Pages

Wednesday, September 21, 2011

எங்கேயும் எப்போதும்

எங்கேயும் எப்போதும்

நொம்ப நாளைக்கு அப்புறம், இங்கே பக்கத்தில் தமிழ் படம் போட்டு இருந்தார்கள் . ஏ.ஆர். முருகதாஸ் என்பதால் படம் பார்க்க போனோம். உண்மையில் படம் அருமை. அதுவும் படம் ஆரம்பத்தில் வரும் அந்த பஸ் விபத்து சீன், அதுக்காகவே டைரக்டருக்கு ஒரு சபாஸ் போடலாம். கொஞ்சம் எசகு பிசகாக எடுத்து இருந்தாலும் அந்த விபத்து காட்சி சப்புன்னு போய் இருக்கும். இப்படி ஒரு விபத்துல எப்படி இவங்க எல்லோரும் போய் மாட்டுனாங்க என்று படம் பார்க்கும் ஆவலை தூண்டி விட்டது அந்த விபத்து காட்சி. 

ஹாலிவுட்டில் , Final Destination என்ற படத்தில் விபத்து ஏற்படுவதை மிக தத்ருபமாக காட்டி இருப்பார்கள். அதே மாதிரி ஒரு சீனை தமிழ் படத்தில் பார்ப்பதில் மிக மகிழ்ச்சி . அனன்யா - சர்வா ஒரு ஜோடி. ஜெய் -அஞ்சலி இன்னொரு ஜோடி. அனன்யா சென்னைக்கு வந்து பஸ் ஏறுவதில் சிக்கல் , உதவிக்கு அக்கா மூலம் சர்வாவை கூடவே கூட்டிக்கொண்டு சுற்றுகிறார். இவர்களுக்கு இடையில் நடக்கும் டயலாக்குகள் மிக இயல்பாகவும் நகைச்சுவையாகவும் இருக்கிறது. வசனம் யார் என்று தெரியவில்லை. ஆனால் போர் அடிக்காமல் வளவள என்று இழுக்காமல் இயல்பாக கொண்டு சென்றதுக்கு ஒரு சபாஸ். அனன்யாவுக்கு சர்வா மீது இயல்பாக காதல் வருவதை நாம் ஏற்றுக் கொள்லலாம் . முதல் மாத சம்பளத்தில் அப்பாவுக்கு ஜீன்ஸ் பேன்ட், சர்ட் ( சர்வா .போட்டிருந்த மாதிரியே ...) என எடுத்து கொடுப்பது, சர்வாவுக்கு பேர் தேடுவது என காதல் நகைச்சுவை.


ஜெய் -அஞ்சலி ஜோடி இவர்களை விட வித்தியாசம் . அஞ்சலி ஒரே வாயாடி பெண்ணாக வருகிறார். ஜெய் காதலியை வாங்க ,போங்க என்று அழைக்கும் அப்பாவியாக வருகிறார். அஞ்சலி ஜெய்யை படம் முழுக்க நன்கு களாய்கிறார். அங்காடி தெருவில் வந்த அழு மூஞ்சி பொண்ணா இது என்று ஆச்சிரியப் பட வைக்கிறார். படம் முழுக்க ஒரு மெல்லிய நகைச்சுவை இழை ஓடுகிறது. வசனம் அந்த மாதிரி. ஒரு லாங் ரூட் பஸ்சில் எந்த மாதிரியான விஷயங்கள் நடக்கும் என்பதை மிக நுனுக்கம்மாக பதிவு செய்ய பட்டு இருப்பது நல்ல விஷயம். இதன்னாலேயே படம் நம்முடைய இயல்பான வாழ்க்கையுடன் ஒட்டி விடுகிறது. இந்த இரண்டு ஜோடியும் எப்படி அந்த பஸ் விபத்தில் ஒன்று சேருகிறார்கள் என்பது தான் கதை. இதை இயக்குனர் சிறப்பாக செய்து இருக்கிறார். முருகதாஸ் மீது என்னக்கு இருந்த நம்பிக்கையை காப்பாற்றி விட்டார். "என்னது திருச்சி வந்துருச்சா"  என தூக்கத்தில் திடும் என அடிக்கடி எழுந்திருக்கும் நபர், கல்யாணமான புது மனைவியை பிரிய மனமில்லாமல் அடிக்கடி பஸ்சில் இறங்கி ஏறும் நபர், காலேஜ் பெண்ணும் பையனுக்கும் இடையே ஏற்படும் மெல்லிய காதல் , ஐந்து வருடங்களுக்கு பிறகு தன் குழந்தை மகளை பார்க்க போகும் துபாய்  அப்பா என ஒவ்வொருவரும் கச்சிதமாக நடித்து உள்ளார்கள். காலேஜ் பையன் ஜி.ஹெச் ல் அந்த காலேஜ் பெண்ணின் விவரம் தரும் போது சோகம் நம்மையும் பரிதாப பட வைக்கிறது.அதே சமயம் கண்டிப்பாக அந்த துபாய் அப்பா விபத்தில் இறக்க தான் போகிறார் என்பது ஒரு மாதிரியாக யூகித்து விட முடிகிறது.


   படத்துக்கு பின்னணி இசை ஒரு பிளஸ் . அதுவும் ஜி.ஹெச் ல் அஞ்சலி ஜெய் உடலை பார்க்கும் போது சுத்தமாக பின்னணி இசையே இல்லை. பின்னர் அவர் "கதிரேசா....." என்று கதறும் போது , அந்த தாக்கம் நம்மையும் உணர வைக்கிறது. பின்னணி இசைக்கு இந்த இடத்தில் ஒரு சபாஸ் போடலாம் .  மொத்தத்தில் திரை அரங்கத்துக்கு சென்று பார்க்க வேண்டிய திரை படங்களில் இதுவும் ஒன்று. படத்தில் செந்தில்லாக வரும் ( அஞ்சலியை 5  வருடமாக காதலித்து நொந்து போய் விட்டவர் ) ,நபர் நமக்கு அறிமுகமானவர் தான் . நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் சிறந்த நடிகருக்கான பரிசை மதன் , மற்றும் பிரதாப் போத்தன் மூலம் பெற்றவர்.. இந்தப் படத்தில் அவ்வளவாக சீன் இல்லை என்றாலும்  அவருக்கு நல்ல எதிர் காலம் உண்டு. 

டிஸ்கி :
ஆன் லைனில் டிக்கெட் செலவு ( 180 @ 2 பேர் + சர்வீஸ் சார்ஜ் )      = 370
பாப் கார்ன் + கோக் (400 ml )                                                = 140
ice cream                                                                         =  60
பைன் ஆப்பிள் மிட்டாய்                                                          =  80
                                                                           மொத்தம் = 650
இவ்ளோ காஸ்ட்லியா இருந்தா ஏன் திருட்டு DVD வராமல் இருக்கும். அடுத்த தடவை என்னுடைய பைக்க வித்தா தான் படம் பார்க்க முடியும் என நினைக்கிறேன்.

   

No comments:

Post a Comment

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets