Pages

Wednesday, November 30, 2011

புகுஷிமோவில் நடந்தது என்ன ...?

புகுஷிமோவில் அணு உலை வெடித்ததா...? கதிரீயக்கம் வெளியேறியதா ...? புகுஷிமோவில் உண்மையில் ... நடந்தது என்ன....? இப்படி முடி இல்லாத சொட்ட மண்டைய நொம்ப நாளா தேச்சுட்டே இருந்தேன். IAEC மற்றும் ஜப்பானின் புகுஷிமோ அணு உலை வலை தளம் , இன்னும் பல வலை தளங்களை பார்க்கும் போது சில விஷயம் புரிஞ்சது .அதை தொகுத்து உள்ளேன்.முழு விவரம் படிக்க இந்த விக்கிபீடியாவை சொடுக்கவும் .

  • நில நடுக்கம் ஏற்படும் போது அணு உலை தானாகவே தன்னுடைய செயல்பாட்டை நிறுத்திக்கொள்ளும் வகையில் தான் அமைக்கப்பட்டு இருக்கும். புகுஷிமோவிலும் நில நடுக்கம் ஏற்பட்ட போது அணு உலை தானாகவே தன்னுடைய செயல்பாட்டை நிறுத்திக் கொண்டது .
  • நில நடுக்கம் ஏற்பட்ட சில நொடிகளில் "கண்ட்ரோல் ராடுகள்" சொருகப்பட்டு அணு உலை "சங்கிலி தொடர் வினை" உடனடியாக நிறுத்தப்பட்டது.
  • செயின் ரியாக்சன் நின்றாலும் ," டீகே ஹீட் " வந்து கொண்டு தான் இருக்கும். இந்த டீகே ஹீட் ரொம்ப முக்கியமானது. உதாரணமாக ஒரு அணு உலை 3000 MW மின்சாரம் உற்பத்தி செய்கிறது என்றால் 210 MW மின் உற்பத்தி செய்யும் அளவுக்கு இருக்கும் இந்த டீகே ஹீட் . (சுமார் 7 % ). இந்த வெப்பமானது அணு உலை நிறுத்திய முதல் நாளில் 30 MW மின் உற்பத்தி செய்யும் (சுமார் 1 % )அளவுக்கு குறைந்து விடும். டீகே ஹீட் முழுவதும் குறைய நிறைய நாட்க்கள் பிடிக்கும்.இந்த வெப்பத்தை தணிக்க வேண்டும் . இல்லை என்றால் அணு உலை நடுப்பாகம் உருகி விடும் அபாயம் உள்ளது.
  • அணு உலை செயல் பாட்டை நிறுத்திக் கொண்டதால் அங்கு மின்சாரம் கிடையாது . எனவே டீசல் ஜெனரேட்டரை கொண்டு அணு உலை வெப்பம் தணிக்க நடவடிக்கை ஏற்பட்டது. இது வழக்கமாக இல்லை என்றாலும் ,இந்த மாதிரி பேரிடர் நேரங்களில் செய்யப்படும் முறைகளில் ஒன்று தான் .
  • துருதிஷ்டமாக நில நடுக்கத்தின் காரணமாக சுனாமி அலை வந்து அந்த டீசல் ஜெனரேட்டர்களின் செயல் பாட்டை முடக்கியது .
  • உடனடியாக அணு உலை பேக் அப் பேட்டரிகளின் உதவியுடன் குளிர்விக்க பட்டது. இது எல்லாம் தானியங்கி முறையில் நடந்தது . இந்த பேட்டரிகளின் மூலம் சுமார் 8 மணி நேரத்திர்க்கு அணு உலையை குளிர்விக்க முடியும். புகுஷிமோவில் 8 மணி நேரம் பேட்டரியால் பேக் அப் செய்யப்பட்டது.

Thursday, November 10, 2011

Pressurized water reactor -அணு உலை வேலை செய்யும் விதம்


Pressurized Water Reactor-மாதிரி படம்
Pressurized water reactor -அணு உலை வேலை செய்யும் விதம்.  நன்றி : விக்கிபீடியா ( Wikipedia )
பக்கத்தில் இருக்கிற படம் மாதிரிதான் ஒரு PWR அணு உலை வேலை செய்யும்  . அணுக்கரு வினையின் காரணமாக மிக மிக அதிக அளவில் (1000 டிகிரிக்கும் மேல் )  சூடு வெளிப்படும் . இங்கே படத்தில் சிகப்பு கலரில் காட்டப்பட்டு இருப்பதை போன்று அந்த சூட்டை தண்ணீர் கொண்டு குளிர்விப்பார்கள் . இந்த தண்ணீர் ஒரு குழாயின் மூலமாக சுழன்று கொண்டே இருக்கும்.  இங்க ஒரு கேள்வி வரும் 1000 டிகிரிக்கு மேலேனா நீர் ஆவி ஆகிவிடாதா ? . ஆகாது ஏன்னா அது மிகவும் அழுத்தத்துடன் வைக்கப்பட்டு இருக்கும் , ஆனால் அதன் சூடு சுமார் 500 டிகிரிக்கும் அதிகமாய் இருக்கும்.இப்படி சூடு படுத்தப்பட்ட நீர் நீராவி உற்பத்திக் கலனுக்குள் செலுத்தப்படும்.

நீராவி உற்பத்திக்  கலனில் தண்ணீர் நிறைய இருக்கும்.  எனவே பைப்பில் உள்ள சூடானது நீராவி உற்பத்தி கலனில் உள்ள  நீருக்கு கடத்தபடுகிறது. எனவே நீராவி உற்பத்தி கலனில் உள்ள நீர் ஆவி ஆகி பக்கத்தில் உள்ள டர்பைன்னுக்கு செல்கிறது.இந்த டர்பைனுடன் ஒரு மின்சார ஜெனரேட்டர் இணைந்து இருக்கும் . அதில் இருந்தது மிசாரம் பெறப்பட்டு விநியோகம் நடைபெறும்.

டர்பைனில் இருந்தது வெளிவரும் நீராவி  கண்டன்சரில் குளிர்விக்கப்பட்டு மீண்டும் நீராவி உற்பத்தி கலனுக்குள் செலுத்தப்படுகிறது.  இது ஒரு சுழல் நிகழ்ச்சி. கண்டன்சரை குளிர்விக்க வெளியில் இருந்து தண்ணீர் ஒரு பைப் மூலமாக அனுப்பப்படுகிறது. இந்த தண்ணீர் தான் கூடங்குளத்தில் கடலில் கலக்கப்படும் . 
இதில் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் சிகப்பு வண்ணத்தில் காட்டப்பட்ட தண்ணீரும் , நீராவி உற்பத்தி கலனில் உள்ள தண்ணீரும் ஒன்றுக்கொன்று கலக்காத படி  உள்ளது. சிகப்பு வண்ணத்தில் காட்டப்பட்ட தண்ணீரானது நேரடியாக அணுக்கரு பொருளின் மீது படர்ந்து உள்ளது . எனவே அது கதிரியக்கத்துக்கு  உட்பட்டது . ஆபத்தானதும் கூட.  இப்படித்தான் கூடங்குளத்தில் உள்ள அணு உலையும் இயங்க போகிறது.

Wednesday, November 9, 2011

கூடங்குளம் அணு உலை…!


நொம்ப நாளா டப்பாவை தொடவே இல்லை . ( நான் ஆணி புடுங்கிற கம்பேனில, வெப் பேஜ் தயாரிப்பு விசயமா கொஞ்சம் பிஸி ஆய்ட்டேன் ...) .நண்பன் கிட்ட இருந்து ஒரு குறுஞ்செய்தி , "டேய் உன் ப்ளாகை யாரோ சைட் போட்டு வித்துட்டாங்க " , அதான் அவசர அவசரமா இதை டைப் பண்ணிட்டு இருக்கேன் . சரி லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா ஒரு பதிப்ப போடலாம்னு ...

கூடக்குளம் அணு உலை பிரச்சனை வர வர பெரிதாகி கொண்டே வருகிறது . ஜப்பானின் புகுஷிமோ அணு உலை விபத்துக்கு பிறகு மக்களின் பயம் இன்னும் கூடி இருக்கிறது. பத்தாத குறைக்கு அரசியல்வாதிகள் , சமூக ஆர்வலர்கள் , இன்னும் சில தொண்டு இயக்கங்கள் இவர்களின் அன்றாட அறிக்கைகள் என மக்களை போட்டு குழப்பி கொண்டு உள்ளார்கள்.

நிறைய பேருக்கு , அணு உலை எப்படி இயங்குகிறது? , அதன் முதன்மையான எரி பொருள் என்ன?, எவ்வளவு தேவைப்படும்? , எவ்வளவு மின்சாரம் கிட்டும்?, கழிவு என்ன ?, எவ்வளவு கதிரியக்கம் வெளிப்படும்? போன்ற விவரங்கள் எதுவும் தெரியாமல் பத்தோடு பதின்னொன்றாக எதிர்த்து கொண்டு இருக்கிறார்கள்.

அணு உலையில் இருந்து மின்சாரம் என்பது தற்போது தவிர்க்க முடியாத ஒரு விசயம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மாற்று வழியில் இருந்து மின்சாரம் தயாரிக்கிறேன் என்பதெல்லாம் தற்போது நடவாத காரியம். காற்றில் இருந்து மின்சாரம், கடல் அலையில் இருந்து மின்சாரம், சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் என்பதெல்லாம் கேட்பதற்கு மிக நன்றாக இருக்கும். ஆனால் இதை எல்லாம் நிறுவுவதற்கு ஆகும் செலவு , பராமரிப்பு செலவு, மிக மிக அதிகம். நமது ஒரு பக்கத்து கிட்னிய வித்தா தான் ஒரு யூனிட் மின்சாரம் வாங்க முடியும்.

PHOTO BY: A. Shaikmohideen  நன்றி: THE HINDU
 
அணு உலை நிறுவுவதாலேயே ஆபத்து என்றல்லாம் பைத்தியகாரதனமாய் நினைக்க கூடாது. அப்படி பார்த்தால் பாலம் கட்டுவது கூட நொம்ப ஆபத்தானது தான். எப்ப வேணாலும் இடிந்து விழலாம் . என்ன கேரண்டி ...? ரயிலில் பயணம் செல்லவது கூட பாதுகாப்பானது கிடையாது. எப்போது வேணும் என்றாலும் தடம் புரளலாம் . விமான பயணம் கேக்கவே வேணாம் ,எப்போ வேணாலும் யார் வேணுமானாலும் கடத்தி கொண்டு போய் ஏதாவது அடுக்கு மாடி கட்டிடத்தில் மோத விடலாம்.

பாலம் , ரயில் , விமானம், பஸ், பைக் , இத்யாதி இத்யாதி எல்லாம் Necessary Evil என்று நமது வாழ்க்கைக்கு தேவையான அல்லது அத்தியாவசமான கேடு என்று வகைப் படுத்தலாம். இவைகள் இல்லாமலும் வாழ முடியும் . ஆனால் எவ்வளவு பேர் முன் வருவார்கள் என்பது தான் கேள்வி. ? இவைகளில் ஒளிந்து இருக்கும் ஆபத்துக்கள் எத்தனை, எத்தகையது , அவற்றில் இருந்து நம்மை எப்படி காப்பாற்றி கொண்டும் ,இதனுடைய முழு பயனையும் அடைவது எப்படி என்பதில் தான் இருக்கிறது நம்முடைய சாமார்த்தியம். ஆரம்ப காலத்தில் பயன்படுத்திய மிதி வண்டியில் பிரேக் என்பதே கிடையாது. பிரேக் இல்லாத வண்டியை ஒட்டி, நிறைய வாங்கி கட்டி கொண்ட ஒரு ஆசாமி பிரேக்கை வைத்தான். இதில் ஆபத்து விகிதம் கொஞ்சம் தான் , ஆனால் அணு உலையில் மிக அதிகம்.

 
அமெரிக்காவின் திரி மைல் , ரசியாவின் செர்நோபிள் அணு உலைகள் போன்றது கிடையாது கூடங்குளத்தில் அமைந்திருக்கும் அணு உலை. அது மிகவும் பாது காப்பானது. யார் இந்த உத்திரவாதத்தை தருவது, ? தரத்தை யார் மதிப்பிடுவது ? என்னென்ன பாது காப்பு உள்ளது ? அணு உலை எப்படி இயங்குகிறது போன்றவைகளை என்னுடைய அடுத்தடுத்த பதிப்புகளில் போடுகிறேன்...!

ஆணி புடுங்கிற வேலை கொஞ்சம் இருக்கு , முடிச்சுட்டு வந்துருறேன். ஓகேயா...! 

அதுவரை வவ்வால் பார்வையின்
கூடன்குளம் அணு உலை அரசியலும், சுயநலமும்- ஒரு மாற்றுப்பார்வை பதிவை படித்து பாருங்கள் ...!
Blogger Widgets