Pages

Tuesday, June 28, 2011

வகைக் கெழுவும் நானும் ...! (சமச்சீர் கல்வி...!)

சமசீர் கல்வித்திட்டத்தை பரிசீலனை செய்ய தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையீன்  பேரில் ஒரு நிபுணர் குழுவை அமைத்து உள்ளது. நல்லது நடந்தால் சரி. நிபுணர்கள் எந்தவிதமான பார பட்சமும் இன்றி ஒரு நல்ல பாட திட்டத்தை தந்தால் நல்லது.அவர்களுக்கு என்னுடைய சிறிய வேண்டுகோள் கீழே உள்ளது:

(UPDATE: ஒரு வழியாய் சமச் சீர் ,கொண்டு வந்துட்டாங்கையா ...மக்கா ...! )

தமிழ் - நன்கு எழுத்து பிழை இல்லாமல் ,எழுதமுடிகிற மாதிரி புத்தகமும் பாடமும் இருக்க வேண்டும். 'அறுசீர் கடி நெடிலடி கலந்து ஆசிரியப்பாவில் தொடங்கி குரள்பா வழியாக கலிப்பாவில் 'பாட்டு அல்லது கவிதையோ ஒரு ஆறாம் வகுப்பு மாணவன் இல்ல பத்தாம் வகுப்பு மாணவனுக்கு தேவை இல்லை என்பது என்டுடைய சொந்த கருத்து." தமில் வாள்க..! வழர்க" என்ற நிலைக்கு போகாமல் காப்பாத்தனும். பைத்தியம் - பயித்தியம் வித்தியாசம் தெரியற மாதிரி இருக்கட்டும் புதிய சமச்சீர் கல்வி.கதை ,கட்டுரை எழுத மாணவர்களை ஊக்கு விக்கலாம் .

ஆங்கிலம் - மனப்பாடம் செய்து ஒப்பிப்பது மட்டுமே ஆங்கிலம் என்று இல்லாமல்,அடிப்படை இலக்கணம் எங்கனம் எப்படி உபயோக படுகிறது என்பதை திறம் பட சொல்லி தர வேண்டும் . இங்கேயும் கட்டுரை எழுதுவதை ஊக்கு விக்கலாம்.

அறிவியல் - அன்றாட வாழ்வில் எப்படி எல்லாம் அறிவியல் பயன்படுகிறது என்பதை நல்ல உதாரனதுடன் எடுத்து சொல்ல வேண்டும். வெறும் 'மியசிஸ் ' 'மைடசிஸ் ' என்று ஜல்லி அடிக்காமல் இன்டர்நெட்டில் இருந்து நல்ல நல்ல படங்களாக காட்டி அதை புரிய வைக்க வேண்டும். மைடோகாண்டிரியாவை ஒரு ரிப்பன் மாதிரி தான் கற்பனை செய்து வைத்து இருந்தேன். அதே மாதிரி பிரயோபைட்டா, டேரிட்டோபைட்டா ஒரு இருதய வடிவ இலை மாதிரி யூகம் செய்து வைத்து இருந்தேன்.ஆனால் உண்மையில் அதன் வடிவம் வேறு.பால்மர் வரிசை , நியுட்டன் வளையம், இதை எல்லாம் பார்க்காமலே படித்து வந்தேன்.அப்படி இல்லாமல் நிறைய ஆய்வக செயல்கள் இருக்கும்மாறு வேண்டுகிறேன்.

கணிதம்- ஒரு முக்கோணத்தின் இரண்டு பக்கங்கள் அதன் மூன்றாவது பக்கத்தின்...போன்ற பிதாகரஸ் தேற்றங்கள் நடை முறை வாழ்க்கைக்கு எப்படி உதவுகிறது என்பதை விளக்க வேண்டும்.பாய்சன் பரவல் ,அந்த தேற்றம் ,இந்த தேற்றம் எல்லாம் எப்படி உபயோக படிகிறது என்பதை ஒரு இரண்டு வரிகளில் எடுத்துச் சொன்னா நொம்ப புண்ணியமா போகும். வகை கெழு, தொகை கெழு , எல்லாம் எங்கு எப்படி நமக்கு பயன் படுகிறது என்பது தெரியாமலே படித்தேன் நான்.


என் பரிச்சை பேப்பர் 
உத்திர  பிரதேசம் எங்கு உள்ளது என்பது தெரியாமலேயே நான் அங்கு கரும்பு விளைச்சலைப் பற்றி படித்தேன். ஒவ்வொரு வகுப்பிலும் கண்டிப்பாக ஒரு இந்திய வரைபடமும் , உலக வரைபடமும் இருக்க வேண்டும்.எல்லாவற்றையும் விட ஆசிரியர்கள் தங்களுடைய அறிவை இந்த காலத்திற்கு ஏற்ப அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.அணுக்கரு உலையை பற்றி பாடம் எடுக்கும் போது கூடங்குளம், ஜப்பானின் கதிரியக்கம் ஆகியவற்றையும் சொல்ல வேண்டும்.

லீவில் உள்ள போது +2 க்கு ரிசல்ட் வந்து இருந்தது . நிறைய பேர் சதம் அடித்து இருந்தார்கள். வழக்கம் போல பெண்கள் பையன்களை விட அதிக மதிப்பெண்கள் வாங்கி இருந்தார்கள். எப்படி இதனை பேர் சதம் அடித்தார்கள் என்று தெரிய வில்லை. ஒன்று பாடத்  திட்டம் ரொம்ப எளிமையாக இருந்திருக்க வேண்டும் இல்லை எனில் பேப்பரை எளிதாக திருத்தி இருக்க வேண்டும்.இயற்பியல் , வேதியல் , உயிரியல் போன்ற பாடத்திலும் சதம் போட்டு இருந்தார்கள். நான் படித்த காலத்தில் கணிதத்தில் சதம் எடுத்தால் அவனை  தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.இண்டர்நெட், டிவி ,மீடியா என்று டெக்னாலஜி வளர்ந்துவரும் இந்த கால கட்டத்தில் பாடங்களை புரிந்து கொள்வது என்பது அவ்வளவு கடினமான காரியம் இல்லை.வாத்தியார் நல்லா புரியும் படி சொல்லி தர வில்லை என்றால் , இன்டர்நெட்டில் வேண்டிய அளவிற்கு அதை பற்றிய தகல்கள் அவனுக்கு கிடைத்து விடும்.( கிராம புற மாணவர்களை தவிர )


என் கணக்கு பேப்பர் ...!
நான் படித்த போது பாட சம்பந்தமான எந்த தகவலுக்கும் ஆசிரியர்களையே சார்ந்து இருந்தோம். மற்றவர்களுக்கு எதுவும் தெரியாது. வாத்தியார் என்ன சொல்லுகிறாரோ அது தான் வேத வாக்கு .ஆசிரியர்களும்  நன்றாக தான்  சொல்லி கொடுத்தார்கள்.அனால் சில பேர் அப்படி இல்லை. உதாரணமாக எனக்கு சொல்லி கொடுத்த கணக்கு வாத்தியார். கணக்கு என்றாலே எனக்கு வேப்பங்காய்யை சாப்பிட்டுவிட்டு  வேப்பெண்ணெய்யை குடித்த மாதிரி நான் பீல் பண்ணுவேன்.+2 வில் நான் எடுத்த மார்க் 74. நல்ல மார்க் தானே என்று நினைக்க வேண்டாம் இது 200க்கு 74. பார்டர் மார்க்கில் தப்பித்து பாஸ் ஆகி நிறைய ரோட்டோர கடவுள்களுக்கு  நேர்த்திக்கடன் செய்தேன்.ஆனால் மற்ற பாடத்தில் சொல்லிக்கொள்ளும் விதமான மதிப்பெண்கள் (இயற்பியல்-179,வேதியல்-181,உயரியல்-177).எதோ "அணிகளும் (Matrix)" , "வகை கெழு"வும்( Differntial Calculation )," வெக்டர் (vector)"ரும் கொஞ்சம் கை கொடுத்து காப்பாத்தி விட்டது.'சிக்கல் எண்கள்'( complex Numbers ) என்ற ஒரு சமாசாரம் கடைசி வரை புரியவே இல்லை.'நிகழ தகவு ' என்ற பெயரில் ராஜா ,ராணி ,என்று சீட்டு கட்டு விளையாட்டை எடுத்துக்காட்டாக காட்டினார்கள். சீட்டு கட்டு விளையாட சொல்லி தாராங்களோனு  ஒரு கட்டத்தில் எனக்கு சந்தேகம் வர ஆரம்பித்து விட்டது. அது போக ஏதோ 'அபிலியன் குலம்' 'சக்கர குலம் ' என்றும் நடத்தினார்கள். ஒரு மண்ணும் புரிய வில்லை. கணக்கு பாடத்துல எங்கடா குளம் எல்லாம் வருது என் நொந்து போய் அந்தியூர் ஏரியில் ஒரு குளியல் போட்டுட்டு வீட்டுக்கு போய் சேர்ந்தேன்.

கதை எழுதியாவது பாஸ் ஆய்டுவோம்ல ..!
 இந்த வகைக்கெழுவும் ,தொகைக்கெழுவும் எப்படி நம்ம வாழ்க்கைக்கு உதவுகிறது என்பது பற்றி ஒன்றும் ஆசிரியரால்  விவரிக்க முடியவில்லை அல்லது சொல்ல வில்லை. சும்மா அப்படியே கூட்டுவதும் ,கழிப்பதும் என்பதில்  எனக்கு உடன்பாடு ஏற்ப்பட வில்லை. மாறாக சுண்ணாம்புக் கரைசலில் மஞ்சள் பொடியை போட்டால் அது சிகப்பு நிறமாக மாறும் அதற்கு காரணம்...என்கிறமாதிரியான அறிவியல் பிடித்து இருந்தது.  ஒவ்வொரு பாடத்தில் கடைசியில்'செய்து பார் " என்று ஒரு செய்முறை கொடுத்து இருப்பார்கள் .அநேகமாக அனைத்தையும் நான் செய்து பார்த்தது உண்டு. அப்படி செய்து பார்த்து வீட்டில் நிறைய பல்ப் வாங்கியது உண்டு.

தண்ணீரில் மின்சாரத்தை பாய்ச்சினால் அது ஆக்ஸிஜன்னாகவும் ,ஹைட்ரஜன் வாயுவாகவும் பிரியும் என்றும் அது போக ஹைட்ரஜன் வாயு காற்றை விட லேசானது, எனவே ஹைட்ரஜன் வாயு நிரப்பப்பட்ட பலூன் மேலே பறக்கும் என்பது என்னை மிகவும் கர்ந்தது. மின்சாரத தானே பாச்சனும் ,காச பணமா பாச்சிட்டா போதுன்னு ஒரு சொம்பு நிறைய தண்ணிய நிரப்பி ,ப்ளக்ல ஒயர சொருகி சொம்புல போட்டேன் .பட்டுன்னு ஒரு பெரிய சத்தத்தோட பீஸ் போனது தான் மிச்சம். வாத்தியார கேட்டதுக்கு நீ "ஏசி  கரண்ட்ட போட்டுட்ட , டீசி கரண்ட்ட கொடுக்கணும் , அப்பத்தான் அப்படி வரும்"னு சொன்னார். விடுவேனா ரேடியோக்கு இருந்த டீசி எலிமினேட்டரை கட் பண்ணி மறுபடியும் பரிசோதனையை செய்து பார்த்தேன் .குமிழி குமிழியாக ஹைட்ரஜன்னும், ஆக்ஸ்சிஜனும் ஏதோ கொஞ்சம் வந்தது.ஒரு மெழுகு வர்தியை பக்கத்தில் வைத்து கொண்டு குமிழியை உடைக்கும் போது ஹைட்ரஜன் வாயு பட் பட் என சத்தத்துடன் எரிந்தது .அன்று நான் ஒரு பெரிய சயன்டிஸ்ட்  ஆனது போல உணர்ந்தேன்.

சில கெமிக்கல் ரியாக்ஷன் மிக உயந்த வெப்ப நிலையில் தான் நடக்கும். அதற்க்கு கார்பன் ஆர்க் ஒளி பயன்படுத்த படுகிறது,ஆர்க் ஒளி மிகவும் பிரகாசம் என்பதை படித்து விட்டு , அது எவ்வளவு பிரகாசம் என்று பார்க்க ஆசை.ரேடியோக்கு போடும் பட்டரி 2 யை உடைத்து உள்ளே இருந்த கார்பன் குச்சியை எடுத்து,ஒரு அட்டையில் துளை இட்டு சொருகி , பின்னர் ஒன்றை லைவ் வயரிலும் மற்றதை நியூட்டரிலும் கொடுத்து இரண்டையும் முட்டி பார்த்தேன் .கம்பி மத்தாபில் வரும் தீப்பொறி போல பொறிகள் வந்து உடனே பீஸ் போய்விட்டது . பீஸ் வயரை போட்டு மறுபடியும் செய்து பார்த்தேன் ,பயனிலை மறுபடியும் பீஸ் போனது.ஊரில் திருவிழாவுக்கு ரேடியோ போடும் போது, ஒரு ஒரு வயரை ஆம்பிளைபையர்ரில் இணைத்து ஒரு கம்பி மூலமாக நிலத்தில் சொருகி இருப்பார்கள் .அதே மாதிரியும் செய்து பார்த்தேன். எந்த பயனும் இல்லை இம்முறை பீஸ் போக வில்லை .ஆனால் அந்த மாதம் கரண்ட் பில் மும்மடங்காக வந்தது. அம்மாவிடம் செம டோஸ் வாங்கினேன்.

இதற்க்கு நடுவில் தியேட்டர்களில்லும் கார்பன் குச்சி தான் பயன் படுத்த படுகிறது என்பது தெரிய வந்தது. என் பிரண்டோட மாமா அந்தியூர் செல்லக்குமார் தியேட்டரில் ஆப்பரேட்டர்றாக இருந்தார்.அவரிடம் கெஞ்சி கூத்தாடி எரிந்து போய் மிச்சம் மீதி இருந்த நான்கு கார்பன் குச்சிகளை வாங்கி வந்தேன். அவரிடமே முனைகளை நன்கு கூர்மையாக செதுக்கி கொண்டு வந்து இருந்தேன்.வீட்டில் ஒருவரும் இல்லாத நேரம் பார்த்து ( பக்கத்துக்கு வீட்டுக்கு அம்மாவும் ,தங்கையும் டிவி பார்க்க போய் இருந்தார்கள் ) வழக்கம் போல ஒன்றை லைவ் வயரிலும் மற்றதை நியூட்டரிலும் கொடுத்து இரண்டையும் முட்டி பார்த்தேன். ஒரு சின்ன தீப்பொறிக்கு பிறகு  பீஸ் ஒய் விட்டது. இது சரிபட்டு வராதுன்னு ஒரு பெரிய மொத்தமான வயரை பீஸ் கட்டையில் போட்டேன்.இப்போது இரண்டு கார்பன் குச்சிகளையும் மெதுவாக அருகில் கொண்டு வந்து முட்டினேன். அவ்வளவு தான் 'புஸ் னு ஒரு சத்தம் வந்தது மட்டும் தான் கேட்டது, கண்ணு சுத்தமா தெரிய வில்லை.கண்ணில் படீர் என்று பிளாஷ் அடித்து ஞாபகம் வந்தது.கூடவே வயர் கருகும் வாசம் வேறு.ஒரு 10 நிமிடங்களுக்கு ஒன்னுமே புரிய வில்லை.கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு வந்த போது தான் புரிந்தது ,பீஸ் கட்டையில் இருந்து மீட்டர் வரை எல்லா வயர்களும் எரிந்து சாம்பல் ஆகி போன விஷயம்( வீடு வாடகை வீடு வேற,..)கருகிய புகை வாசம் பக்கத்து வீடு வரை எட்டி, சந்தேகப்பட்டு அம்மா வந்து பார்த்த போதே நிலைமையை யூகித்து விட்டார்கள். அன்று வாங்கிய அடி தான் ,இன்று ஒரு பெரிய விஞ்ஞானியை இந்த உலகம் இழந்து விட்டதுக்கு காரணம்.ஆனால் கார்பன் ஆர்க்கின் பிரகாசம் எவ்வளவு என்று தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

கொஞ்ச நாள் அடங்கி இருந்தேன், பின்னர் மறுபடியும் ஆரம்பித்தேன். குழி ஆடி, குவி ஆடி (concave lense. convex lense )யை வைத்து சினிமா படம் காட்டுவது,மா கொய்யா  செடிகளை ஒன்றக ஒட்டி ஒட்டு செடிகள் ஆக்குவது ,கலைடாஸ்கோப் செய்வது,சிறிய டேப் ரிக்கார்டர் மோட்டாரை கொண்டு ட்ரெயின்,பஸ் போல செய்வது,செடிகளுக்கு டேப் ரிக்கார்டர் மோட்டாரை கொண்டு தண்ணீர் பாச்சுவது (சொட்டு நீர் பாசனம் ), வின்ட் மில் செய்தது, ....இப்படியாக நீண்டது எனது பரிசோதனைகள்.உயர் வகுப்பு வர வர சைட் அடிப்பது பிரதான காரியமாக மாறிபோய் ,இப்போ இந்த பதிவ போட்டுட்டு இருக்கேன்.

4 comments:

  1. அருமையா எழுதியிருக்கீங்க அண்ணே. கலக்கல்
    (நானும் ஐஸ் வைப்பேன்)

    ReplyDelete
  2. உங்க பரீட்சை பேப்பர் பாத்ததுல ஒரு விஷயம் புரியுது... அப்பவே நீங்க ப்ளாக் எழுத practice பண்ணி இருக்கீங்க...:))

    Jokes apart... நல்ல வேண்டுகோள்கள்... நடைமுறைக்கு வந்தால் நலம் தான்... பார்ப்போம்

    ReplyDelete
  3. @ CPS : வணக்கம் CPS .நன்றி
    @ ஜெய் சங்கர் : நொம்ப ஐஸ் வச்சிர போறீங்க ஜெகன் ..!
    @ திருச்சிராப்பள்ளி தமிழச்சி : நொம்ப கோவமா இருப்பீங்க போல இருக்கு. அப்படி நான் சமச்சீர் பத்தி என்னத்த தான் சொல்லிப்போட்டேன்.யாருக்கும் நான் வக்காலத்து வாங்க வில்லை . ஒரு நல்ல பாடத்திட்டம் கொண்டு வந்ததால் நல்லா இருக்கும்னு தானே சொல்லி இருக்கேன். நான் பட்ட /படுற கஷ்ட்டம் இப்போ இருக்கிற மாணவர்களுக்கு வரக்கூடாதுன்னு நினச்சு தான் அப்படி சொன்னேன். யாரு மேலயோ இருக்குற கோவத்தை இங்க காட்டீடிங்க சரி போகட்டும் விடுங்க. அடிக்கடி நம்ம கடை பக்கம் வந்துட்டு போங்க.
    @ அப்பாவி தங்கமணி அட அப்படி ஒன்னும் இல்லீங்க ...! கடையாண்ட வந்துட்டு போனதுக்கு நன்றி.

    ReplyDelete

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets