Pages

Tuesday, February 22, 2011

துப்பாக்கி ...!

டார்கெட்
" come on quick ....! come by double ...." GTI  கத்தினார். எல்லோரும் அவரவர் டார்கெட் பேப்பரை டார்கெட்டில் மாட்டி விட்டு " டப்.. டப்.." என ஓடி வந்தோம். இந்த ரெண்டரை கிலோ ஸூவை போட்டுட்டு  ஓடுவது என்பது  கொஞ்சம் கஷ்டம் தான். காலுல  இவ்ளோ வெய்ட்டா யாராவது  ஸூ  போடுவாங்களா ... இதை  எப்படி  மிலிடரிக்கு  வந்ததுன்னு யோசிச்சுட்டே ஓடி வந்தேன் .
GTI : " யாரவது டார்கெட்டை தவிர வேறு எங்காவது ஃ பயர் பண்ணினா தொலைச்சு போடுவேன் தொலைச்சு...! " ஹிந்தியல் கத்தினார்.
எல்லோரும் அவரவர் டார்கெட்க்கு நேர் எதிரில்  விறைப்பாக நின்று கொண்டு இருந்தோம் .
"ஓகே. Lying position Take...."
INSAS
அனைவரும்  தொப்  தொப்  என தரையில்  விழுந்து  குப்புற  படுத்தோம் . முன்னால்  INSAS துப்பாக்கி  ஒன்னும் தெரியாத அப்பாவி போல கிடந்தது. எனக்கு பிடிக்காத ஒரு விஷயம் என்னன்னா ,இப்படி குப்பற படுத்துட்டு சுடுறது தான். WAR வந்துச்சுன்னா யாரும் இப்படி குப்பற சுட்டுட்டு இருப்பாங்களா என்ன ...?  ( ஆனா இந்த பொசிசன்ல இருந்து சுட்டா குறி தவறாது என்பது உண்மை ...)

" Pick up your Gun ...and cock it and check "

முன்னால் கிடந்த துப்பாக்கியை ஒரு கையால் எடுத்து ,தோலில் முட்ட கொடுத்துட்டு, கன்னத்தை துப்பாக்கயீன் butt  பகுதி பக்கத்தில் வைத்து , இடது கண்ணை மூடி
இன்சாஸ் LMG
,வலது கண்ணின் வழியே பேக் சைட்  ப்ரோடேக்டோர் ஓட்டையீன் வழியே என்னோட டார்கெட் பேப்பரின் புல் ( Bull ) பகுதியை பார்த்தேன் . நன்றாக தெரிந்தது. ஒழுங்காக "zeroing " பண்ணி இருக்க வேண்டும்... இல்லனா நாம ஒரு பக்கம் சுட்டா அது ஒரு பக்கம் போகும்.
ஹி...ஹி... சத்தியமாய் நான் இல்ல ...!
இடது கையால் , லீவரை பிடித்து காக் செய்து விட்டேன் ."கலக் கடக்" என அருமையாக எந்த வித தடங்களும் இல்லாமல் காக் ஆகியது. மனம் திருப்பதி பட்டு கொண்டது. டார்கெட்டை குறி பார்த்து , ட்டிகரை மெதுவாக பின்னோக்கி நகர்த்தினேன்...
ஒரு இடத்தில் மெலிதாக தடை பட்டு நின்றது. இது தான் கடைசி பாயிண்ட். இதுக்கு மேல் நகர்த்தினால், பயரிங்  பின் (PIN ) எனப்படும் பின் ரிலீஸ் ஆகி குண்டின் பின்புறம் மிகுந்த அழுத்தத்துடன் குத்தும் . அந்த அழுத்தத்தின் காரணமாக குண்டில் உள்ள வெடி மருந்து பத்தி கொண்டு எறியும்.அழுத்தம் தாங்காமல் குண்டின் முன்னால் இருக்கும் பகுதி மிகுந்த வேகத்துடன் (120 மீட்டர் / செகண்ட்) வெளியேறும் . இன்சாஸ்ஸின் கில்லிங் ரேஞ் 450 மீட்டர்.

 ட்டிகரை மேலும் பின்னோக்கி நகர்த்தினேன்...கடக் என சத்தம் வந்தது. குட். நல்லா பங்கசன் ஆகுது. துப்பாக்கியை டெஸ்ட் பண்ணியவுடன் அடுத்த கமாண்டுக்காக காத்து இருந்தேன். இப்படி அனைவரும் "கடக் கடக்" என  அவரவர் gun னை டெஸ்ட் பண்ணினார்கள்.
" Pick up our Magazine and load " அடுத்த ஆர்டர் வந்தது.

மீண்டும் இடது கையால் Magazine யை எடுத்து , Gun  னை ஒருப்பக்கமாய் திருப்பி Magazine  யை அதற்குரிய இடத்தில் சொருகினேன். சொருகிவிட்டு இடது கையால் Gun   யை தாங்கி பிடித்து ,வலது கை ஆள் காட்டி விரலை ட்டிகர் கார்ட்டுக்கு வெளியே வைத்து காத்து இருந்தேன். வெயிலின் காரணமாக வேர்த்து , இமையீன் அருகே வலிந்து ஓடியது. அதை அப்படியே தோலில் துடைத்து கொண்டேன். குறி பார்க்க ஏதுவாக , என்னை கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணி கொண்டேன். இப்போது துப்பாக்கி என் வலது கையீன் ஒரு அங்கமாக உணர்ந்தேன். இது முக்கியம். துப்பாக்கி சுடும் போது அது ஒரு பாரமாக இருக்க கூடாது. It must be extension of  our Arms.

" Load  your empty case collector "

அடுத்து கமான்ட் . எம்ப்டி கேஸ் கலக்ட்டரை பொருத்தினேன். குண்டு வெடித்து வெளிய்ரும் பொது ,உண்டாகும் அழுத்தத்தில் லீவர் ஆட்டோமேடிக்காக காக ஆகும்.அப்போது குண்டின் பின்புறம் உள்ள வெடி மருந்து அடங்கிய பகுதி வெளியே தெறித்து விழும். அது தெறித்து விழாமல் இருக்க அந்த ஏற்பாடு .அதுவும் இல்லாமல் எம்ப்டி கேஸ் கிடைக்க வில்லை என்றால் அது ஒரு லைவ் ரவுண்டுடாக கருதப்படும்.

" cock the Gun "
லீவரை பிடித்து இழுத்து காக் செய்து விட்டேன்.  Magazine இல் இருந்து ஒரு ரவுண்டு சேம்பரின்  உள்ளே போன சத்தம் கலக் என்று கேட்டது. ஒரு Magazine  இல் 20 ரவுண்டு இருக்கும். குண்டு 5.56  mm  காலிபர் கொண்டது.   நான் மொத்தம் 3  Magazine யை சுட வேண்டும் . 60 ரவுண்டு. பேக் சைட்   ப்ரோடேக்டோர்  , பிரான்ட்  சைட்  ப்ரோடேச்டோர , என் வலது கண் , மற்றும் டார்கெட்டை ஒரு நேர் கோட்டில் கொண்டுவதேன்.

 "Change safety lever  to A "

சேப்டி  லீவரை  B ( BURST ) ல் இருந்து   A ( Automatic )க்கு மாத்தினேன். ஆட்டோமேடிக்கில் தான் சுட வேண்டும். B இல் வைத்தால் ஒரு ட்டிகர்க்கு 3 குண்டுகள் பாயும்.

"On your own target......, own time ......,  Fire"
FIRE- இந்த வார்த்தையை கேட்டவுடனே ,  மூச்சை இழுத்து பிடித்து, ஆடாமல் விறைப்பாக என் உடலை ஆக்கி  கொண்டு ட்டிகரை சுண்டினேன் .
" டமால் "  என என் Gun  குண்டை  துப்பியது . கண்ணை குறி பார்ப்பதில் இருந்து எடுத்து விட்டு ,டார்கெட்டை  பார்த்தேன். எங்கே பாய்ந்து உள்ளது என்று. புல் ( BULL ) வட்டத்துக்கு வலது பக்கமாக சிறிது மேலே சென்று இருந்தது. அப்படி என்றல் அதற்க்கு எதிர்பதமாக சுட வேண்டும். சிறிது என்னுடிய இடது கையை அகலாமாக வைத்தேன்.எனவே உயரம் சிறிது குறைத்து.GUN னை மிக சிறிதாக அட்ஜெஸ்ட் செய்தேன். மறுபடியும்  ட்டிகரை சுண்டினேன். " டமால் ". இப்போது மறுபடியும் டார்கெட்டை பார்த்தேன். BULL லில்  ஒரு சிறிய ஓட்டை " ஹ மச்சான் குறி என்னைக்கும் தப்பியது இல்லை ...."  எனக்கு நானே ஒரு சபாஷ் சொல்லி கொண்டேன். 
மறுக்கா  குறி பார்த்து ஒவ் ஒரு முறையும் சுட்டேன். 20 ரவுண்டு முடிந்ததும் அடுத்த Magazine  யை லோட் பண்ணினேன். 

ஒவ் ஒரு முறையும் குண்டு வெடிக்கும் போது , தோளில் நங் நங் என்று துப்பகயீன் பின் பக்கம்  இடித்தது . இது தவிர்க்க முடியாதது. நியூட்டன் மூன்றாவது விதி அங்கே ஊடு கட்டி என் தோளை பதம் பார்த்து கொண்டு இருந்தது. ஒரு வழியாக 60  குண்டுகளையும் சுட்டு சேர்த்தினேன். INSAS எவ்ளோவோ பரவ இல்லை. இதற்க்கு அண்ணன்கள் SLR , .303 இருந்து இருந்தா தோள்  பட்டை ரத்தம் கட்டி கொள்ளும். பழைய படங்களில் போலீஸ் எடுத்து வருமே அது தான் .303 . இன்னும் கூட தமிழ்நாடு போலீஸ் அதை தான் உபயோக படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.
SLR 





.303
" stop firing"
நாங்கள் சுட்டு முடித்தவுடன் GTI  உத்தரவு போட்டார்.
"ok...On your feet up "
அனைவரும் எழுந்து நின்று அட்டென்சன் இல் நின்றோம்
" Report "
ஒவொருவராக சொல்ல ஆரம்பித்தார்கள் .
" Number One Gun Clear Sir"  முதல் டார்கெட் ட்டுக்கு உரியவன் கத்தினான் ..
"Number Two Gun clear sir"  இரண்டாம் டார்கெட் ட்டுக்கு உரியவன் . நான் 5  வது

.
.
."Number five Gun clear sir..." கத்தினேன். ஆமாம் கத்தி தான் சொல்ல வேண்டும். ரேஞ்சில் எல்லாம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். நடக்க கூடாது. எங்கு போக வேண்டும் என்றாலும் ஓடி தான் போக வேண்டும். அதே மாதிரி அட்டென்சன் , ஸ்டாண்ட் அட் ஈஸ், போன்றவைகளையும் மிகுந்த விறைப்பாக செய்ய வேண்டும்.

" Pick up your target paper and replace with new one"

எல்லோரும் ஓடி போய் அவரவர் டார்கெட்டை எடுத்து விட்டு ,புதிய டார்கெட்டை மாற்றி விட்டு வந்தோம். டார்கெட்டில் என்னுடைய சர்வீஸ் நம்பரை எழுதி கொடுத்து விட்டு மறுபடியும் சுடுவதற்கு தயார் ஆனேன்.

இந்த முறை  Sten MC . இரண்டாம் உலக போரில் அதிகமாக உபயோகித துப்பாக்கி. இது தோளில் போட்டு கொண்டு சுட ஏதுவான ரகம். 
ஸ்டென் MC -III
இதை நின்று கொண்டு சுட வேண்டும். இதன் குண்டு 9 mm  காலிபர் கொண்டது. கில்லிங் ரேஞ்சு 60 மீட்டர்  .
"Pick up your Sten MC" 

இடது காலை முன்புறம் வைத்து கொண்டு  , Gun னை எடுத்தேன் . Magazine தயாராக இருந்தது. எனக்கு அடுத்து சுட போகும் நபர் Magazine இல் குண்டை நிரப்பி வைத்து இருந்தார். அடுத்து அவர் சுட போகும் பொது நான் அவருக்கு நிரப்பி தர வேண்டும். 

"" Pick up our Magazine and load "

 Magazine யை எடுத்து , Gun  னை ஒருப்பக்கமாய் திருப்பி Magazine  யை அதற்குரிய இடத்தில் சொருகினேன். 

"On your own target......, own time ......,  Fire"

துப்பாக்கியை கொஞ்சம் தூக்கி , டார்கெட்டுக்கு என்னை நேராக்கி கொண்டு ,குறி பார்த்து சுட்டேன்." ...ரட்..ரட் ரட் ...."  இதுவும் 60  ரவுண்டு. 


பிஸ்டல் 
அடுத்தது பிஸ்டல் . முன்பு எல்லாம் ரிவோல்வர்ரில் சுடுவோம். அனால் தற்போது அது வழக்கொழிந்து விட்டது.Sten MC க்கு போடும் குண்டே தான் இதற்கும். 
இதையும் நின்று கொண்டு தான் சுட வேண்டும். இரண்டு கால்களையும் சிறிது அகட்டி வைத்து கொண்டு இரண்டு கைகளால் பிஸ்டலை இறுக்கமாக பிடித்து கொண்டு, மெதுவாக உயர்த்தி டார்கெட்டை நோக்கி குறி பார்த்தேன். மனதில் என்னை    Pierce Brosnan, Bruce Willis, Will Smith இப்படி கற்பனை படுத்தி கொண்டு சுட்டேன். " டமால் " என் இரண்டு கையும் நியூட்டன் மூன்றாவது விதி இன் காரணமாக மேல் நோக்கி சென்றது. ஒவ்வொரு முறையும் இப்படி நடந்தது.
படத்தில் வருவது மாதிரி எதுவும் அவ்ளோ எளிதில் டார்கெட்டில் பட வில்லை. பிஸ்டல் லில்  நான் சுட்ட 20 ரவுண்டு டில் இரண்டே இரண்டு மட்டும் தான் BULL  லில்  போய் இருந்தது. 
எல்லாம் முடிந்து , என் டார்கெட்டை எடுத்து பார்த்தேன். இன்சாஸ்ஸில்  சுட்ட 60 குண்டில் 32 மட்டுமே BULL இல் சென்று இருந்தது. மற்றவை அதை சுற்றி பாய்ந்து இருந்தது.  பிஸ்டல் மற்றும் ஸ்டென் MC -III அப்படி ஒன்றும் சொல்லி கொள்ளும் படியாக இல்லை.  
வருடத்திற்கு நான்கு முறை இப்படி Range Firing செய்ய வேண்டும். முன்பு எல்லாம் உற்சாகமாக செல்வேன் .இப்போது எல்லாம் ஏதாவது காரணம் சொல்லி ஒரு இரண்டு முறையாவது கல்தா கொடுத்து விடுவேன். 
ஆனால் ஒரு விஷயம் இங்கே உண்டு, . ஒவ்வொரு முறை Range Firing முடிந்த வுடன் ஒரு விதமான மன திருப்பதி ஏற்ப்படும்.யாரையோ போய் கண்ட படி சுட்டு விட்டு வந்த பீலிங் வரும். எதோ கெட்டவர்களை எல்லாம் சுட்டு விட்டு சுத்தம் பண்ணி விட்ட பீலிங் .  இவளோ காலம் சேர்த்து வைத்து இருந்த கோவம் எல்லாத்தையும் இறக்கி வைத்த மாதிரி தோன்றும். அது ஒரு வெறி...துப்பாக்கி கைகளில் எடுத்த உடனே ஒரு மலை போன்ற தகிரியம் உண்டாகும். மிகவும் மோசமான ஆயுதம் . GUN . 






No comments:

Post a Comment

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets