Pages

Tuesday, February 8, 2011

யாரை குற்றம் சொல்ல..!

கடந்த  ஒரு  வாரமாக  ஆணி  புடுங்கிற வேலை  அதிகம்  ஆய்டுச்சு . அதான்  பதிவு  போட முடியவில்லை  ...( ஆமா , உன்  பதிவ  அப்படியே  ஒரு  1000 பேர்  டெய்லி  படிக்கிற  மாதிரி  ...போடா ,உனக்கே  இது  ஓவரா  தெரியல ...< அது  என்ன  மாயமோ  ,இல்ல  மந்திரமோ  தெரியல  இப்ப  எல்லாம்  என்னோட  மைன்ட்  வாய்ஸ்  ( அதாங்க  மனசாச்சி )அடிக்கடி  பேசுது  >.சரி  மேட்டர்க்கு வரேன் .
அதாவது  விஷயம்  என்னன்னா .... எனக்கு   ஒரு  சந்தேகம் ,நியூ போஸ்ட் டைப் பண்ணும்  போது  அப்படியே  தங்கிலீஷ்ல  டைப்  பண்ணுவது  நொம்ப  கஷ்ட்டமா  இருக்கு  . எல்லோரும்  இப்படி  தான்  லொங்கு  லொங்குனு  டைப்  பண்ணுறீங்களா  இல்ல , இதுக்குன்னு  ஏதாவது  மென்  பொருள்  உபயோக  படுதுறீன்களா ? அப்படி  ஏதாவது   இருந்தா  தயவு  கூர்ந்து  இந்த  ஏழை  பதிவலனுக்கு  உதவுமாறு  உங்களை  இரு  கரம் கூப்பி  கேட்டு  கொள்கிறேன் . sms ல  தான்  தமிழை  அப்படியே  ஆங்கிலத்தில்  டைப்  பன்னி அனுப்புறோம். ப்ளாக்லேயும் அதே முறை தானா ? அதுவும்  இல்லாமல் , இந்த  "யில் " சில  சமயம்  வருது  சில சமயம் "யேல்"  னு  வந்து  விழுது . சரியான  இணைப்பு  கிடைக்குறது  குள்ளார தாவு  தீர்ந்து  போகுதுடா  சாமி . இப்படி  சில  சொற்களை , டிராப்டில்  சேவ் பன்னி  வைத்து  இருக்கேன் . வேணும்மா, காப்பி  பேஸ்ட்  பன்னி  தான்  பதிவ  போடுறேன் .

 இதோட  விளைவு  நான்  ஒரு  தடவை  ஒரு  மனு  எழுதும்  போது  வந்தது . பெறுனர்னு தமிழ்ல  எழுதுறதுக்கு பதிலா "perunarnu "  இங்கிலீஷ்ல  எழுதி  தொலைச்சுட்டேன்.இப்ப  எல்லாம்  தமிழ்ல  வேகமா  எழுதறதை  விட  இங்கிலிஷ்ல  அதே  "டமில்லை"  வேகமா  டைப்  பண்ண  முடிகிறது . இது  எங்க  போய்  முடியுமோ  தெரியல .

ஆனால்  இதுல  ஒரு  சவுரியம்  இருக்க  தான்  செய்கிறது . சில  சமயம் எந்த   "ல"  or எந்த  "னா"னு  குழம்பிட்டு  இருக்கும் போது  அதே  தன்னப்போல  வார்த்தைகளாக வந்து விழும் போது ,அட கம்யுட்டரே சொல்லுது தப்பாக இருக்காதுன்னு விட்டுர்றேன் .முடிஞ்ச அளவுக்கு  நான்  தமிழ்ல  தப்பு  இல்லாம  எழுதனும்னு  முடிவு  பன்னி  உள்ளேன் .

ஆரம்ப  பள்ளி  கூட  நாட்களில்  நான்  தமிழை  நன்கு  படிக்காதது  ஒரு  காரணமாக  இருக்கலாம் . அப்போது  எல்லாம்  இப்போ  இருப்பதை  போல  வீதிக்கு  ஒரு  பள்ளி  கூடம்  கிடையாது . அப்பா  டிபன்சில்  இருந்து  வந்து  வேலை  தேடும்  போது  நான்  என்  அம்மா  வழி  பாட்டி வீட்டில்  தான்  தங்க  நேர்ந்தது . அதுவும்  இல்லாமல்  அப்பா  வழி  பாட்டி  ,தாத்தா எப்போவே  இறந்து  போய்  இருந்தார்கள் . நான்  ஊ .ஒ . ஆ . து  . பள்ளியில்  மூன்றாம்  வகுப்பு  சேர்ந்த  போது ,எனக்கு   அந்த  வாத்தியார்  ஹிந்தில்  தமிழையும் ,கணக்கையும்  சொல்லி  கொடுத்தார் . உயிர்  எழுத்தையும் , மெய்  எழுத்தையும்  எழுதி  மனப்பாடம்  பன்னி  சேர்த்தறதுகுள்ளார  எனக்கு  தெரிஞ்சு  இருந்த கொஞ்ச  நஞ்ச  ஹிந்தியும்  மறந்து  போச்சு . கேலியும்  ,கிண்டலின்  சிரிப்புகள் இடையே  நான்  நண்பர்களை  உருவாகி  கொள்வதற்கு  மிகவும்  சிரம  பட  வேண்டியதாக  போய்டுச்சு
( நான் : " அம்மா  க்யுன்  பச்சேன் லோக்  ,முஜ்சே பாத்  நஹி  கர்ரஹா "
அம்மா : அவங்களுக்கு  ஹிந்தி  தெரியாது  இல்ல  அதான் , நீ  அவங்க  கூட  தமிழ்ல  பேசு  அவங்க  உனக்கு  பிரண்ட் ஆவாங்க ...).
அது  போக  தமிழ்ல  246 எழுத்து  இருக்குனு   தெரிய  வந்த  போது  எனக்கு  ஜுரமே  வந்து  ஒரு  நாலு நாள்  காச்சலில்  இருந்தேன் .. அதுவும்  இந்த  "ஞா" படுத்திய  பாடு  கொஞ்ச  நஞ்சம்  இல்ல . ஹிந்தியும் , தமிழும்  கலந்து " ஞா"  வை ஒரு  மாதிரி  "ஞ்நூ" னு  சொல்லுவேன்  . வாத்தியார்  தலையை  பிசுக்குவார் .



எப்படியோ  அவர்  தலைகிழாக  நின்னு  எனக்கு  தமிழை  கத்து  கொடுத்தார் . ஒரு  வழியாக  5 ம் வகுப்பு  வந்த  போது  தான் எனக்கு ஒரு  அளவுக்கு   தமிழில்  எழுதவும்  , படிக்கவும்  முடிந்து  இருந்தது .வரலாறு  ,மற்றும்  துணை  பாட  புத்தகங்களை  படித்து  பார்ப்பேன் .இப்படியாக  என்  தமிழ்  அறிவை நானே வளர்த்து கொண்டேன் .இருந்தும்  நாலு  சுழி  "ணா" எல்லாம்  போட்டு  எழுதுவேன். எங்கே  எப்போ  எந்த  "ணா ", "ளா" , "றா"  வரும்னு  அப்போ  இருந்து  இப்ப  வரை  கொஞ்சம்  டவுட்  இருக்குது . உயர்  வகுப்பு  போக  போக  தமிழ்  இலக்கணம்  படித்த போது  தமிழின்  மேல்  தமிழ்  வாத்தியார்  வெறுப்பை  தான்  கொண்டு  வர  செய்தார் . இலக்கண  பிழை  செய்தால்  ,மூங்கில்  குச்சியில்  சும்மா  விளாசு விளாசுனு  விளாசி  விடுவார் . அவர்  அடிக்கு  பயந்தே  இலக்கணம்  நல்லா  போடும்  பையனின் நோட்டு  புத்தகத்தை  பார்த்து  அப்படியே  ஈ  அடிச்சான்  காபி  அடித்து  வைப்போம் .அவருக்கு  இலக்கணம்  புரியற  மாதிரி  சொல்லி  கொடுப்பதை  விட  ரெட்ட  வரி  குறிப்பேடு  ( double rule ) எழுதி  வருவது  தான்  முக்கியம் .சந்தேகம்  கேட்டால், நிக்க  வைத்து  டவுசரின்  பின்னாடி  ரெண்டு  சாத்து சாத்தி

" ஏன்டா  , அதிக  பிரசங்கி , அவனுக்கு  புரியும்  போது  உனக்கு ஏன்டா  புரியாது ,.. ( படார் ..!ஒரு  அடி  பின்னாடி ) பாடத்த கவனிக்காம  விட்டத அண்ணாந்து  பார்த்துட்டு  இருந்தா  அப்படி  தான்  புரியாது  பரதேசி ..(படார் ...!) நமக்கு  பின்னாடி  தேச்சு விடவே  நேரம்  சரியாய் இருக்கும். அடி  வாங்கிட்டு  கீழே  சரியாக  உக்கார  முடியாது . எரியும் . ஒரு  மாதிரி  சம்மனங்கால்  போட்டுட்டு  கீழே  படாமல்  உக்காருவோம் . மற்ற  பயல்கள்  என்னை  பார்த்து  ஒரு  நமுட்டு  சிரிப்பு  சிரிப்பார்கள் . என்னமோ  அவங்களுக்கு  ரொம்ப  புரிந்த  மாதிரி ...)

நேர் , நிறை , கருவிளம் , பூவிளம் , புளிமா , ஐகார  குறுக்கம் , ஒளகார  குறுக்கம் ,ஒற்றலபெடை , உயிர்ரெலபெடை...இப்படி  அர்த்தமே  புரியாமல்  இலக்கணம் படித்தேன் .எனக்கு புரிந்த ஒரே இலக்கணம் "பட ,பட" " சட ,சட " என்று வரும் ரெட்டை கிளவி மட்டும் தான் .  இந்த  கால  கட்டத்தில்  சுத்தமாக   ஹிந்தி  மறந்தே  போய்விட்டது .மேல்  வகுப்பு  அண்ணா, அக்கா  எல்லோரும்,
" டாய் ஒழுங்கா  அறிவியல்  பாடத்த  படிங்கடா, தமிழ் , இங்கிலீஷ்  எல்லாம் பர்சண்டேஜ்ல  வராது  " இப்படி  பட்ட  அறிவுரையாலும் , ஏதாவது  அறிவியால்  எக்ஸ்ட்ரா  கிளாஸ் என்றால் முதலில்  அவர்கள்  கை  வைப்பது , PET யும் , தமிழ் வகுப்பும்  தான் . ( "தமிழ்  என்னடா  நீங்களே  கூட  படிச்சுக்கலாம் , ஆனா  அறிவியல்  அப்படி  இல்ல  நான்  சொல்லி  கொடுத்தா  தான்  நீங்க  பரிச்சைல  பாஸ்  ஆக  முடியும் .." ) இப்படி  வாத்தியார்களே தமிழ் மேல்  இருந்த  மரியாதை  குறைத்து  காண்பித்தார்கள் . அது  போக  சுற்றும்  ,முற்றும்  உள்ள  சொந்த  காரங்க  அறிவுரை  வேற .

" பையன physics ,chemistry, maths நல்லா  படிக்க  சொல்லுங்க . மத்தது  எல்லாம்  கணக்கிலேயே  வராது . " ( அப்போ  எல்லாம்  entrance exam எழுதி  தான்  BE ,MBBS சீட்டுக்கு  அப்பளை  பண்ண  முடியும்  ).
கலை  கல்லூரியில் ( 1.75 மதிப்பெண்  cut off இல் MBBS கை  நழுவி  போனது ...) chemistry படிக்கும்போது , கல்லூரி  தமிழ் பேராசிரியர்கள் , நெடுநல்  வாடை , கம்ப  ராமாயணம் , இனியவை  நாற்பது ,இன்னா நாற்பது , நளவெண்பா ...இப்படி  பல  சங்க  கால  இலக்கியத்தை போற்றி ,மிக  ரசனையுடன்,  வகுப்பு  எடுத்தார்கள். அப்போ  தமிழின்  மேல்  ஒரு  அளவு  கடந்த  மதிப்பும்  ,மரியாதையும்  ஏற்பட்டது .தமிழ் எவ்வளவு ஆழமான மொழினு புரிய வந்தது.

இவ்வளவு  காலம்  தமிழை  ஒன்னும்  இல்லாத  ஒரு  மொழி  என்று  நினைத்து  இருந்ததிற்கு  வெட்கவும் பட்டேன் . பள்ளி  தமிழ்  வாத்தியார்களின்  மேல்  கோவம்  தான்  வந்தது . இதில்  உள்ள  கொடுமை  என்னணா , ( உன்னமையும்  கூட ...! ) தமிழின்  மேல்  பற்று ஏற்றப்பட்டாலும் , அதை  ஒரு  முக்கிய  பாடமாக  எடுத்து  படித்து  ஒரு  நல்ல  வேலை  வாங்க  முடியாது  என்பது  தான். இப்போ  என்  கிட்ட  ஆறாம்  வகுப்பு  முதல்  பத்தாம்  வகுப்பு  முடிய  உள்ள  தமிழ்  புத்தகம்  உள்ளது ( இலக்கான  புத்தகம்  உருப்பட ). அப்பப்போ  எடுத்து  படிப்பேன் .

தலை  முறை  தலை  முறையாக தமிழின்  வளர்ச்சி  பாதிக்கிறது . என்  அப்பா , or அம்மா  என்  குறையான  தமிழை  கண்டு  வருத்தப்  பட  வில்லை . வாழ்க்கைக்கு  நான்  கற்ற  இந்த  அளவு  தமிழே  போதும்னு நினைச்சுட்டாங்க  போல. இந்த  தலை  முறை  பெண்  ஒருவளிடம்  " பைத்தியம்  " என்று  எழுத  சொன்னேன் . அவள்  சிறிது  யோசித்து  விட்டு  "பயித்தியம் " என்று  எழுதி  காட்டினாள் . யாரை  குற்றம்  சொல்ல ....!

8 comments:

  1. Hi Machi,
    Good da,.. Nice post . you've mentioned our tamil teacher...havn't you..? but he is no more now.

    ReplyDelete
  2. @ நன்றிடா. ஆனா நான் குறிப்பா அவரை சொல்லல. பொதுவாக நம்ம தமிழ் வாத்தியார்களை சொன்னேன்.

    ReplyDelete
  3. //இப்ப எல்லாம் தமிழ்ல வேகமா எழுதறதை விட இங்கிலிஷ்ல அதே "டமில்லை" வேகமா டைப் பண்ண முடிகிறது . இது எங்க போய் முடியுமோ தெரியல//
    டோன்ட் வொர்ரி... இந்த நோய் பலருக்கும் இங்க இருக்கு... ஹா ஹா ஹா... :)

    //முடிஞ்ச அளவுக்கு நான் தமிழ்ல தப்பு இல்லாம எழுதனும்னு முடிவு பன்னி உள்ளேன்//
    சுத்தம்....இதுலையே ஒரு தப்பு... "பன்னி" இல்லங்க "பண்ணி"... ஒருவேள வேணும்னே இந்த சாக்குல எல்லாரையும் திட்டலாம்னு போட்டீங்களோ...:)

    //இப்படி வாத்தியார்களே தமிழ் மேல் இருந்த மரியாதை குறைத்து காண்பித்தார்கள்//
    ஆமாம்...எனக்கு செம எரிச்சல் வரும்.. ஏன்னா எனக்கு தமிழ் க்ளாஸ் ரெம்ப பிடிக்கும்... அட நிஜமாதாங்க...:)

    //1.75 மதிப்பெண் cut off இல் MBBS கை நழுவி போனது ...//
    அப்பாடா...நாங்க தப்பிச்சோம்... ஜஸ்ட் கிட்டிங்... :))

    //தமிழின் மேல் பற்று ஏற்றப்பட்டாலும் , அதை ஒரு முக்கிய பாடமாக எடுத்து படித்து ஒரு நல்ல வேலை வாங்க முடியாது என்பது தான்//
    நல்லா சொன்னீங்க... "தமிழ் இலக்கியம்" தான் படிப்பேன்னு உண்ணாவிரதம் கூட இருந்தேன் வீட்டுல... ஒண்ணும் நடக்கலை... பி.காம் சேத்து விட்டாங்க கடைசீல...(:

    //அவள் சிறிது யோசித்து விட்டு "பயித்தியம் " என்று எழுதி காட்டினாள் . யாரை குற்றம் சொல்ல ....!//
    (:

    ReplyDelete
  4. @அப்பாவி தங்கமணி: உங்கள் பின்னூட்டத்திற்கு நொம்ப நன்றிங்க அப்பாவி தங்கமணி."பன்னி"வேணும்னே போட்டதுதான் .ஆனா திட்டணும்னு இல்ல. அடுத்த பதிப்பு எப்போ ஆவலாக உள்ளோம்...!

    ReplyDelete
  5. வெட்டிப்பையன்னு எப்படி டைட்டில் வைக்க்ப்போச்சு? யூத்துன்னு மெயிண்ட்டயின் பண்றீங்களோ?

    ReplyDelete
  6. >>>பேசுது >.சரி மேட்டர்க்கு வரேன் .

    மேட்டரா..? எங்கே ? எங்கே?

    ReplyDelete
  7. @சி.பி.செந்தில்குமார்: வணக்கம் சார் , நீங்க நொம்ப நெருங்கிடீங்க . நான் கோபிசெட்டிபாளையம் ... ! அடே அப்பா பிப்ரவரி மாசம் இன்னும் முடியல அதுக்குள்ளே 35 போஸ்ட் . அட சாமி...!

    ReplyDelete
  8. //வெட்டிப்பையன்னு எப்படி டைட்டில் வைக்க்ப்போச்சு? யூத்துன்னு மெயிண்ட்டயின் பண்றீங்களோ?//

    அட போங்க சார் வெறுப்பு ஏத்தாதிங்க...கிழவன்னு தான் வெக்கணும்னு பேர போட்டேன் ..

    அதை யாரோ 2009 லேயே கர்சீப் போட்டு வச்சுட்டாங்க . இது வரை ஒரு பதிவு கூட போடுல . (http://kilavan.blogspot.com/) .என்ன கொடும சார் இது...!

    // மேட்டரா..? எங்கே ? எங்கே? //

    ஆய் அவ்ளோ சீக்கிரம் கிடைக்குமா என்ன ...ஆச தோச,அப்பளம் ,வாடா ...ஆய்

    ReplyDelete

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets