Pages

Thursday, September 16, 2010

தமிழ் பேர்

இன்று எனது நண்பர் வீட்டுக்கு போய் இருந்தேன் தேநீர் அருந்த கூப்பிட்டு இருந்தார். தமிழ் நண்பர் தான், அவருடைய பெண் குழந்தை என்னிடம் தயங்கி தயங்கி வந்தது.
" ஹாய் உன் பேர் என்ன ?" நான்.
" பரிக்ஷ "   என்றது
" யார் இந்த திரிஷாவோட தங்கச்சியா?"  என்று கேட்டேன். அதுவும்
"ஆமாம்" என்றது..
"ஒ அப்படியா? " அர்த்தம் புரியாமல் நான் அப்பாவை பார்த்தேன். அவரோ சிரித்தவாறே சொன்னார்
" ஒன்னும்  இல்லை சும்மா ஒரு ஸ்டைல்க்கு தான்..." என்றார்..!

என் உறவினர் ஒருவரின் பெண் குழந்தை  பெயர் கூட  " கனிஷ்மா".
நான் பள்ளிக்கூடம் படிக்கும் போது இப்படி எல்லாம் பேர் இருந்ததாக ஞாபகம் இல்லை.எனக்கு தெரிந்து "நதியா" ( ஆமாம் குமரன் ச/o மகாலக்சுமி நதியவே தான் ...) என்ற பெயர் தான் புதிய மாடர்ன் பெயர். மற்றபடி " அமுதா" " குமுத வள்ளி" " பூங்குழலி "" வடிவு கரசி " " தமிழ் அரசி" "பூங்கொடி" " ஆண்டாள்"  இப்படி தான் பார்த்து இருக்கிறேன்.


இன்னும் கொஞ்ச நாட்களில் நல்ல தமிழ் பெயர் வாய்த்த பெண் குழந்தைகளை பார்க்க முடியாமல் போய்விடும் என்று  எண்ணுகிறேன். என் தங்கை பெயர் கூட ...நல்லா மூச்ச இழுத்து பிடிச்சது சொலுங்க " தர்மசம்வர்த்தினி ".... எவ்ளோ நல்ல பெயர்.

பெண் குழந்தை   மட்டும் அல்ல, ஆண் குழந்தைக்கும்  இதே கதி தான்..." ரிச்வந்த்" "எஸ்வந்த்" " யுவ கார்த்தி " ....எதாவது நாலு வார்த்தை  பின்னாடி " inth " சேர்த்துவிட்டால் புதிய லேட்டஸ்ட் trend பெயர் கிடைத்து விடும்.என் பையன் பெயர் கூட நாங்கள் " ஹரீஷ்" என்று தான் வைத்து இருக்கிறோம்.
ஏன்  இந்த பெயர் மாற்றம்...? காலத்திற்கு ஏற்றவாறு மறுக்கிறோம் என்று நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம். இங்கு பெயர் மட்டுமே மாற்றப்படுகிறது.நாம் மாறுவது இல்லை. எனது நண்பர் வேல்ராஜ் பொன்னியின் செல்வன் கதா பாத்திரம்  வந்திய தேவனின் பெயரை சுருக்கி  வந்தியன்  என்று அடை மொழயில் அழைத்து கொள்வார்.

இந்த நிலைமை இப்படியே போனால் ஒரு கால கட்டத்தில் பெயர் வைக்க வார்த்தைகள் கிடைக்காமல் போய் விடும். பின்னர் சுஜாதாவின் மீண்டும் ஜீனோ நாவலை போல் பெயர் வைக்க தனி சட்டம் வந்து  வெறும் இரண்டே இரண்டு வார்த்தைகளை பெயராக கொள்வோம். " Woods" " Stone" " walls" " Bridge" இப்படி இங்கிலீஷ்காரன் தான் பேர் வைக்க வார்த்தை இல்லாமல் அலைகிறான்... நமக்கு என்னப்பா குறைச்சல் ...நல்ல பேரா வைக்க வேண்டியது தானே...?ஏன் உன் பேர மாத்திக்க வேண்டியதுதானேனு நீங்க கேக்கிறது எனக்கு கேக்குது..? 

ஆனா பாருங்க இந்த அருள் குமார் அப்படிங்கிற பெயர் ரொம்ப அழகான பெயர்னு கூகுல்ல ஒரு research சொல்லுது.இந்த பெயர் பற்றாகுறை பற்றி எனது நண்பர் திரு ராம் குமாரிடம் விவாதித்தேன். அவர் பாரதி கவிதை எல்லாம் படிப்பவர். அவரும்  மிக வருத்தப்பட்டார். பேர் தான் மாற்ற முடியாது ஆனால், மின் அஞ்சல் முகவரியை மாற்ற முடியும்  என்று மாற்றிய  மின் அஞ்சலில்  எனக்கு ஒரு mail அனுப்பினர் ...அவருடைய  மின் அஞ்சல் முகவரியை  பார்த்து பொறமை  பட்டேன்  . "ரம்பா  ரதி " என்று இருந்தது.
" அடேய் நண்பா உனக்கு லொள்ளு அதிகம் தான் ...ரம்பா ரதி னு பெண் பேரா பார்த்து செலக்ட் பண்ணி இருக்கே " னு செல்லினேன். ( அதங்க செல் போனில் பேசினேன் )
" போடா நாய், உன் புத்தி உன்னை விட்டு போகிறது , நான்   என் பெயரையும்  பாரதியும் சேர்த்து ராம் பாரதி னு ( ram barathi) போட்டேன்" னு சொன்னான். நல்ல பையன்....
அவன் சொன்ன மாதிரி நான் தான்  ராம்பாரதிக்கும்,(rambarathi)  ரம்பா  ரதிக்கும் ,( ramba rathi )அர்த்தம்  புரியாமல் போய்டேன் ....என்ன கொடும சார் இது...  

1 comment:

  1. what a fantastic ramba rathi comedy sorry ram barathi.....

    ReplyDelete

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets