Pages

Monday, January 10, 2011

New Year

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த வருடதில்லாவது பெட்ரோல் விலை உயராமலும் , வெங்காய விலை இமயமலை அளவு வளராமலும் , எந்த சூறாவளியோ, புயலோ வராமல், அளவோடு மழை பெய்து ,இதமான வெயில் அடித்து , பஸ், ரயில் கட்டணம் உயராமல் ,முக்கியமாக எந்த ஆயிரம் கோடிகளில் ஊழல் நடக்காமல், ஒரு நல்ல ஆண்டாக இருக்க அந்த ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்.

ரொம்ப லேட்டாக புத்தாண்டு வாழ்த்து  சொன்னதிற்கு மன்னிக்கவும்.மடி கணினியோ அல்லது USB broadband மோடம் இருந்திருந்தால் உடனே சொல்லி இருக்க முடியும். இன்டர்நெட் சென்டரில் உக்காந்து கொண்டு டைப் பண்ணுவது கொஞ்சம் கஷ்டம்மாக தான் உள்ளது. வீட்டில் டெஸ்க்டாப் உள்ளது. ஆனால் இன்டர்நெட் வசதி இல்லை. மாதம் குறைந்தது 700 ருபாய் தேவை படும். நான் எனது அலை பேசிலேயே இணையத்தை அணுகி கொள்வேன் .என்ன, வேகம் தான் குறைவு.
ஒரு வழியாக நமது நாட்டின் முதல் குடிமகள் இங்கு (புனே ) வந்து விட்டு போய் விட்டார்கள். DD நியூஸ்ல் நேரடி ஓளிபரப்பு இருக்கும் என பார்த்து ஏமாந்து போயிட்டேன். பேருக்கு ஒரு 10 வினாடிகள் மட்டும் காட்டினார்கள் . மிக அருமையான parade , மற்றும் சுகாய்-30 ன் ஏரோபடிக்ஸ் நன்றாக இருந்தது. ரைபிள்ளை வைத்து விமான படை வீரர்கள் செய்த வித்தையை காட்ட வில்லை. ( " A Few Good Man " ஆங்கில படத்தில் பெயர் போடுவதற்கு முன்பு வரும் சாகசத்தை போன்றது .) ஆனால் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் எடுத்த விசயத்தை மிக விலாவாரியாக காட்டினார்கள். வாழ்க கிரிக்கெட்  .

அப்புறம் இந்தமுறை நீண்ட விடுமுறையில் இருந்தேன்.(35 நாட்கள் ). பெரும்பாலும் இரவு நேரத்தை டிவி பார்ப்பதில் செலவு செய்தேன். வாழ்கையே நொந்து போகும் அளவிற்கு இருந்தது பெரும்பான்மையான நிகழ்ச்சிகள். ஒரு தொலைகாட்சில் என்னடான கலைஞ்சற்கு ஒரே பாராட்டு விழாவா இருக்கு. இன்னொன்றில் ஒருவர் தலைகிழாக தொங்கியபடி வெல்டிங் பண்ணுகிறார். நம்ப முடியாத அசாத்திய திறமையை அவர் வெளிபடுதுகிறாராம். இல்லைனா சொந்த வீட்டு பிரச்சனைகளை வெளிச்சம் போட்டு காட்டி கண்ணில் கண்ணீர் விட்டு கொண்டு திரிகிறார்கள். இதெல்லாம் பத்தாதுன்னு ஆளாளுக்கு மக்கள் அரங்கம் , மக்கள் மன்றம் அது இதுன்னு ஒரே டாக் ஷோ .சரி அதில் பேசுறவங்கலாவது நல்லா பேசுறாங்களானு பார்த்த அதுவும் இல்ல . சும்மா தொண்டை கிழிய கத்துறாங்க. நமக்கு கத்து ஜவ்வு கிழிந்தது தான் மிச்சம். எல்லாம் ரொம்ப செயற்கையாக பேசுகிறார்கள் .

அப்புறம் பார்த்தா பாட்டுக்கு டான்ஸ் ஆடுறது, அதுக்கு ஒரு ஜட்ஜுனு ஒரு ஆள் உக்காந்துட்டு " உங்க ரெண்டு பேருக்கும் கெமிஸ்ட்ரி சரி இல்லை " ," நாலாவது பீட்டுல நீங்க ஸ்டெப்ப விட்டுடிங்க " இப்படி ஒரே  அலப்பறை. அப்புறம் வருவது பாட்டு ஷோ , இதுக்கும் ஒரு ஜட்ஜ் உண்டு. அவர் " நீங்க பல்லவில நல்லா பாடுனீங்க ஆனா சுருதில விட்டுடிங்க" " உங்க டெம்ப்போ சரி இல்லனு " ஜல்லி அடிக்க வேண்டியது.(  இத சொல்லுற ஜட்ஜ்க்கு ,பல்லவி ,சுருதி அப்பிடினா பக்கத்துக்கு வீட்டு பிகர் தான் தெரியும் , பாக்கிறவனுக்கு என்ன புரிய போகுதுன்னு ஒரு குருட்டு தைரியமா இருக்குமோ...! )

இல்லைனா கேம் ஷோ . சரி மியூசிக் சேனலில்லாவது நல்லா பாட்டு போடுறாங்கன அதுவும் இல்லை. சிரிப்பு சேனலிலும் பார்த்த ஜோக்குகளே மறுக்கா மறுக்கா ( மறுக்கா - மறுபடியும் ) போட்டு கழுத்த  அறுகிறார்கள். இவை எல்லாமே வெளிநாட்டு சேனல்களின் காப்பி. AXN சேனலில் ஒரு கேம் ஷோ பார்த்தேன். 60 வினாடிகளில் ஒரு விசயத்தை செய்ய வேண்டும் .உதரணமாக மூன்று பலூன்களை 60 வினாடிகளுக்கு தரையில் படாமல் காற்றிலேயே மிதக்க விட வேண்டும். நல்லா விறு விருப்பாக போகிறது. குறித்து வைத்து கொள்ளுங்கள் இதையும் தமிழ் சேனலில் இன்னும் கொஞ்ச நாட்களில் பார்க்கலாம்.

இதில் ஆறுதலான விஷயம் எண்ணான ,இந்த பெரிய பெரிய சேட்டிலைட் சேனல்களுக்கு இணையாக லோக்கல் சேனல்கள்களும் களத்தில் இருந்து மிக அருமையான நிகழ்சிகளை வழங்குகிறார்கள். லோக்கல் விளம்பரத்தால் அக்கம் பக்கம் நடக்கும் நிறைய விஷயங்கள் தெரிய வருகிறது. உள்ளூர் செய்திகளும் உண்டு. என்ன , இந்த சோதிடம் , சாமியார் அருள் வாக்கு போன்ற வெரி லோக்கல் மேட்டர்களில் தான் கொஞ்சம் கடுப்பு வருகிறது. மிக அருமையாக பாடல்களை தொகுத்து வழங்குகிறார்கள். தொகுப்பாளினியாக வரும் பெண்கள் எல்லோரும் ,பெரிய சேனல்களில் வரும் பெண்களை காட்டிலும் அழகாக இருகிறார்கள். ரியல் எஸ்டேட் பிசினஸ்ஸை லாவகமாக நம் வீட்டில் புகுத்துகிறார்கள். எங்க அந்த சைடில் நிலம் வாங்கலினா அவ்ளோ தான் நம்ம வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமே இல்லைங்கிற ரேஞ்சுக்கு பீல் பண்ண வைக்கிறாங்க.  டாக்டர் ,வக்கீல் இப்படி லோக்கல் பெரிய ஆட்களை  கூட்டி கொண்டு வந்து நம்முடைய  சந்தேகங்களை தீர்த்து வைக்க ஒரு கருவியாக உள்ளார்கள்.
ஒரு சில நிகழ்சிகளை தவிர மத்தது எல்லாமே அடாசு தான் . மக்கள் டிவியில் சனி கிழமையும்,சண்டேயீளும் "ஏன்,எதற்கு ,எப்படி " நிகழ்ச்சி நன்றாக உள்ளது. எந்தனை பேர் பார்கிறார்கள் என்று தான் தெரிய வில்லை. அறிவியலை எளிதான சோதனை மூலம் அழகாக விளக்குகிறார்கள் . நல்ல முயற்சி. விஜய் டிவி யில்  நீயா நானா கொஞ்சம் பரவா இல்லை. DD  பொதிகையில் விவசாய நிகழ்ச்சிகள் நன்றாக உள்ளது. கிஸான் கால் சென்டர் நம்பர் எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரிய வில்லை. இலவச சேவை தான். சோதித்து பார்க்கலாம் என்று கூப்பிட்டு ,எங்கள் வீட்டு கொய்யா மரத்தில் வெள்ளை வெள்ளையாக பூச்சி வந்து உள்ளது ,எப்படி கட்டு படுத்த வேண்டும் என்று கேட்டேன். நன்கு விலாவரியாக என் சந்தேகங்களை கேட்டு எப்படி, எந்த பூச்சி கொல்லி ,எந்த விதத்தில் அடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். மிக மிக அருமையான சேவை. விவசயீகள்  இந்த சேவையை பயன்படுத்தி கொள்ள வேண்டும். கிஸான் கால் சென்டர் நம்பர் எல்லா நாளிதழகளிலும் விளம்பரமாக வர வேண்டும்.

கடந்த ஒரு வாரமாக நானும் எவ்ளோவோ பத்திரிக்கைகளை பார்த்துட்டேன் , சென்ற ஆண்டின் டாப் 10, டாப் 10 சொதப்பல்கள் போன்ற ஒன்னும் வரவில்லை . விகடன் எதோ கொஞ்சம் போட்டு இருந்தார்கள். ஆனாலும் எழுத்தாளர் சுஜாதா மாதிரி செலக்ட் செய்து போடா ஒருவராலும் முடியாது. I miss Writter Sujatha So much....! பாக்க வரைக்கும் பாத்துட்டு நானே டாப் 10 ,டாப் 10 சொதப்பல்கள் போட்டுருவேன். மத்த வலை பதிப்பாளர்கள் என்ன பண்ணுறாங்கனு கொஞ்ச நாள் பார்த்துட்டு நான் என்னோட டாப் 10  போடுறேன். ஓகே.

முதல் குடி மகள் வந்துட்டு போனா விசயத்த பத்தி அடுத்த பதிப்பில் போடுறேன். ஓகேயா...!

No comments:

Post a Comment

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets