Pages

Friday, October 1, 2010

என்திரன்

இனைய தளங்களில்  இருந்தும், மும்பாயில் இருந்து வெளி யாகும்  தமிழ் செய்தி தாள்களில் இருந்தும் என்திரன் படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு இருபது  தெரிய வருகிறது.Face Book, Twiteer, மற்றும், இன்ன பிற தளங்களில்  இருந்தும் தமிழ் நாடு மிக பர பரப்பாக இருக்கிறது என்பது தெரிய வருகிறது. அனால் இங்கே புனேயில் அப்படி ஒன்றும் பெரிய பர பரப்பு இல்லை. ஆன் லைன் மூலமாக டிக்கெட் புக் பன்னி ( Rs 260 /= ஒன்லி...! ரொம்ப சீப்பா இருக்கு இல்ல...! )  படம் பார்த்தோம். கொஞ்சம் கூட்டம்  தான்.


படம் பார்த்தல் மட்டும் போதுமா, அதை பற்றி ஒரு வரி கூட விமர்சனம் எழுதாமல் இருந்தால் , இறந்த  பிறகு கொதிக்கும் எண்ணெயில் போடுவார்களாம் . "புருடா" புராணத்தில் இருக்கு. எதுக்கு வம்பு னு தான் இந்த "திரை" விமர்சனம் ( நன்றி: ..un டிவி).
விமர்ச்சனதிக்கு முன் ஒரு விஷயம், இங்கே புனேயில் படம் போடும் முன் " ஜன க ந மன.." தேசிய கீதம் போடுவார்கள். எல்லோரும்  எழுத்து நிற்க வேண்டும். இந்த நல்ல விசயத்தை  ஏன்  தமிழ் நாட்டிலும் பின் பற்ற கூடாது. நமது தேசிய கோடி அவ்ளோ பெரிய ஸ்க்ரீனில் முழுவதும் பார்க்கிறதை பார்க்கும் போது கொஞ்சம் தேச பக்தி வந்தது. 

இனி விமர்சனம்:

 ஷங்கர் படமா, கலாநிதிமாறன் படமா, இல்ல ரஜினி படமானு கேட்ட சந்தேகமே வேண்டாம் இது முழுக்க முழுக்க ரஜினி படம் தான். ரஜினி இவ்ளோ இளமையை சிவாஜில் கூட காட்ட வில்லை என்பேன். படம் ஆரம்பிக்கும் போது சன் பிச்சர்ஸ்  , மற்றும் கலாநிதி மாறன் கிராபிக்ஸ் படு அமர்க்களமாக அமைந்து எங்கே ரஜினின் பெயர் வரும்போது கிராபிக்ஸ் சொதப்பி விடுமோனு சந்தேகம் இருந்தது. ஆனால் வழக்கமாக வரும் சூப்பர் ஸ்டார் சீனை   விட இந்த கிராபிக்ஸ் அம்சமாக உள்ளது. இனி ரஜினி படங்களுக்கு இந்த கிராபிக்ஸ்யை  உபயோகிக்கலாம். 

ரஜினி ரொம்ப கேஷூவலாக இந்த படத்தில் நடித்து இருக்கிறார். முக்கியமாக ரஜினியை அறிமுகம் படுத்தும் இடத்தில  வழக்கமாக வரும்  டைட்டில் சாங், or அறிவுரை சாங் எதுவும் இல்லாதது மனசுக்கு ஆறுதலை தருகிறது. ரஜினி அறிமுகம் ஆகும் கட்சியில்  அநியாயத்திற்கு எளிமை. சங்கரை பாராட்டனும் . Unnecessary ஓவர் பில்ட் அப் எதுவும் இல்லாமல் பின்புறத்தில் இருந்து முன்புறம் அறிமுகம் ஆகிறார். லேட்டஸ்ட் Trend தாடி, கிருதா வைத்து கொண்டு கலகுகிறார்.. ( ஹலோ, சூர்யா, கார்த்தி, அஜீத், விஜய்... உங்க புண்ணியம் ரஜினி உங்கள் கால கட்டத்தில் இல்லை. இல்லன உங்களுக்கு போட்டியே ரஜினி தான். இப்போ மட்டும் என்னவாம்...) 

ஐஸ்வர்யாராயை மையமாக வைத்து தான் கதை சுற்றி வருகிறது. அனால் ஐஸ்வர்யாவை ஒரு ஸ்டார் வால்யுக்கு  மட்டும் தான் யூஸ்  பன்னி இருகிறார்கள். ஐஸ்வர்யா அழகோ அழகு.... ரஜினி கொடுத்து வைத்தவர் முத்தத்திற்கு மேல் முத்தம் வாங்குகிறார். ( காசும் வாங்கிட்டு முத்தமும் இலவசமாய் வாங்கிட்டு போகிறார், இந்த வயசிலயும் என் வைத்தெரிச்சல்லை வாங்கி காட்டி கொள்கிற ஒரே நடிகர் ரஜினியாக தான் இருக்கும்.. ஹும்ம் அடுத்த ஜென்மத்திலாவது ஒன்னா ரஜினியா, இல்லைனா அபிசேக் பச்சான  பொறந்து ஐஸ் கிட்ட ஒரு முத்தம் வாங்கணும் பா..).  ஐஸ் அழகாக நடனம் ஆடுகிறார்...அழகாக சிரிக்கிறார்...ரஜினியை காதலிக்கிறார். மற்றபடி வேறு விசேசம் எதுவும் இல்லை. ரஜினி சண்டை காட்சிகளிலும் , நடன காட்சிகளிலும் சும்மா தூள் பறக்கிறார். 

படத்தின் முதல் பாதி காமெடியாக போகிறது. இரண்டாம் பதில் விறு விருப்பாக ஆக்சன் . தமிழுக்கு ஹிந்தியில்  இருந்து ஒரு புதிய வில்லன். ரகுவரனை நினைவூட்டுகிறார். சண்டை காட்சில்  அந்நியன் ஜாடை அடிக்கிறது.( ஹாலி வூட்  சினிமா அதிகம் பார்க்காத தமிழ் மக்களுக்கு வேண்டும்மானால் சண்டை மிக சிறப்பாக தெரியும், ஆனால் என்னை போன்ற ஹாலி வூட் சினிமா அதிகம் பார்க்கும் மக்களுக்கு சண்டை காட்சி சாதரணமாக தான் தெரியும்.) ஆனால் ஒரு விசயத்தை ஒத்துக்கொள்ள வேண்டும் , எந்த சண்டை காட்சியும் சும்மா ஒப்புக்கு சப்பாக எடுக்க வில்லை. நிறைய உழைத்து இருக்கிறார்கள்.


"என் கிட்டே இல்லாதது அவனுங்க கிட்டே என்ன இருக்கு?" " Reproduction  & Mensuration க்கு என்ன சனா பண்ணுவ  ?" தண்ணிய போட்டுட்டு ஒட்டுரியனு கேட்டதுக்கு, " இல்ல பெட்ரோல் போட்டுட்டு ஓட்டுறேன்"  போன்ற கால கலப்புக்கு பஞ்சம் இல்லை. ஐஸை கடத்தும் போது எப்படி உயரோடு வந்த என்ற கேள்விக்கு " Up gradation Version 2.0"..போன்ற பஞ்ச் வசனமும் சூப்பர். சுஜாதா வசனம் . கிராபிக்ஸ் சும்மா பின்னி பெடலெடுத்து விட்டார்கள். ஹாலி வூட் ரேஞ்சுக்கு இருக்கிறது. ரஜினி பல துப்பாகிகளை கொண்டு சுடும் கிராபிக்ஸ் " The Mask" ல் வரும் க்ராபிக்ஸ்சை ஞாபகம் படுத்தினாலும் , நன்றாக உள்ளது. மண்ணிற்குள் துளை போட்டு கொண்டு போகும் ஸீன் " Matrix Reloaded " க்ராபிக்ஸ்சை நினைவூட்டுகிறது. " D-war" பட க்ராபிக்ஸ்சும் ஞாபகம் வருகிறது. 

க்ளைமேக்ஸ்ல். இன்னும் கொஞ்சம் டெக்கினிக்கல் விஷயத்தை புகுத்தி இருக்கலாம். வில்லன் ரஜினி அப்படியே மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியன் தான். ஆனாலும் உறுத்த வில்லை. ரஜினிக்குள் இப்படி ஒரு வில்லன் கதாபாத்திரத்தை "........."( Fill in the Blanks... சரியான பதில் அளிபவர்களுக்கு Rs 100/= ...)படத்திற்கு அப்புறம் இப்போது தான் பார்கிறேன். . படத்தின் இசை ARR . பின்னணி இசையியல்  இருந்து ,பாடல் வரை கலக்கோ கலக்கு என்று கலக்கி உள்ளார். "என்ன்ன்ன்திரா  ..." " கிளிமஞ்சதரோ" போன்ற பாடல்கள் புரிகிறது. இளைய தலைமுறைக்கு ஏற்ற  இசை. 


படம் முடிந்தவுடான் எழுத்து போடும் வரை இருந்து யார் யார் எந்த எந்த  துறையில் பனி யாற்றி உள்ளார்கள் என்று  பார்த்துவிட்டு தான் கூட்டம் நர்ந்தது.நிறைய ஜப்பான் தொழில்  நுட்ப கலஞ்சர்கள் கிராபிக்ஸில் பணியாற்றி உள்ளார்கள். தமிழ் நாட்டு கிராபிக்ஸ் கம்பெனி பெயர் வரும் போது ஒரே கை தட்டல் தான். பெயர் போடும் வரை இருந்து பார்த்து, கை தட்டி போகும் மக்களை இந்த படத்தில் பார்க்கிறேன். சங்கருக்கு கிடைத்த  மரியாதை, கிராபிக்ஸ்க்கு கிடைத்த வெற்றி  இது. 3D இல் எடுத்து இருந்தா  இன்னும் சூப்பர்ரா  இருந்து இருக்கும்.
( ரஜினி மகள் எடுத்துட்டு இருந்த அனிமேஷன்  படம் என்னப்பா ஆச்சு...?)
உடைகள், location , man power, செட்டிங்க்ஸ் என ரொம்ப உழைத்து இருகிறார்கள். உழைப்பின் பலன் நன்கு தெரிகிறது. படம் வசூலிலும் வெற்றி பெற  வாழ்த்துக்கள். திருட்டு DVD வராமல் இருக்க வேண்டும். தயவு செய்து இப்படத்தை தியேட்டரில் பார்க்கவும்.


இனி குறைகள்:
1 . ரோபோ ரஜினி தன் தலையை எடுத்து கட்டும் போது " Flat cable or Bus bar cable " என அழைக்கப்படும் wire தெரிகிறது. Artificial Intelligence ல் வயர் எல்லாம் வராது சாமியோ. "Fiber Optics" வந்து ரொம்ப நாள் ஆச்சு .
2 ரஜினி ஒரு " Scientist" டா காட்ட அவர் ரோபோட்டின் ஒரு நட்ட மட்டும் டைட் பண்ணுகிறார். இன்னும் எதாவது 'gimmicks' வேலை பன்னி இருக்கலாம்.
3  ரோபோ ரஜினிக்கு உணர்ச்சிகளை ஊட்ட , சுவர், தரை, எல்லாம் ஏதோதோ எழுதி காட்டுகிறார். அதற்க்கு பதில் உணர்சிகளை உணர எதாவது சென்சர் மாதிரி அய்டம் பிட் பண்ணுற மாதிரி காட்டி இருக்கலாம்.
4 .  அத்தன போலீஸ் காரங்க எப்படி வாரங்க, செத்துபோரங்க , ஆனா தமிழ் நாட்டுல ஒன்னுமே நடக்கல.
5 . ரோபோ ரஜினிய Defence ஆளுங்க  கிட்ட அறிமுகம் படுத்தும் காட்சி சுத்த சப்  ஸ்டாண்டர்ட். எந்த Defence உயர் அதிகாரிகளும் இப்படி ஓபன் space ல உட்காந்துட்டு Demonstration பாக்க மாட்டாங்க. ( Associate directors  ...Please Note)

No comments:

Post a Comment

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets