Pages

Friday, September 30, 2011

திரை விமர்சனம்-"முரண்"

இரு வேறு கேரக்டர் கொண்ட இரண்டு நபர்கள் சந்தித்துக் கொண்டால் ,அவர்கள் வாழ்வில் ஏற்படும் திருப்பங்கள் என்ன என்பதை "முரண்" காட்டுகிறது. இயக்குனர் சேரன் இதில் ஒரு நடிகராக மட்டுமே வந்துள்ளார். ஒன்றும் வித்தியாசமாக நடிப்பில் காட்ட வில்லை .முந்தியப் படங்களில் காட்டிய அதே மேனரிசம் தான் இந்த படத்திலும். பிரசன்னா காரில் லிப்ட் கேட்டு போகிறார் சேரன், தன் தலை மேல் ஏழரை நாட்டியம் ஆடபோகிறது என்று தெரியாமலேயே.அப்போது கதை வேகம் எடுக்க ஆரம்பிக்கிறது. பிரசன்னாவும் ,சேரனும் மாறி மாறி ஒருவர் தன்மானத்தை ஒருவர் தூண்டிவிடும் படியாக பேசிக்கொள்கிறார்கள் . இதில் சேரன் கொஞ்சம் அமைதியான ஆள். இருந்தாலும் பிரசன்னா அவரை தூண்டி விடுகிறார். படத்தில் காமடி ட்ராக் எதுவும் தனியாக போட வில்லை. ஆனாலும் சேரனின் அப்பாவியான கேரக்டர் நடிப்பில் நமக்கு சிரிப்பு வருகிறது.




பிரசன்னா ,அஞ்சாதே ஆகட்டும் இல்ல இந்த முரண் ஆகட்டும், அமைதியான புத்திசாலி வில்லனாக நன்றாக செய்துள்ளார். சேரனுக்கும் அவரின் மனைவிக்கும் ஒத்து வராது , பிரசன்னாவிர்க்கும் அவர் அப்பாவுக்கும் ஒத்து வராது . "நான் உங்கள் மனைவியை கொலை செய்கிறேன் பதிலுக்கு என் அப்பாவை நீங்கள் கொலை செய்யுங்கள்" என ஒரு டீல் பேசுகிறார். அந்த டீல்க்கு சேரன் ஒத்துக்கொள்கிறாரா, பிரசன்னா அவரை எப்படி ஒத்துக்கொள்ள வைக்கிறார் , அதை சேரன் எப்படி செய்து முடிக்கிறார் என்பதை விறு விறுப்பாக காட்டி உள்ளார்கள். கேமராவின் சில கோணங்கள் ,கேமராமேனின் உழைப்பைக் காட்டி உள்ளது. கார் சேசிங் , சேரன் உடைந்த பலத்தில் நிற்கும் காட்சி, இப்படி சில உதாரணங்கள் சொல்லாலாம்.

எப்படி காமெடிக்கு என்று தனி ட்ராக் இல்லையோ அதே மாதிரி பாடலே இல்லாமல் படத்தை எடுத்து இருக்கலாம். ஒரு பாட்டு கூட கேக்கும் படியாக இல்லை. அதுவும் கிளைமாக்ஸ்க்கு முன்னாடி நடக்கும் பாட்டு, தேவையே இல்லை. பாடல் கூட எதோ தெலுங்கு படத்தின் பாடலை அப்படியே தமிழாக்கம் செய்தது போல இருந்தது. பின்னணி இசை பரவாயில்லை.கிளைமாக்சை ஓரளவு நம்மாள் யூகிக்க முடிகிறது. அப்படி இல்லாமல் வேறு ஏதாவது வித்தியாசமாக செய்து இருந்ததால் நன்றாக இருந்து இருக்கும். பிரசன்னா- லிண்டா(ஹரிப்பிரியா) , சேரன்- லாவண்யா(நிஹித்தா ) ஜோடிகள். கதா நாயகிகள் இருவரும் காதல் வயப்படுவது கூட கொஞ்சம் அவ்ளோ சீக்கிரம் ஒத்துக்கொள்ள முடியாததாக உள்ளது. லாவண்யா கல்யாணம் ஆனா சேரனுடன் சுத்துவது கொஞ்சம் லாஜிக்காக உதைக்கிறது. பிரசன்னாவின் தந்தையை கொல்ல சேரன் பின்னாடியே follow பண்ணுகிறார் ,5 அடி பின்னால் தான் follow பண்ணுகிறார் ,ஆனால் ஒரு முறை கூட அவரை பின்னால் திரும்பி பார்க்க வில்லை . இது கொஞ்சம் செயற்கையாக உள்ளது.

ஒரு விஷயம் என்னை பொறாமைப் பட வைத்தது ,சேரன் போட்டு வரும் காஸ்ட்யூம்கள் . மனுஷன் வித விதமான டீ-சர்ட் , மார்டனான சர்ட் என கலக்குகிறார் . இளமையான நபர் பிரசன்னாவா ,சேரனா என சந்தேகம் வரும் அளவிற்கு உடைகளில் கலக்குகிறார். ஒரு சில இடத்தில் கொஞ்சம் ,கொஞ்சம் லாஜிக் இல்லாமல் இருந்தாலும் , வழக்காமான காதல்,மசாலா அடி தடி கதைகளுக்கு இடையில் இப்படி ஒரு மெல்லிய நாடக த்திரில்லர் கதை ஒரு ஆறுதல். மொத்தத்தில் மொக்கை படம் இல்லை. தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.

என் ரேட்டிங் 10 க்கு 7.5.

டிஸ்கி :
ஆன் லைனில் டிக்கெட் செலவு ( 180 @ 2 பேர் + சர்வீஸ் சார்ஜ் ) = 370
பாப் கார்ன் + கோக் (1000 ml )                                                  = 140
காப்பி                                                                                      = 50
பிரெஞ்சு ஃப் ரை                                                                        = 75
                                                                               மொத்தம் = 635
இந்த தடவை , கோக் மற்றும் பாப் கார்ன் நொம்ப அதிகமாக கொடுத்தான். E-square க்கு , Fun -n-Fame பரவாயில்லை. தூரம் கூட கம்மி தான். இத்தன செலவு பண்ணி படம் பாக்கணும்னா , ஒரு பக்கத்து கிட்னிய அடகு வச்சா தான் முடியும் போல இருக்கு.

2 comments:

  1. வித்தியாசமான விமர்சனம். நல்லாயிருக்கு..

    ReplyDelete
  2. ரொம்ப காஸ்ட்லியான விமர்சனமும் கூட.(635 அதிகம்தான்)

    ReplyDelete

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets