Pages

Wednesday, November 30, 2011

புகுஷிமோவில் நடந்தது என்ன ...?

புகுஷிமோவில் அணு உலை வெடித்ததா...? கதிரீயக்கம் வெளியேறியதா ...? புகுஷிமோவில் உண்மையில் ... நடந்தது என்ன....? இப்படி முடி இல்லாத சொட்ட மண்டைய நொம்ப நாளா தேச்சுட்டே இருந்தேன். IAEC மற்றும் ஜப்பானின் புகுஷிமோ அணு உலை வலை தளம் , இன்னும் பல வலை தளங்களை பார்க்கும் போது சில விஷயம் புரிஞ்சது .அதை தொகுத்து உள்ளேன்.முழு விவரம் படிக்க இந்த விக்கிபீடியாவை சொடுக்கவும் .

  • நில நடுக்கம் ஏற்படும் போது அணு உலை தானாகவே தன்னுடைய செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளும் வகையில் தான் அமைக்கப்பட்டு இருக்கும். புகுஷிமோவிலும் நில நடுக்கம் ஏற்பட்ட போது அணு உலை தானாகவே தன்னுடைய செயல்பாட்டை நிறுத்திக் கொண்டது .
  • நில நடுக்கம் ஏற்பட்ட சில நொடிகளில் "கண்ட்ரோல் ராடுகள்" சொருகப்பட்டு அணு உலை "சங்கிலி தொடர் வினை" உடனடியாக நிறுத்தப்பட்டது.
  • செயின் ரியாக்சன் நின்றாலும் ," டீகே ஹீட் " வந்து கொண்டு தான் இருக்கும். இந்த டீகே ஹீட் ரொம்ப முக்கியமானது. உதாரணமாக ஒரு அணு உலை 3000 MW மின்சாரம் உற்பத்தி செய்கிறது என்றால் 210 MW மின் உற்பத்தி செய்யும் அளவுக்கு இருக்கும் இந்த டீகே ஹீட் . (சுமார் 7 % ). இந்த வெப்பமானது அணு உலை நிறுத்திய முதல் நாளில் 30 MW மின் உற்பத்தி செய்யும் (சுமார் 1 % )அளவுக்கு குறைந்து விடும். டீகே ஹீட் முழுவதும் குறைய நிறைய நாட்க்கள் பிடிக்கும்.இந்த வெப்பத்தை தணிக்க வேண்டும் . இல்லை என்றால் அணு உலை நடுப்பாகம் உருகி விடும் அபாயம் உள்ளது.
  • அணு உலை செயல் பாட்டை நிறுத்திக் கொண்டதால் அங்கு மின்சாரம் கிடையாது . எனவே டீசல் ஜெனரேட்டரை கொண்டு அணு உலை வெப்பம் தணிக்க நடவடிக்கை ஏற்பட்டது. இது வழக்கமாக இல்லை என்றாலும் ,இந்த மாதிரி பேரிடர் நேரங்களில் செய்யப்படும் முறைகளில் ஒன்று தான் .
  • துருதிஷ்டமாக நில நடுக்கத்தின் காரணமாக சுனாமி அலை வந்து அந்த டீசல் ஜெனரேட்டர்களின் செயல் பாட்டை முடக்கியது .
  • உடனடியாக அணு உலை பேக் அப் பேட்டரிகளின் உதவியுடன் குளிர்விக்க பட்டது. இது எல்லாம் தானியங்கி முறையில் நடந்தது . இந்த பேட்டரிகளின் மூலம் சுமார் 8 மணி நேரத்திர்க்கு அணு உலையை குளிர்விக்க முடியும். புகுஷிமோவில் 8 மணி நேரம் பேட்டரியால் பேக் அப் செய்யப்பட்டது.
  • இந்த பேக் அப் பேட்டரியும் தீர்ந்த உடன் , அங்கு இருந்த ஆப்ரேட்டர்கள் எமர்ஜென்ஸி கால நடவடிக்கைகளை செயல் படுத்த தொடங்கினர் . அங்கு இருக்கும் ஆப்ரேட்டர்களும் இந்த மாதிரி கால கட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்று நான்கு ட்ரைனிங் செய்யப்பட்டவர்கள் . ஆப்பரேட்டர்கள் என்றால் ஏதோ லேத் பட்டறை ஆபரேட்டர்கள் அல்ல . எல்லோரும் பொறியியல் வல்லுனர்கள்.
  • டீசல் ஜெனரேட்டரும் இயங்க வில்லை , பேட்டரி பேக் அப்பும் முடிந்து போன நிலை .ஆனாலும் அணு உலையீன் வெப்பத்தை தணிக்க வேண்டும் . அணு உலையீன் வெப்பமானது பல வழிகளில் தனிக்கப்படுகிறது. ஒன்று டீகே ஹீட்டை தனிப்பது , REACTOR CORE ISOLATING COOLING, STAND BY LIQUID COOLING SYATEM, EMERGENCY CORE COOLING SYSTEM, DECAY HEAT REMOVEL , REACTOR WATER CLEAN UP SYATEM PROCEDURE ..ETC. என்று பல முறைகளில் அணு உலை வெப்பம் தணிக்க எமர்ஜென்ஸி நடவடிக்கை செய்யப்பட்டது. இதன் மூலம் உலையீன் ஃப்யூல் ராட் வெப்பதை 1200 டிகிரி செல்ஷியஸ்க்கும் குறைவான வெப்ப நிலையில் வைக்க வேண்டும் .
  • அணு உலையீன் வெப்பமும் , வெப்பத்தை வெளியேற்றிய (குளிர்வித்த ) விகிதம் குறைந்து கொண்டே வந்தது. அதனால் அணு உலையில் அழுத்தம் உயர்ந்தது. இந்த அழுத்தத்தை கட்டுபாட்டுக்குள் வைக்க வேண்டும். எனவே அழுத்தத்தை குறைக்க வால்வின் வழியாக கேஸ் ஆனது வெளியேற்றப்பட்டது . இந்த கேஸ்ஸில் சிறிது கதிரியக்க பொருள்களும் அடங்கி இருந்தது. ஆனால் அவை அவ்வளவு ஆபத்தானவை அல்ல.
  • இதற்க்கு நடுவில் வெளியில் இருந்து டீசல் ஜெனரேட்டர்கள் மூலம் மின்சாரம் பெறப்பட்டு , அணு உலையில் வெப்பத்தை தணிக்கும் முயற்சி நடந்தது .
  • குளிர்விக்க செலுத்திய தண்ணீரை விட , அணு உலையில் அதிக தண்ணீரை ஆவியாக்கியது ( பார்க்க அணு உலை வேலை செய்யும் விதம் ) . எனவே ஃப்யூல் ராட் ஆனது 1200 டிகிரி செல்ஷியஸ்க்கும் மேல் சூடானது. இந்த ஃப்யூல் ராட் ஆனது எப்பவும் தண்ணீரில் மூழ்கி இருக்க வேண்டும் . அதிக தண்ணீர் ஆவி ஆனதால் ஃப்யூல் ராடின் வெப்பம் அதிகரித்து ,அதன் வெளிப்பகுதியில்  உள்ள zircaloy என்ற பொருள் தண்ணீருடன் வினை புரிய தொடங்கியது . இந்த வேதி வினையால் ஹைட்ரஜன் வாயு உருவானது . இது வெளியேற்றும் கேஸ்ஸுடன் கலந்து வெளியேற்றப்பட்டது.
  • ஹைட்ரஜன் வாயு ஆனது மிகவும் தீ பற்ற கூடியது . அது போக காற்றுடன் உடனடியாக வினை புரியும் தன்மை கொண்டது. எனவே அணு உலையின் அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க இந்த ஹைட்ரஜன் வாய்வும் , மற்ற வாயுக்களுடன் சேர்த்து வால்வின் வழியாக வெளியேற்றப்பட்டது. ஒரு கட்டத்தில் ஹைட்ரஜன் வாயுவின் அளவு அதிகம் ஆனதால் , வாயு வெளியேற்றும் போது காற்றில் வினை புரிந்து வெடித்தது. எனவே அணு உலையின் வெளி பகுதி சேதம் அடைந்தது .
( ரஷ்யாவில் செர்நோஃபில் அணு உலை... இதே போன்ற ஹைட்ரஜன் வெடி விபத்து நடந்த்து . ஆனால் செர்நோஃபிளில் Secondary Containment என்ற இரண்டாவது அடுக்கு இல்லை . எனவே ஹைட்ரஜன் வாயுவுடன் ,நிறைய கதிரியக்க பொருள்களும் காற்றில் கலந்து சேதாரத்தை விளைவித்தது . அமெரிக்காவின் த்ரீ மைல் ஐலேன்டில் CORE MELT DOWN ஏற்பட்டது )
ஒரு விஷயத்தை மனதில் வைக்க வேண்டும் . இது விபத்து அல்ல. ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றினால் இப்படி வெடிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிந்தே தான் வெளியேற்றினார்கள் . இந்த வெடிப்பாள் அணு உலைக்கு எந்த விதமான ஆபத்தும் கிடையாது. அணு உலை,... வெளி பகுதி ஆன (secondary containment )-இரண்டாவது அடுக்கின் ஒரு பகுதி மட்டும் சேதாரம் ஆனது. ( பார்க்க படம் )


  • ஹைட்ரஜன் வாயு எவ்வளவு உருவானது என்பது ஆப்ரேட்டர்களால் அளவிட முடிய வில்லை .ஏன் எனில் ஃப்யூல் ராடின் வெப்பம் எவ்வளவு , அது எவ்வளவு தண்ணீரில் உள்ளது , எவ்வளவு zircolay வினை புரிந்தது என்பது ஆப்ரேட்டர்களால் அளவிட முடிய வில்லை.
  • ஹைட்ரஜன் வாயு உருவானதில் இருந்து ஒரு விஷயம் உறுதியாகி போனது ,அது அணு உலையின் வெப்பம் குளிர்விப்பதை விட அதிகமாக உள்ளது என்பதே. அதுவும் இல்லாமல் கை வசம் உள்ள தண்ணீரின் அளவும் குறைந்து கொண்டே வந்தது. உலையை குளிர்விக்க வேண்டும் எனவே கடல் நீரை போரிக் அமிலத்துடன் கலந்து அணு உலைக்குள் செலுத்த எஞ்சினியர்ஸ் முடிவு செய்தனர் . அதன் படி செய்தனர்.
  • கடல் நீரானது ஃப்யூல் ராடின் வெப்பத்தை தனித்தது . போரிக் அமிலம் நியூட்ரானை உள் வாங்கி மேலும் சங்கிலி தொடர் வினை நடக்காமல் தடுத்தது. கடல் நீரானது சுத்திகரித்து தான் செலுத்த வேண்டும் . மேலும் கடல் நீரின் அரிப்பால் அணு உலை சேதாரம் ஆக கூடும் . மீண்டும் அணு உலை உபயோக பட முடியாமல் போய் விடும் சாத்திய கூறு உண்டு.ஆனாலும் அணு உலையின் வெப்பத்தை தணிக்க வேறு வழி இல்லாமல் போனது புகுஷிமோவில்.  

2 comments:

  1. its so informative about nuclear plant but our people does't know about this fact .
    i have one doubt, can we able to transfer this hydrogen gas by tunnel,coz nuclear plant near sea we can directly transfer this gas in to sea water by avoiding reaction in atmosphere directly ,when the long tunnel under the sea and exit the gas ,it liberates over the sea by this we can avoid exploding of hydrogen near to the nuclear plant

    ReplyDelete
  2. @ லோகானந் : இல்லை அதற்கு அவசியம் இல்லை . ஹைட்ரஜென் வாயு சாதாரணமாக வருவது இல்லை. அது Zircolay வுடன் வினை புரிந்தவுடன் தான் வரும் . ஜிர்கோலே தண்ணீருடன் வினைபுரியாதமாதிரி insulated செய்யப்பட்டு இருக்கும். புகிஷிமோவில் இந்த ஜிர்கோலே உருகிப்போனது . இது மிக அரிதான ஒரு நிகழ்வு ,இதற்காக டனல் எல்லாம் செய்ய தேவை இல்லை என்பது என் கணிப்பு.

    ReplyDelete

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets