Pages

Tuesday, September 28, 2010

"கஷ்டம்" மர்

மனுஷனுக்கு சோதனை வரலாம் அனால் இப்படி ஒரு சோதனை வரக்கூடாது . அது சரி சனி பகவான் என் தலைமேல் நின்னுட்டு  பரதநாட்டியம் ஆடினால் என்ன பண்ணுறது...! என்ன நடந்ததுனு சொல்லுறேன். மூன்று நாளைக்கு முன் , என் "LIONS DEN" னை சுத்தம் செய்யும்  போது ( அதாகப்பட்டது நான் தங்கி இருக்கும் ரூம்...இன்னும் தெளிவா சொல்ல போன சிங்கத்தோட   குகை...) ரொம்ப நாளா  use பன்னாத"xxxxxxx....."செல் கம்பனியோட ஒரு சிம் கிடைத்தது.


நான் அதை இப்போது உபயோகிப்பது இல்லை . இருந்தாலும் ஆசை யாரை விட்டது. சரி 'மறுக்கா' (நான் கொங்கு மண்டலத்தை செர்ந்தவனாக்கும்....! ) இன்னொரு தடவை ரீ சார்ஜ் பன்னி ஊபயோகிக்கலாம்னு ரீச்சர்க்ஜ் செய்தேன். கிட்ட தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது .கடைக்காரரிடம் விசாரித்து full டாக் டைம் இருக்கிற மாதிரி ரீ சார்ஜ் பண்ண சொன்னேன். நான் போட்டு இருந்த உடை, தோரனைய பார்த்துட்டு  ( அப்போ தான் ஒரு பிறந்த நாள் பார்ட்டிக்கு போயிட்டு திரும்பி இருந்தேன் ) நான் ஒரு 'HI FI' ஆசாமின்னு நினைச்சுட்டார்  போல...350 க்கு ரீ சார்ஜ் பன்னி விட்டுட்டார் .எனக்கு மயக்கமே வந்து விட்டது.

அவரை சொல்லி குற்றம் இல்லை. நான் இருக்கும் இடம் அப்படியாக பட்டது. புனேவில் விமான் நகர் ஏரியா Posh ஏரியா என்று சொல்லப்படும் ஏரியா. வெளி நாட்டு பிகர்கள் நிறைய சுற்றும் இடம். "காபி  டே" கடையே சுமார் ரெண்டு மூணு இருக்கு. ஏகப்பட்ட பார் இருக்கு. ஒரு சமோசா 7 ரூபாய்னா பார்த்துக்கோங்க. இங்க, பழ சரக்கு கடைல ஒரு கிலோ ஆப்பிள் 105 ருபாய்னு  சொல்லுவாங்க. சர்ர்ர்ர் னு கார்ல வந்து ,
" நாலு கிலோ போடுப்பா " னு சொல்லிட்டு ,
அப்படியே 10 ரூபாய்க்கு மூனே மூணு " பாணி பூரி " சாப்ட்டுட்டு போவாங்க.

ஆனா கொஞ்சம் தள்ளி போனா  "மோர் சூப்பர் மார்க்கெட்" ல அதே ஆப்பிள் கிலோ 75 ரூபாய் தான். ஒரு தடவை ஆப்பிள் வாங்கி நொந்து நூலாகி ,வெந்து வெஜ்  பிரியாணி ஆகி, இனி ஆப்பிள் என்ற வார்த்தையே மறந்து போய்டலாம் னு இருக்கேன். சரி விசயத்திற்கு வருகிறேன்., கடைக்காரர் நானும்  அந்த வகையை  சேர்ந்தவர்  என்று நினைத்து விட்டார் போல. நான் எதோ ஒரு 150 ரூபாய்க்கு பண்ணுவார்னு  நெனச்சுட்டேன்.சரி நடப்பது நன்மைக்கே னு வந்துட்டேன் . எப்படியும் புல் டாக் டைம் தானேனு ஒரு ஆறுதல்.

சோதனையே அப்புறமா தான் ஆரம்பிச்சது. ரொம்ப நாள் ஆனதால் ஒரு அழைப்பிற்கு ஒரு ரூபாய் என்ற கணக்கில் என் டாக் டைம் கழிய ஆரம்பித்தது. அருள் குமரா  நீ எந்த காலத்துலடா  இருக்க, ஒரு செகண்டுக்கு ஒரு பைசா னு உலகம் சுத்திட்டு இருக்கு,நீ என்னடானா  இன்னும் பழைய கற்க்காலத்திலேயே   இருகிரியேனு, கஸ்டமர்  ( நெஜமாலுமே "கஷ்டம்" மர் தான் )கால் சென்டர்ல கூப்பிட்டு சொன்னா போதும், என் பிரச்சனைக்கு ஒரு முடிவு வந்தரும் னு கனவு கண்டுட்டு 'கஸ்டமர்' சென்டர் நம்பரை அழைத்தேன். அதுவும்  இல்லாமல்  எத்தனை ரூபாய்க்கு ரீ சார்ஜ் செய்தால் ஒரு பைசா கால் ரேட் வரும் என்று யாருக்கும் தெரியவில்லை.

விதி அங்க தான் விளையாடி விட்டது....!  நான் என்ன நெலமைக்கு ஆளாகி இருப்பேன்னு கீழே உள்ளவற்றை படித்து பார்த்து அறிந்து கொள்ளவும்.முடிந்தால் அந்த கால் சென்டெரில் உள்ளவர்களை கொல்லவும்....( முடிந்த அளவு தமிழாக்கம் கொடுத்து உள்ளேன்...யான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்...இவ் வையகத்தில் நீங்கள் இருந்து ,இந்த கொடுமையை படிக்க நேர்ந்தால் அதுக்கு என்னை குற்றம் சொல்ல வேண்டாம்... Mr . சனி பகவான் உங்களுக்கும் கருணை காட்டி உள்ளார் என அர்த்தம் கொள்க...) 
" நமஸ்கார் "xxxxxx" வடிக்கையளர் சேவை உங்களை வரவேற்கிறது ( 'பரவ இல்லையே நம்மள  கூட வரவேற்கிரங்கலே..!) இதே மொழியை தொடர ஒன்றை அழுத்தவும், ஹிந்தி என்றால் இரண்டை அழுத்தவும், இங்கிலீஷ் என்றால் மூன்றை அழுத்தவும்..."
எனது ஹிந்தி மற்றும் மராத்தி அறிவு எவ்ளோ என்பது உலகு அறிந்த விஷயம் , எனவே மூன்றை அழுத்தினேன்.( ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீகிங் கோர்ஸ் புக்கை மனப்பாடம் பன்னி உள்ளேன் என்ற தைரியம் தான் )
" பாலன்ஸ் தொகையை அறிய ஒன்றை அழுத்தவும், ரீ சராஜ் செய்ய இரண்டை அழுத்தவும், ஹலோ tune பாடலை தேர்வு செய்ய மூன்றை அழுத்தவும், மதிப்பு கூட்ட பட்ட சேவை பற்றி அறிய நான்கை அழுத்தவும், GPRS பற்றி அறிய ஐந்தை அழுத்தவும், இன்றைய ஆப்ஹர்  பற்றி அறிய 6 அழுத்தவும், முந்தைய மெனுவிற்கு செல்ல 7 அழுத்தவும், "
ஒரு எழவும் புரியல எத அழுத்துவது என்று....மறுக்கா முதலில்  இருந்து கேட்டேன் ...

" நமஸ்கார் "xxxxxx" வடிக்கையளர் சேவை உங்களை வரவேற்கிறது........பாலன்ஸ் தொகையை அறிய ஒன்றை அழுத்தவும், ரீ சராஜ் செய்ய இரண்டை அழுத்தவும், ஹலோ tune பாடலை தேர்வு செய்ய மூன்றை அழுத்தவும், மதிப்பு கூட்ட பட்ட சேவை பற்றி அறிய நான்கை அழுத்தவும், GPRS பற்றி அறிய ஐந்தை அழுத்தவும், இன்றைய ஆப்ஹர்  பற்றி அறிய 6 அழுத்தவும், முந்தைய மெனுவிற்கு செல்ல 7 அழுத்தவும், "
சரி என்ன தான் நடக்கும்னு  4 யை அழுத்தினேன் ..
"மதிப்பு கூட்டப்பட்ட சேவைக்கு வரவேற்கிறோம்...(அப்படி என்னத்த கூட்டுனாங்களோ ... )
மேலும் விபரம் அறிய ஒன்றை அழுத்தவும், Missed கால் பற்றிய விபரம் அறிய 2 அழுத்தவும், இன்டர்நெட் சேவை பற்றி அறிய 3 யை அழுத்தவும், அடுத்த மெனுவிற்கு செல்ல 4 யை அழுத்தவும், முந்தைய மெனுவிற்கு செல்ல 8 யை அழுத்தவும் , மெயின் மெனுவிற்கு செல்ல 9 யை அழுத்தவும்."

இது சரி பட்டு வராது... நாம தான் எங்கையோ தப்பு பண்ணுறோம் னு நெனச்சுட்டு மறுக்கா மொதல இருந்து ரொம்ப உன்னிப்பா கவனமா கேட்டேன்... 

" நமஸ்கார் "xxxxxx" வடிக்கையளர் சேவை உங்களை வரவேற்கிறது....பாலன்ஸ் தொகையை அறிய ஒன்றை அழுத்தவும், ரீ சராஜ் செய்ய இரண்டை அழுத்தவும், ஹலோ tune பாடலை தேர்வு செய்ய மூன்றை அழுத்தவும், மதிப்பு கூட்ட பட்ட சேவை பற்றி அறிய நான்கை அழுத்தவும், GPRS பற்றி அறிய ஐந்தை அழுத்தவும், இன்றைய ஆப்ஹர்  பற்றி அறிய 6 அழுத்தவும், முந்தைய மெனுவிற்கு செல்ல 7 அழுத்தவும், "

இம்முறை ரொம்ப உசாரா  5 யை அழுத்தினேன் 

" xxxxxx' GPRS சேவை உங்களை வரவேற்கிறது ..GPRS சேவையை activate செய்ய ஒன்றை அழுத்தவும், deaactivate செய்ய இரண்டை அழுத்தவும், 10 நாள் ப்ளானை  தேர்வு செய்ய 3 யை அழுத்தவும், 500 MB ப்ளானை தேர்வு செய்ய 4 யை  அழுத்தவும்., அன்லிமிடெட் ப்ளானை தேர்வு செய்ய 5 யை  அழுத்தவும், முந்தைய மெனுவிற்கு செல்ல 6 யை அழுத்தவும், மெயின் மெனுவிற்கு செல்ல 9 யை அழுத்தவும்..."

அட பாவமே இப்போ என்ன பண்ணுறது ...மறுக்கா முதலில்  இருந்து கேட்டேன்...

" நமஸ்கார் "xxxxxx" வடிக்கையளர் சேவை உங்களை வரவேற்கிறது........"

இம்முறை அது சொன்ன எந்த எண்ணையும் அழுத்தாமல் குருட்டாம் போக்கில் 8 யை   அழுத்தினேன்..

'மன்னிக்கவும் நீங்கள் தேர்வு செய்த என் தவறானது... பாலன்ஸ் தொகையை அறிய ஒன்றை அழுத்தவும், ரீ சராஜ் செய்ய இரண்டை அழுத்தவும், ஹலோ tune பாடலை தேர்வு செய்ய...." 

அய்யோ ஆண்டவா இந்த கஸ்டமர் சென்டர் ஆள்காரங்க கிட்ட எப்படி தான் தொடர்பு கொள்வது ...மறுபடியும் முதலில்  இருந்து கேட்டேன் ...

 " நமஸ்கார் "xxxxxx" வடிக்கையளர் சேவை உங்களை வரவேற்கிறது........"
இந்த தடவை 5 யை  அழுத்தினேன்.. என்ன சொன்னது என்பதில் அக்கரை காட்ட வில்லை...

மறுபடியும் 5 யை அழுத்தினேன்...

" அன்லிமிடெட் இன்டர்நெட் சேவையை activate  செய்ய ஒன்றை அழுத்தவும், முந்தைய மெனுவிற்கு செல்ல 8 யை அழுத்தவும், மெயின் மெனுவிற்கு செல்ல * யை அழுத்தவும்..."

கோவத்தில் எதை அமுக்குகிறேன்னு பார்க்காமல் ஒன்றை அழுத்திவிட்டேன். 

" அன்லிமிடெட் இன்டர்நெட் சேவையை activate செய்ததிற்கு மிக்க நன்றி. இந்த சேவையை பெற உங்கள் அக்கௌன்ட்ல்  இருந்து ரூபாய் 98 மட்டும் கழிக்கப்படும் . தயவு செய்து நாங்கள் அனுப்பும் செட்டிங்கை save செய்து விடுங்கள். முந்தைய  மெனுவிற்கு செல்ல 8 யை அழுத்தவும்..மெயின் மெனுவிற்கு செல்ல 9 யை அழுத்தவும்.."

(அட சே ! என்ன முட்டாள் தனம் பண்ணிட்டேன்... வட போச்சே... 98 ரூபாய் அநியாயமாய் போச்சே...)"

மறுபடியும் முதலில் இருந்து கேட்டேன்....

"நமஸ்கார் "xxxxxx" வடிக்கையளர் சேவை உங்களை வரவேற்கிறது....பாலன்ஸ் தொகையை அறிய ஒன்றை அழுத்தவும், ரீ சராஜ் செய்ய இரண்டை அழுத்தவும், ஹலோ tune பாடலை தேர்வு செய்ய மூன்றை அழுத்தவும், மதிப்பு கூட்ட பட்ட சேவை பற்றி அறிய நான்கை அழுத்தவும், GPRS பற்றி அறிய ஐந்தை அழுத்தவும், இன்றைய ஆப்ஹர்  பற்றி அறிய 6 அழுத்தவும், முந்தைய மெனுவிற்கு செல்ல 7 அழுத்தவும், "

இம்முறை வருவது வரட்டும் னு 3 யை  அழுத்தினேன் ...

"ஹலோ tune சேவையை பெற ஒன்றை அழுத்தவும், மெயின் மெனுவிற்கு செல்ல 9 யை அழுத்தவும்..."
so , நோ option , ஒன்றை அழுத்தினேன். 

"ஹலோ tune சேவையை activate செய்ததிற்கு வாழ்த்துக்கள் , இதற்க்கு கட்டணமாக வெறும் 30 ரூபாய் மட்டும் ஒரு மாதத்திற்கு கழிக்க படும்...முந்தைய மெனுவிற்கு செல்ல 9 யை அழுத்தவும், எங்கள் வடிக்கையளர் மையத்தை தொடர்பு  கொள்ள * யை அழுத்தவும்...."

கடைசியாக நான் கஸ்டமர் கேர் சென்டர் ஆட்களுடன் பேச முடியும் என்ற நம்பிக்கை வந்தது....எனவே * யை அழுத்தினேன்...

"நீங்கள் எங்களுக்கு மிகவும் முக்கியமான நபர்...லைன்லேயே காத்திருக்கவும்..எங்கள் வடிக்கையளர் அதிகாரி உங்களை தொடர்பு கொள்வார். உங்கள் உரையாடல்கள் பதிவு செய்ய படுகிறது.."

ஏதோதோ பாட்டு கேட்டது... ரொம்ப உன்னிப்பாக கவனித்து கொண்டு இருந்தேன் யாராவது அட்டென்ட் பண்ணுவார்கள் என்று.... சரியாக இரண்டு நிமிடங்கள் கழித்து செல் தொடர்பு முறிந்தது...


மறுபடியும் முதலில் இருந்து........
"நமஸ்கார் "xxxxxx" வடிக்கையளர் சேவை உங்களை வரவேற்கிறது...."

< சரியாக 58 நிமிடங்கள் நான் செலவு செய்து ,கஸ்டமர் கேர் ஆட்களுடன் பேசி தேவையான விரங்களை நான் பெற்றேன்... இனி "xxxxxxx" செல் சிம்மை வாழ் நாள் முழுவதும் தொடுவது இல்லை என்ற முடிவிற்கு வந்து உள்ளேன்...>

Tuesday, September 21, 2010

Google cell search '9773300000"

கூகுள் புதிய செல் சேவையை தொடங்கி உள்ளது. நீங்கள் இன்டர்நெட்டில் எப்படி சர்ச் பன்னுவிர்களோ அதே மாதிரி உங்கள் செல்லில் இருந்தே உங்களுக்கு வேண்டிய தகவல்களை பேர முடியும். என்ன தகவல் வேண்டுமோ அதை உங்கள் செல்லில் Message ஆக டைப் செய்து " 9773300000" என்ற எண்ணிற்கு அனுப்பினால் உடனே நீங்கள் தேடிய விபரங்கள் உங்களுக்கு கிடைக்கும். சேவை இலவசம் தான். இந்த என் பூனேக்கு மட்டும் தனா இல்லை இந்தியா முழுவதும் தான என்று நண்பர்கள் தான் சொல்ல வேண்டும். நான் என் பெயரை டைப் செய்து அனுப்பி பார்த்தேன் என்ன ரிசல்ட் வத்து என்று....
.....
......
.....
.....
.....
......
......
.......
.......
.....
...........
அப்படி ஒரு ஆசாமியே உலகத்தில் இல்லை என்று காறி துப்பி விட்டது.... " என்ன கொடுமை சார் இது..." எதிர் கால சாகித்திய அகடாமி விருது வாங்க போற ஆசமிகே இந்த நிலமைனா, உங்க பேர எல்லாம் போட்டா என்னத்துக்கு ஆவறது...

Saturday, September 18, 2010

Germany Bakery blast

"ஹிமாயத் மிர்சா பயக்"
(Himayat Mirza Baig) யார் இந்த புண்ணியவான்னு  தெரியுமா ...? இங்க புனேல , சும்மா டீ சாபிட்டுட்டு, பேசிட்டு இருந்த 17 பேர போன போகுதுன்னு பாம் வச்சு கொன்ன அண்ணன் தான் அவர் ... இது கடந்த FEB மாதம் நடந்தது . அந்த கடையீன் பெயர் 'ஜேர்மன் பாகிரி ". (நான் கூட ஒரு கேக் அங்க சாப்பிட்டு இருக்கேன் .)  அண்ணாத்தே பாம் வைக்க என்ன காரணம்  தெரியுமா ,புனே போலீஸ் காஷ்மீர் தீவிரவாதிகள் கொஞ்ச பேர கைது பண்ணினார்கள். அண்ணனுக்கு பாசம் பொத்துகுட்டு  வந்துருச்சு. பலி வாங்க பாம் வச்சுட்டாரு. எதோ புண்ணியம் இந்தியன் போலீஸ் கஷ்ட்டப்பட்டு (???) கைது பன்னி இருக்காங்க.

இப்போ அவர் இந்திய ஜனநாயக நாட்டுல இருகார்  இல்லையா.., எனவே  ஒரு வக்கீல்  அண்ணனுக்கு ஆஜர் அகனுமாம். Pune Bar Association  ல ( தண்ணி அடிக்கிற பார் இல்லைங்க , இவங்க வக்கீல் ஜாதி...)இருந்து சுஷில் மஞ்சர்கர் (Sushil மஞ்சர்கர்) னு ஒரு சமுக ஆர்வலர் அண்ணனுக்கு ஆஜர் ஆக முடிவு பன்னி இருகார். 
" ஹிமாயத் மிர்சா , குற்றவளியா இல்லையானு கோர்ட் தான் முடிவு பண்ணனும்,அது வரை குற்றம் சார்தப்பட்டவருக்கு  எல்லா உரிமையும் உள்ளது..." னு டயலாக்  வேற விட்டு இருகார்.

சரி, நமது நட்டு நீதி மன்றங்கள் ரொம்ப நல்லு முறையாக செயல் பட்டு வந்தால், இதை நம் ஒத்துகொள்ளலாம். இந்த வழக்கு நீதி மன்றத்தில் நடக்கும் போது எத்தனை முறை வாய்தா  வாங்க போகுதோ...? தப்பி தவறி எதாவது தீர்ப்பு வந்தால் கூட மேல் கோர்ட், கீழ் கோர்ட் ,சைடு கோர்ட் ,  ஹை கோர்ட்,சுப்ரீம்கோர்ட் னு  மாறி மாறி வழக்கு இழுத்து அடிச்ட்டே இருக்கும். அது வரை மிர்சா அண்ணன் ஜெயில்ல ஜாலியா சிக்கனோட விருந்து சாப்பிட்டு இருப்பர். அப்படியே சுப்ரீம்  கோர்ட் நீதி வழங்கினாலும் ( 12 வருஷம்  கழிச்சுதான்....! ) இருக்கவே இருக்கு ஜனாதிபதி கருணை மனு...ஒரு தடவை மனு போட்டுட்டு ,நம்ம ஜாலியா இருந்தரலாம். அப்புறம் ஜனாதிபதி மண்டைய  போட்டு குழப்பிட்டு இருப்பார். முடிவு எடுக்க ரொம்ப சிரம படுவர். அது போக அவருடைய கால தாமதத்திற்கு யாரும் கேள்வி வேற கேட்க  முடியாது ( என்ன கொடும சார் இது...? ) ஒரு வருசமோ இல்லை 10 வருசமோ ..எப்ப தோணுதோ அப்போ அவர் முடிவு எடுக்கலாம். கருணை மனுவை நிரகரிசுட்டா  அப்புறம் ஜனாதிபதிக்கு பேர் கெட்டு போய்டுமே...

17 பேரை பாம் வைத்து கொன்ன ஒரு மனித விலங்கிற்கு இவ்ளோ முக்கியத்துவம் தேவை தான என்பது தான் என் கேள்வி. இது போன்ற குற்றம் செய்பவர்களுக்கு எந்த வக்கீலும் ஆஜர் ஆக கூடாது.குற்ரம் சாட்டப்பட்டவரே வழக்காட முடியும் என்ற பிரிவு இருக்கும் போது,எதுக்கு வக்கீல் தேவை.மேலும் இது போன்ற குற்றங்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும், அதுவும் மிக விரைவாக. இந்த தண்டனை மற்றவர்களுக்கு  ஒரு பாடமாக அமைய வேண்டும். குற்றம் புரிந்தால் யாரும் நமக்கு வக்கீல் வர மாட்டர்கள், தண்டனை கடுமையாக இர்ருக்கும், கருணை மனு இல்லை...என்ற சூலில் தான் குற்றம் புரிய தயங்குவார்கள்.

சுஷில் மஞ்சர்கர் .இவர் மிர்சாவிற்கு ஆஜர் ஆவது ஒன்னுனும் மனிதாபிமான அடிப்படையில் அல்ல என்பது என் கருத்து. இதற்க்கு பின்னல் பணம் விளையாடி இருக்கும் என்பதில் யாருகாவது சந்தேகம் இருக்கா ...? அந்த 17 பேரின் சொந்த பந்தங்கள் எவ்ளோ கஷ்ட பட்டு இருக்கும். அந்த 17 பேரின் உயிர் இலப்பு திரும்ப வர கூடியதா என்ன. வழக்கு முடியும் வரை  மிர்சா " இன்னொசென்ட்" ஆம் . மண்ணாங்கட்டி . சுத்த பேத்தல். பேசாம இந்த போலீஸ் கைது பண்ணுறதுக்கு பதில் என்க்கௌன்ட்டர்ல போட்டு தள்ளி இருக்கலாம். 

இந்த பாம் வெடிக்கும் போது சுஷில் மஞ்சர்கர்ரோட  பையனோ, இல்லை பெண்ணோ  அங்க இல்லாம போனது சுஷில் மஞ்சர்கர் செய்த புண்ணியம் or அவர் மனைவி செய்த புண்ணியம். மஞ்சர்கர் வக்கீலுக்கு ஒரு விஷயம் புரியல..."எல்லாமே தமாஸ் தான்....தனக்கு நடக்காத வரை...". அவருக்கு எந்த விசயம்மும் நடக்கல இல்லையா அது தான் அவருக்கு தமாசா இருக்கு.... நல்ல இருயா வக்கீல் நல்ல இரு ....!

"Panni"

இன்று என் நண்பர்கள் ராமலிங்கமும்,சுரேஷ்பாபுவும் குறுஞ் செய்தி அனுப்பி இருந்தர்கள். குறிப்பாக லிங்கம் ரொம்ப  பீல் பன்னி  இருந்தார். அவரை பற்றி "ப்ளாகி"  ( அட BLOG தான் ..)  இருந்ததிற்கு தான் அப்படி பீலிங்க்ஸ்  விட்டு  இருந்தார்.

இப்போ தான் ஒரு farewell  பார்ட்டி ( இரவு 2345 hrs , நாங்கல்லாம் 24 மணி நேர CLOCK  தான் use பண்ணுவோம் ....  )  இல் இருந்து  வந்தேன். எங்கள் மொழியில் அதை "ரம் குத்து" ( RUM PUNCH ) என்று சொல்லுவோம். அதாக  பட்டது  , அதிகார  பூர்வமாக  தண்ணி  அடிக்கும் நிகழ்ச்சி. இந்த  uniform சர்வீஸ் இல்  இது  ஒரு  வசதி.. சரி  விசயத்திற்கு வருகிறேன் , 4 கிளாஸ் கூழ் ( அட Cool .....)  ட்ரிங்க்ஸ்  சீஸ் பகோடா ,முட்டை, , salted groundnuts , மற்றும் இன்ன பிர நொறுக்கு தீனிகள் , எல்லாவற்றியும் கபளீகரம் பண்ணிட்டு தான் வந்தேன்.நொம்ப கவலையா இருக்கு. எனக்கு "Tri glyceriode " அதிகமா இருக்கு. எனவே இப்படி நொறுக்கு தீனிகளை நான் சாப்பிட கூடாதம்....

178 cm  உயரம் உள்ள நான் 75 kg தான் இருக்கணுமாம். அனால் நான் 90kg ...
கடைசியாக நான் "Lipid Profile" டெஸ்ட் செய்ததில் முன்பை விட அதிகமா காமித்தது . 234  இல் இருந்து 257 ஆக உயர்ந்து விட்டது. இத்தனைக்கும்  நான் 16 மணி நேரம் பட்டினியாக இருந்து செய்த டெஸ்ட். அட போங்கப்பா நீங்களும் உங்க டெஸ்டும் னு தான் இந்த ரம் குத்துல எல்லாதையும் வெளுத்து வாங்கிட்டேன்.இன்னும் என்னுடைய "Annual Medical Exam " நான் கிளியர் பண்ணவில்லை. சரி ஏன் இது இப்படி தாறு மாற ஏறுதுன்னு கூகிளினேன் ...( அட என்னங்க  இது , கூகிளினேன் அப்பிடினா கூகுள் சர்ச் பண்ணினேன்னு அர்த்தம் ) இந்த உடம்புல வைட்டமின் B3 கம்மியா  இருக்காம் .என்னயா வச்சுட்டு இவங்க காமெடி ,கீமடி  எதுவும் பன்னுரங்கலோனு ஒரு சின்ன  டவுட்  இருக்கு .

அதாவது ஒரு வயசுக்கு ( என் வயசு என்னனு சொல்ல  மாட்டேனே...என்ன பண்ணுவிங்க... என்ன பண்ணுவிங்க ..?)அப்புறம் இப்படி தான் ஒடம்பு வெயிட் போடுமாம். இதே பிரச்சனை  தான் நண்பர் லிங்கதிற்கும். அவர் என்னிடம் 'செல்லிய' ( அதாவது செல் போனில் பேசிய போது ) போது
" அருள் நாம இந்த  பிரச்சனைக்கு எதாவது 'பண்ணியே'ஆகனும்....இல்லன நாம "பன்னி" மாதிரி ஆயுருவோம்  " னு  சொன்னார்.

நெனச்சு பாக்கவே பயங்கரமா இருக்கு. ரெண்டு கால்ல  நடக்கவே கஷ்ட்டமா இருக்கு. பன்னி ஆய்டா கையையும் சேர்த்தி நாலு கால்ல நடக்க வேண்டி வருமே.... எனவே வெயிட்ட கம்மி 'பண்ணியே' ஆகிறதுனு முடிவு 'பண்ணியே' விட்டேன். மொத்தத்தில் 'பன்னி' ஆக கூடாது. எனவே நண்பர்களே  இனிமேல் என்னை எந்த ரம் குத்துக்கும் அல்லது  எந்த விருந்துக்கும் கூப்பிட வேண்டாம் என்று தாழ்மையயுடன் கேட்டு கொள்கிறேன்...

அட் லீஸ்ட் ஒரு எருமையாகவது  மாறலாம் னு இருக்கேன்..கொஞ்சம் டீசென்ட்டா  இருக்கும்  இல்லையா ....ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்கப்பா எப்படி இந்த வெயிட்ட  கம்மி பண்ணுறது....
ஹெல்ப்...ஹெல்ப்...ஹெல்ப்.....!

Thursday, September 16, 2010

தமிழ் பேர்

இன்று எனது நண்பர் வீட்டுக்கு போய் இருந்தேன் தேநீர் அருந்த கூப்பிட்டு இருந்தார். தமிழ் நண்பர் தான், அவருடைய பெண் குழந்தை என்னிடம் தயங்கி தயங்கி வந்தது.
" ஹாய் உன் பேர் என்ன ?" நான்.
" பரிக்ஷ "   என்றது
" யார் இந்த திரிஷாவோட தங்கச்சியா?"  என்று கேட்டேன். அதுவும்
"ஆமாம்" என்றது..
"ஒ அப்படியா? " அர்த்தம் புரியாமல் நான் அப்பாவை பார்த்தேன். அவரோ சிரித்தவாறே சொன்னார்
" ஒன்னும்  இல்லை சும்மா ஒரு ஸ்டைல்க்கு தான்..." என்றார்..!

என் உறவினர் ஒருவரின் பெண் குழந்தை  பெயர் கூட  " கனிஷ்மா".
நான் பள்ளிக்கூடம் படிக்கும் போது இப்படி எல்லாம் பேர் இருந்ததாக ஞாபகம் இல்லை.எனக்கு தெரிந்து "நதியா" ( ஆமாம் குமரன் ச/o மகாலக்சுமி நதியவே தான் ...) என்ற பெயர் தான் புதிய மாடர்ன் பெயர். மற்றபடி " அமுதா" " குமுத வள்ளி" " பூங்குழலி "" வடிவு கரசி " " தமிழ் அரசி" "பூங்கொடி" " ஆண்டாள்"  இப்படி தான் பார்த்து இருக்கிறேன்.


இன்னும் கொஞ்ச நாட்களில் நல்ல தமிழ் பெயர் வாய்த்த பெண் குழந்தைகளை பார்க்க முடியாமல் போய்விடும் என்று  எண்ணுகிறேன். என் தங்கை பெயர் கூட ...நல்லா மூச்ச இழுத்து பிடிச்சது சொலுங்க " தர்மசம்வர்த்தினி ".... எவ்ளோ நல்ல பெயர்.

பெண் குழந்தை   மட்டும் அல்ல, ஆண் குழந்தைக்கும்  இதே கதி தான்..." ரிச்வந்த்" "எஸ்வந்த்" " யுவ கார்த்தி " ....எதாவது நாலு வார்த்தை  பின்னாடி " inth " சேர்த்துவிட்டால் புதிய லேட்டஸ்ட் trend பெயர் கிடைத்து விடும்.என் பையன் பெயர் கூட நாங்கள் " ஹரீஷ்" என்று தான் வைத்து இருக்கிறோம்.
ஏன்  இந்த பெயர் மாற்றம்...? காலத்திற்கு ஏற்றவாறு மறுக்கிறோம் என்று நம்மை நாமே ஏமாற்றி கொள்கிறோம். இங்கு பெயர் மட்டுமே மாற்றப்படுகிறது.நாம் மாறுவது இல்லை. எனது நண்பர் வேல்ராஜ் பொன்னியின் செல்வன் கதா பாத்திரம்  வந்திய தேவனின் பெயரை சுருக்கி  வந்தியன்  என்று அடை மொழயில் அழைத்து கொள்வார்.

இந்த நிலைமை இப்படியே போனால் ஒரு கால கட்டத்தில் பெயர் வைக்க வார்த்தைகள் கிடைக்காமல் போய் விடும். பின்னர் சுஜாதாவின் மீண்டும் ஜீனோ நாவலை போல் பெயர் வைக்க தனி சட்டம் வந்து  வெறும் இரண்டே இரண்டு வார்த்தைகளை பெயராக கொள்வோம். " Woods" " Stone" " walls" " Bridge" இப்படி இங்கிலீஷ்காரன் தான் பேர் வைக்க வார்த்தை இல்லாமல் அலைகிறான்... நமக்கு என்னப்பா குறைச்சல் ...நல்ல பேரா வைக்க வேண்டியது தானே...?ஏன் உன் பேர மாத்திக்க வேண்டியதுதானேனு நீங்க கேக்கிறது எனக்கு கேக்குது..? 

ஆனா பாருங்க இந்த அருள் குமார் அப்படிங்கிற பெயர் ரொம்ப அழகான பெயர்னு கூகுல்ல ஒரு research சொல்லுது.இந்த பெயர் பற்றாகுறை பற்றி எனது நண்பர் திரு ராம் குமாரிடம் விவாதித்தேன். அவர் பாரதி கவிதை எல்லாம் படிப்பவர். அவரும்  மிக வருத்தப்பட்டார். பேர் தான் மாற்ற முடியாது ஆனால், மின் அஞ்சல் முகவரியை மாற்ற முடியும்  என்று மாற்றிய  மின் அஞ்சலில்  எனக்கு ஒரு mail அனுப்பினர் ...அவருடைய  மின் அஞ்சல் முகவரியை  பார்த்து பொறமை  பட்டேன்  . "ரம்பா  ரதி " என்று இருந்தது.
" அடேய் நண்பா உனக்கு லொள்ளு அதிகம் தான் ...ரம்பா ரதி னு பெண் பேரா பார்த்து செலக்ட் பண்ணி இருக்கே " னு செல்லினேன். ( அதங்க செல் போனில் பேசினேன் )
" போடா நாய், உன் புத்தி உன்னை விட்டு போகிறது , நான்   என் பெயரையும்  பாரதியும் சேர்த்து ராம் பாரதி னு ( ram barathi) போட்டேன்" னு சொன்னான். நல்ல பையன்....
அவன் சொன்ன மாதிரி நான் தான்  ராம்பாரதிக்கும்,(rambarathi)  ரம்பா  ரதிக்கும் ,( ramba rathi )அர்த்தம்  புரியாமல் போய்டேன் ....என்ன கொடும சார் இது...  
Blogger Widgets