் பின்னர் அவர் தமிழ் சினிமாவில் இருந்தே காணமல் பொய் விடுவார். 

ஹன்சிகா மோத்வாணி வழக்கம் போல பணக்கார அப்பாவின் லூசு பொண்ணாக வருகிறார். . வழக்கமா ஹீரோக்கு தான் ஹீரோயீன பார்த்த வுடன் காதல் பத்திக்கும் ஆனா இதுல ஹன்சிகவுக்கு ஜெயம் ரவியை பார்த்தவுடன் காதல் பத்திக்கிச்சு.ஆனா ரவிக்கு ஹன்சிகா மேல் எதற்கு காதல் ஏற்ப்பட்டது என்பதற்கு எந்த சீனும் இல்லை. 

படம் முழுக்க ஜெயம்  ரவி , மோத்வாணி, சுமன் , ராசு சுந்தரம் , இவர்கள் தான் வருகிறார்கள். அப்புறம் ஆ ..வூ னா பாட்ட போட்டு விடுகிறார்கள் . பிரபு தேவாவுக்கு எதுக்கு பாட்டு என்று தெரியவில்லை . அதுவும் பேர் போட்ட உடனே பாடிவிட்டு போகிறார். இடை வேளைக்கு அப்புறம் உடனே பாட்டு . இடை வேளைக்கு அப்புறம் பாட்டு போட்டால் யாரும் எழுந்திருத்து போக மாட்டார்கள் என்ற தகிரியம்.

படம் பாரிசில் எடுத்து இருகிறார்கள். இது வரை சினிமாவில் பார்க்காத லொகேஷனை பார்க்கலாம். படத்தில் ராசு சுந்தரம் செய்யும் காமெடி  மட்டும் தான் ஒரே ஆறுதல் . அது கூட Mr . Bean னோட   இந்தியன்  வெர்சன் . இந்த வருஷத்தின் மிக கொடுமையான படம் என்ற தகுதி இதற்க்கு உண்டு. இதை யாரும் மிஞ்ச மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

எங்கேயும் காதல் இருக்குனு எங்களுக்கும் தெரியும்டா வென்று... ! 


2 comments:

  1. //இந்த வருஷத்தின் மிக கொடுமையான படம் என்ற தகுதி இதற்க்கு உண்டு. //

    சர்வ நிச்சயமாக ....

    ReplyDelete
  2. ...αηαη∂@பின்ன என்னங்க ...! சொந்த காசுல சூனியம் வச்ச மாதிரி இல்ல ஆய்போச்சு...! கடுப்பா இருக்குமா இல்லையா ...!

    ReplyDelete

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets