Pages

Wednesday, January 19, 2011

காதுல பூ...!

ஆனாலும் இந்த ராஜ் டிவி காரங்க மனசுல என்ன தான் நினச்சுட்டு இருக்காங்க. நேத்து ராத்திரி " தெரியும்மா சினிமா "னு ஒரு நிகழ்ச்சி. அதுல மாதவனோட போடோவையும் ,கமல்ஹாசனோட போடோவையும் ஒரு விதமா இணைச்சு , இதுல இருக்கிற நடிகர்கள் யாருன்னு போன் பன்னி சொன்னா, நமக்கு 40 ,000 /= தருவாங்களாம். ஒரு நிமிசத்திற்கு 10 /= மட்டும் தான் செலவு ஆகும். நாலாவது படிக்கும் என் அக்கா வீட்டு பையன் கூட அத பார்த்துட்டு " மாமா ,இது மாதவனும் ,கமல் அங்கிளும் "னு சரியாய் சொல்லிட்டான்.
மேட்டர் அது இல்ல , சில பேர் போன் பன்னி "அஜீத்தும் , சரத்குமாரும் "னு சொல்லுறாங்க, இல்லைனா " விஜயும்  சத்தியராஜு"ம்னு சொல்லுறாங்க . இதுக்கு ரெண்டு நிகழ்ச்சி  தொகுப்பாளர்கள் வேற. நல்லா காதுல சுத்துறாங்க . கேக்கிறவன் கேனயன்னா, எலி ஏரோ பிளேன் ஓட்டுமாம்....!  அப்புறம் லீகல் அறிவிப்பு வேற  நாம கால் பண்ணும் போது ஹோல்டுல போக சான்ஸ் இருக்காம் , அப்படி இருந்தா  கட் பண்ணிட்டு மறுக்கா கூப்பிட்டா போதுமாம் . எந்த மடையன் கால் பண்ணுவாங்கனு நினச்சுட்டு இவங்க இப்படி எல்லாம் நிகழ்ச்சிய காட்டுறாங்க. சும்மா போங்குக்கு, அவங்க ஆளே போன் பன்னி ,தப்பு தப்பா சொல்லி," சே , என்ன இது கூட தெரியாதா, நான் சொல்லுறேன் பாரு " அப்பிட்டின்னு  நம்மள டெம்ப்ட் பன்னி போன் பண்ண வைக்க பாக்குறாங்க. நெஜமாலுமே டிவி பாக்கிறவங்க  ரொம்ப முட்டாள்கள்னு நினைச்சா மட்டுமே இப்படி எல்லாம் நிகழ்ச்சி காட்ட முடியும். ராஜ் டிவிக்கு  ஒரு பெரிய கும்பிடு.....!( தப்பு என் மேல தான் அதையும் உக்காந்து பார்த்தேன் பாரு...அது அந்த நிகழ்ச்சியோட வெற்றி )

2 comments:

  1. ஆஹா... இப்படி கூட ஒரு ப்ரோக்ராம்ஆ? கொடுமை தான் போங்க... எல்லாம் செல் போன் கம்பனிகளின் சதி தாங்க... வேற என்ன...

    ReplyDelete
  2. பின்னோட்டம் இட்டதிற்கு நன்றி அப்பாவி தங்கமணி . செல் போன் காரங்க கிடக்கறாங்க, இந்த டிவி காரங்களுக்கு அறிவு வேணாம். நம்மள எப்படி எல்லாம் முட்டாள் ஆக்கணும்னு காத்துட்டு இருக்காங்க பாவி பசங்க...!

    ReplyDelete

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets