Pages

Thursday, November 10, 2011

Pressurized water reactor -அணு உலை வேலை செய்யும் விதம்


Pressurized Water Reactor-மாதிரி படம்
Pressurized water reactor -அணு உலை வேலை செய்யும் விதம்.  நன்றி : விக்கிபீடியா ( Wikipedia )
பக்கத்தில் இருக்கிற படம் மாதிரிதான் ஒரு PWR அணு உலை வேலை செய்யும்  . அணுக்கரு வினையின் காரணமாக மிக மிக அதிக அளவில் (1000 டிகிரிக்கும் மேல் )  சூடு வெளிப்படும் . இங்கே படத்தில் சிகப்பு கலரில் காட்டப்பட்டு இருப்பதை போன்று அந்த சூட்டை தண்ணீர் கொண்டு குளிர்விப்பார்கள் . இந்த தண்ணீர் ஒரு குழாயின் மூலமாக சுழன்று கொண்டே இருக்கும்.  இங்க ஒரு கேள்வி வரும் 1000 டிகிரிக்கு மேலேனா நீர் ஆவி ஆகிவிடாதா ? . ஆகாது ஏன்னா அது மிகவும் அழுத்தத்துடன் வைக்கப்பட்டு இருக்கும் , ஆனால் அதன் சூடு சுமார் 500 டிகிரிக்கும் அதிகமாய் இருக்கும்.இப்படி சூடு படுத்தப்பட்ட நீர் நீராவி உற்பத்திக் கலனுக்குள் செலுத்தப்படும்.

நீராவி உற்பத்திக்  கலனில் தண்ணீர் நிறைய இருக்கும்.  எனவே பைப்பில் உள்ள சூடானது நீராவி உற்பத்தி கலனில் உள்ள  நீருக்கு கடத்தபடுகிறது. எனவே நீராவி உற்பத்தி கலனில் உள்ள நீர் ஆவி ஆகி பக்கத்தில் உள்ள டர்பைன்னுக்கு செல்கிறது.இந்த டர்பைனுடன் ஒரு மின்சார ஜெனரேட்டர் இணைந்து இருக்கும் . அதில் இருந்தது மிசாரம் பெறப்பட்டு விநியோகம் நடைபெறும்.

டர்பைனில் இருந்தது வெளிவரும் நீராவி  கண்டன்சரில் குளிர்விக்கப்பட்டு மீண்டும் நீராவி உற்பத்தி கலனுக்குள் செலுத்தப்படுகிறது.  இது ஒரு சுழல் நிகழ்ச்சி. கண்டன்சரை குளிர்விக்க வெளியில் இருந்து தண்ணீர் ஒரு பைப் மூலமாக அனுப்பப்படுகிறது. இந்த தண்ணீர் தான் கூடங்குளத்தில் கடலில் கலக்கப்படும் . 
இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் சிகப்பு வண்ணத்தில் காட்டப்பட்ட தண்ணீரும் , நீராவி உற்பத்தி கலனில் உள்ள தண்ணீரும் ஒன்றுக்கொன்று கலக்காத படி  உள்ளது. சிகப்பு வண்ணத்தில் காட்டப்பட்ட தண்ணீரானது நேரடியாக அணுக்கரு பொருளின் மீது படர்ந்து உள்ளது . எனவே அது கதிரியக்கத்துக்கு  உட்பட்டது . ஆபத்தானதும் கூட.  இப்படித்தான் கூடங்குளத்தில் உள்ள அணு உலையும் இயங்க போகிறது.



Dr அப்துல் கலாமும் தன்னுடைய பங்கிற்கு  அணு உலை எவ்வளவு பாதுகாப்பானது என்று எடுத்து சொல்லி உள்ளார். உதயகுமார் டிவி நியூஸ் சேனலில் , அவர் ஏன் எங்களை வந்து பார்க்க வில்லை ? பார்த்திருக்க வேண்டாமா ?  கழிவு மேலாண்மை என்ன ?, கழிவை எங்கே வைக்க போகிறார்கள் ? ஏன் ராஸ்டிரபதி பவனில் அணு உலையை வைக்கலாமே ? என்று கேட்கிறார்.

சில விசயங்களை அரசாங்கம் பொது மக்களிடம் கூறி விடாது .அதுவும் அணு கழிவு எவ்வளவு , எங்கே வைக்க போறீங்க, போன்ற கேள்விகளுக்கு எல்லாம் , இவ்வளவு அணு கழிவு , இங்க  , இந்த இடத்தில் , இவ்வளவு நாட்களுக்கு  வைப்போம் என்று "Just like that " பதில் சொல்ல முடியாது. சில விபரங்கள் ரகசியமாக தான் வைக்கப் பட வேண்டும்.

நினைத்த இடத்தில் எல்லாம் அணு உலையை வைக்க முடியாது. நிலத்தின்  அமைப்பு , சூழ்நிலை , அவசர காலத்தில் அணு உலையை மூட வேண்டும் என்றால் குளிர்விப்பான்கள் அருகில் கிடைக்கும் நிலைமை , இப்படி ஏகப்பட்ட காரணிகளை கருத்தில் கொண்டே ஒரு அணு உலையை நிறுவுவார்கள்.

Dr . அப்துல் கலாம் உதய குமாரையோ  அல்லது உண்ணா விரதம் இருக்கும் மக்களையோ பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர் ஒன்றும்  பேச்சு வார்த்தை நடத்த வர வில்லை. ஒரு அணு விஞ்ஞானி என்ற முறையில் அணு உலையை மேலாய்வு செய்து தனது கருத்தை வெளிட்டார் . அதுவும் கூட சில நாளேடுகள் குறைந்தது இரண்டு நாட்கள் ஆகும் அணு உலையை ஆய்வு செய்ய , இவர் இரண்டு மணி நேரத்தில் என்ன செய்தார் என்று கேனத்தனமாக கேள்வி வேறு கேட்டு இருந்தார்கள் . அப்துல் கலாம் என்ன டெக்னீசியன்னா ஒவ்வொரு இடமாக சுத்தியல் வைத்து சோதித்து பார்க்க ..? 'பாத்தியா அப்துல் கலாமையே நான் கேள்வி கேட்டு விட்டேன் , நான் எவ்ளோ பெரிய அறிவாளி தெரியும்மா ...? ' -- இதை பறை சாற்றுவது தான் அந்த ஏடுகளின் நோக்கம். சீப் பப்ளிசிட்டி .


சரி அடுத்த பதிவில் புகிஷிமோவில் நடந்தது என்ன ? கூடங்குளத்தில் புகுஷிமோ  போல்  நடக்குமா  ? ஏன் நடக்காது  என்பதை  பற்றி  பார்க்கலாம் .

2 comments:

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets