Pages

Tuesday, September 28, 2010

"கஷ்டம்" மர்

மனுஷனுக்கு சோதனை வரலாம் அனால் இப்படி ஒரு சோதனை வரக்கூடாது . அது சரி சனி பகவான் என் தலைமேல் நின்னுட்டு  பரதநாட்டியம் ஆடினால் என்ன பண்ணுறது...! என்ன நடந்ததுனு சொல்லுறேன். மூன்று நாளைக்கு முன் , என் "LIONS DEN" னை சுத்தம் செய்யும்  போது ( அதாகப்பட்டது நான் தங்கி இருக்கும் ரூம்...இன்னும் தெளிவா சொல்ல போன சிங்கத்தோட   குகை...) ரொம்ப நாளா  use பன்னாத"xxxxxxx....."செல் கம்பனியோட ஒரு சிம் கிடைத்தது.


நான் அதை இப்போது உபயோகிப்பது இல்லை . இருந்தாலும் ஆசை யாரை விட்டது. சரி 'மறுக்கா' (நான் கொங்கு மண்டலத்தை செர்ந்தவனாக்கும்....! ) இன்னொரு தடவை ரீ சார்ஜ் பன்னி ஊபயோகிக்கலாம்னு ரீச்சர்க்ஜ் செய்தேன். கிட்ட தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது .கடைக்காரரிடம் விசாரித்து full டாக் டைம் இருக்கிற மாதிரி ரீ சார்ஜ் பண்ண சொன்னேன். நான் போட்டு இருந்த உடை, தோரனைய பார்த்துட்டு  ( அப்போ தான் ஒரு பிறந்த நாள் பார்ட்டிக்கு போயிட்டு திரும்பி இருந்தேன் ) நான் ஒரு 'HI FI' ஆசாமின்னு நினைச்சுட்டார்  போல...350 க்கு ரீ சார்ஜ் பன்னி விட்டுட்டார் .எனக்கு மயக்கமே வந்து விட்டது.

அவரை சொல்லி குற்றம் இல்லை. நான் இருக்கும் இடம் அப்படியாக பட்டது. புனேவில் விமான் நகர் ஏரியா Posh ஏரியா என்று சொல்லப்படும் ஏரியா. வெளி நாட்டு பிகர்கள் நிறைய சுற்றும் இடம். "காபி  டே" கடையே சுமார் ரெண்டு மூணு இருக்கு. ஏகப்பட்ட பார் இருக்கு. ஒரு சமோசா 7 ரூபாய்னா பார்த்துக்கோங்க. இங்க, பழ சரக்கு கடைல ஒரு கிலோ ஆப்பிள் 105 ருபாய்னு  சொல்லுவாங்க. சர்ர்ர்ர் னு கார்ல வந்து ,
" நாலு கிலோ போடுப்பா " னு சொல்லிட்டு ,
அப்படியே 10 ரூபாய்க்கு மூனே மூணு " பாணி பூரி " சாப்ட்டுட்டு போவாங்க.

ஆனா கொஞ்சம் தள்ளி போனா  "மோர் சூப்பர் மார்க்கெட்" ல அதே ஆப்பிள் கிலோ 75 ரூபாய் தான். ஒரு தடவை ஆப்பிள் வாங்கி நொந்து நூலாகி ,வெந்து வெஜ்  பிரியாணி ஆகி, இனி ஆப்பிள் என்ற வார்த்தையே மறந்து போய்டலாம் னு இருக்கேன். சரி விசயத்திற்கு வருகிறேன்., கடைக்காரர் நானும்  அந்த வகையை  சேர்ந்தவர்  என்று நினைத்து விட்டார் போல. நான் எதோ ஒரு 150 ரூபாய்க்கு பண்ணுவார்னு  நெனச்சுட்டேன்.சரி நடப்பது நன்மைக்கே னு வந்துட்டேன் . எப்படியும் புல் டாக் டைம் தானேனு ஒரு ஆறுதல்.

சோதனையே அப்புறமா தான் ஆரம்பிச்சது. ரொம்ப நாள் ஆனதால் ஒரு அழைப்பிற்கு ஒரு ரூபாய் என்ற கணக்கில் என் டாக் டைம் கழிய ஆரம்பித்தது. அருள் குமரா  நீ எந்த காலத்துலடா  இருக்க, ஒரு செகண்டுக்கு ஒரு பைசா னு உலகம் சுத்திட்டு இருக்கு,நீ என்னடானா  இன்னும் பழைய கற்க்காலத்திலேயே   இருகிரியேனு, கஸ்டமர்  ( நெஜமாலுமே "கஷ்டம்" மர் தான் )கால் சென்டர்ல கூப்பிட்டு சொன்னா போதும், என் பிரச்சனைக்கு ஒரு முடிவு வந்தரும் னு கனவு கண்டுட்டு 'கஸ்டமர்' சென்டர் நம்பரை அழைத்தேன். அதுவும்  இல்லாமல்  எத்தனை ரூபாய்க்கு ரீ சார்ஜ் செய்தால் ஒரு பைசா கால் ரேட் வரும் என்று யாருக்கும் தெரியவில்லை.

விதி அங்க தான் விளையாடி விட்டது....!  நான் என்ன நெலமைக்கு ஆளாகி இருப்பேன்னு கீழே உள்ளவற்றை படித்து பார்த்து அறிந்து கொள்ளவும்.முடிந்தால் அந்த கால் சென்டெரில் உள்ளவர்களை கொல்லவும்....( முடிந்த அளவு தமிழாக்கம் கொடுத்து உள்ளேன்...யான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்...இவ் வையகத்தில் நீங்கள் இருந்து ,இந்த கொடுமையை படிக்க நேர்ந்தால் அதுக்கு என்னை குற்றம் சொல்ல வேண்டாம்... Mr . சனி பகவான் உங்களுக்கும் கருணை காட்டி உள்ளார் என அர்த்தம் கொள்க...) 
" நமஸ்கார் "xxxxxx" வடிக்கையளர் சேவை உங்களை வரவேற்கிறது ( 'பரவ இல்லையே நம்மள  கூட வரவேற்கிரங்கலே..!) இதே மொழியை தொடர ஒன்றை அழுத்தவும், ஹிந்தி என்றால் இரண்டை அழுத்தவும், இங்கிலீஷ் என்றால் மூன்றை அழுத்தவும்..."
எனது ஹிந்தி மற்றும் மராத்தி அறிவு எவ்ளோ என்பது உலகு அறிந்த விஷயம் , எனவே மூன்றை அழுத்தினேன்.( ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீகிங் கோர்ஸ் புக்கை மனப்பாடம் பன்னி உள்ளேன் என்ற தைரியம் தான் )
" பாலன்ஸ் தொகையை அறிய ஒன்றை அழுத்தவும், ரீ சராஜ் செய்ய இரண்டை அழுத்தவும், ஹலோ tune பாடலை தேர்வு செய்ய மூன்றை அழுத்தவும், மதிப்பு கூட்ட பட்ட சேவை பற்றி அறிய நான்கை அழுத்தவும், GPRS பற்றி அறிய ஐந்தை அழுத்தவும், இன்றைய ஆப்ஹர்  பற்றி அறிய 6 அழுத்தவும், முந்தைய மெனுவிற்கு செல்ல 7 அழுத்தவும், "
ஒரு எழவும் புரியல எத அழுத்துவது என்று....மறுக்கா முதலில்  இருந்து கேட்டேன் ...

" நமஸ்கார் "xxxxxx" வடிக்கையளர் சேவை உங்களை வரவேற்கிறது........பாலன்ஸ் தொகையை அறிய ஒன்றை அழுத்தவும், ரீ சராஜ் செய்ய இரண்டை அழுத்தவும், ஹலோ tune பாடலை தேர்வு செய்ய மூன்றை அழுத்தவும், மதிப்பு கூட்ட பட்ட சேவை பற்றி அறிய நான்கை அழுத்தவும், GPRS பற்றி அறிய ஐந்தை அழுத்தவும், இன்றைய ஆப்ஹர்  பற்றி அறிய 6 அழுத்தவும், முந்தைய மெனுவிற்கு செல்ல 7 அழுத்தவும், "
சரி என்ன தான் நடக்கும்னு  4 யை அழுத்தினேன் ..
"மதிப்பு கூட்டப்பட்ட சேவைக்கு வரவேற்கிறோம்...(அப்படி என்னத்த கூட்டுனாங்களோ ... )
மேலும் விபரம் அறிய ஒன்றை அழுத்தவும், Missed கால் பற்றிய விபரம் அறிய 2 அழுத்தவும், இன்டர்நெட் சேவை பற்றி அறிய 3 யை அழுத்தவும், அடுத்த மெனுவிற்கு செல்ல 4 யை அழுத்தவும், முந்தைய மெனுவிற்கு செல்ல 8 யை அழுத்தவும் , மெயின் மெனுவிற்கு செல்ல 9 யை அழுத்தவும்."

இது சரி பட்டு வராது... நாம தான் எங்கையோ தப்பு பண்ணுறோம் னு நெனச்சுட்டு மறுக்கா மொதல இருந்து ரொம்ப உன்னிப்பா கவனமா கேட்டேன்... 

" நமஸ்கார் "xxxxxx" வடிக்கையளர் சேவை உங்களை வரவேற்கிறது....பாலன்ஸ் தொகையை அறிய ஒன்றை அழுத்தவும், ரீ சராஜ் செய்ய இரண்டை அழுத்தவும், ஹலோ tune பாடலை தேர்வு செய்ய மூன்றை அழுத்தவும், மதிப்பு கூட்ட பட்ட சேவை பற்றி அறிய நான்கை அழுத்தவும், GPRS பற்றி அறிய ஐந்தை அழுத்தவும், இன்றைய ஆப்ஹர்  பற்றி அறிய 6 அழுத்தவும், முந்தைய மெனுவிற்கு செல்ல 7 அழுத்தவும், "

இம்முறை ரொம்ப உசாரா  5 யை அழுத்தினேன் 

" xxxxxx' GPRS சேவை உங்களை வரவேற்கிறது ..GPRS சேவையை activate செய்ய ஒன்றை அழுத்தவும், deaactivate செய்ய இரண்டை அழுத்தவும், 10 நாள் ப்ளானை  தேர்வு செய்ய 3 யை அழுத்தவும், 500 MB ப்ளானை தேர்வு செய்ய 4 யை  அழுத்தவும்., அன்லிமிடெட் ப்ளானை தேர்வு செய்ய 5 யை  அழுத்தவும், முந்தைய மெனுவிற்கு செல்ல 6 யை அழுத்தவும், மெயின் மெனுவிற்கு செல்ல 9 யை அழுத்தவும்..."

அட பாவமே இப்போ என்ன பண்ணுறது ...மறுக்கா முதலில்  இருந்து கேட்டேன்...

" நமஸ்கார் "xxxxxx" வடிக்கையளர் சேவை உங்களை வரவேற்கிறது........"

இம்முறை அது சொன்ன எந்த எண்ணையும் அழுத்தாமல் குருட்டாம் போக்கில் 8 யை   அழுத்தினேன்..

'மன்னிக்கவும் நீங்கள் தேர்வு செய்த என் தவறானது... பாலன்ஸ் தொகையை அறிய ஒன்றை அழுத்தவும், ரீ சராஜ் செய்ய இரண்டை அழுத்தவும், ஹலோ tune பாடலை தேர்வு செய்ய...." 

அய்யோ ஆண்டவா இந்த கஸ்டமர் சென்டர் ஆள்காரங்க கிட்ட எப்படி தான் தொடர்பு கொள்வது ...மறுபடியும் முதலில்  இருந்து கேட்டேன் ...

 " நமஸ்கார் "xxxxxx" வடிக்கையளர் சேவை உங்களை வரவேற்கிறது........"
இந்த தடவை 5 யை  அழுத்தினேன்.. என்ன சொன்னது என்பதில் அக்கரை காட்ட வில்லை...

மறுபடியும் 5 யை அழுத்தினேன்...

" அன்லிமிடெட் இன்டர்நெட் சேவையை activate  செய்ய ஒன்றை அழுத்தவும், முந்தைய மெனுவிற்கு செல்ல 8 யை அழுத்தவும், மெயின் மெனுவிற்கு செல்ல * யை அழுத்தவும்..."

கோவத்தில் எதை அமுக்குகிறேன்னு பார்க்காமல் ஒன்றை அழுத்திவிட்டேன். 

" அன்லிமிடெட் இன்டர்நெட் சேவையை activate செய்ததிற்கு மிக்க நன்றி. இந்த சேவையை பெற உங்கள் அக்கௌன்ட்ல்  இருந்து ரூபாய் 98 மட்டும் கழிக்கப்படும் . தயவு செய்து நாங்கள் அனுப்பும் செட்டிங்கை save செய்து விடுங்கள். முந்தைய  மெனுவிற்கு செல்ல 8 யை அழுத்தவும்..மெயின் மெனுவிற்கு செல்ல 9 யை அழுத்தவும்.."

(அட சே ! என்ன முட்டாள் தனம் பண்ணிட்டேன்... வட போச்சே... 98 ரூபாய் அநியாயமாய் போச்சே...)"

மறுபடியும் முதலில் இருந்து கேட்டேன்....

"நமஸ்கார் "xxxxxx" வடிக்கையளர் சேவை உங்களை வரவேற்கிறது....பாலன்ஸ் தொகையை அறிய ஒன்றை அழுத்தவும், ரீ சராஜ் செய்ய இரண்டை அழுத்தவும், ஹலோ tune பாடலை தேர்வு செய்ய மூன்றை அழுத்தவும், மதிப்பு கூட்ட பட்ட சேவை பற்றி அறிய நான்கை அழுத்தவும், GPRS பற்றி அறிய ஐந்தை அழுத்தவும், இன்றைய ஆப்ஹர்  பற்றி அறிய 6 அழுத்தவும், முந்தைய மெனுவிற்கு செல்ல 7 அழுத்தவும், "

இம்முறை வருவது வரட்டும் னு 3 யை  அழுத்தினேன் ...

"ஹலோ tune சேவையை பெற ஒன்றை அழுத்தவும், மெயின் மெனுவிற்கு செல்ல 9 யை அழுத்தவும்..."
so , நோ option , ஒன்றை அழுத்தினேன். 

"ஹலோ tune சேவையை activate செய்ததிற்கு வாழ்த்துக்கள் , இதற்க்கு கட்டணமாக வெறும் 30 ரூபாய் மட்டும் ஒரு மாதத்திற்கு கழிக்க படும்...முந்தைய மெனுவிற்கு செல்ல 9 யை அழுத்தவும், எங்கள் வடிக்கையளர் மையத்தை தொடர்பு  கொள்ள * யை அழுத்தவும்...."

கடைசியாக நான் கஸ்டமர் கேர் சென்டர் ஆட்களுடன் பேச முடியும் என்ற நம்பிக்கை வந்தது....எனவே * யை அழுத்தினேன்...

"நீங்கள் எங்களுக்கு மிகவும் முக்கியமான நபர்...லைன்லேயே காத்திருக்கவும்..எங்கள் வடிக்கையளர் அதிகாரி உங்களை தொடர்பு கொள்வார். உங்கள் உரையாடல்கள் பதிவு செய்ய படுகிறது.."

ஏதோதோ பாட்டு கேட்டது... ரொம்ப உன்னிப்பாக கவனித்து கொண்டு இருந்தேன் யாராவது அட்டென்ட் பண்ணுவார்கள் என்று.... சரியாக இரண்டு நிமிடங்கள் கழித்து செல் தொடர்பு முறிந்தது...


மறுபடியும் முதலில் இருந்து........
"நமஸ்கார் "xxxxxx" வடிக்கையளர் சேவை உங்களை வரவேற்கிறது...."

< சரியாக 58 நிமிடங்கள் நான் செலவு செய்து ,கஸ்டமர் கேர் ஆட்களுடன் பேசி தேவையான விரங்களை நான் பெற்றேன்... இனி "xxxxxxx" செல் சிம்மை வாழ் நாள் முழுவதும் தொடுவது இல்லை என்ற முடிவிற்கு வந்து உள்ளேன்...>

1 comment:

  1. ha ha what a humorous short story. iduku than oru number na atha mattum use pannanum , sim oda malrum malarum ninaivugaluku kodutha vilai 350. ithaum post pannunga.
    loganand

    ReplyDelete

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets