Pages

Monday, June 27, 2011

ஊழல்

photo courtesy :http://www.indiavision.com
கொஞ்ச நாளா லோக் பால் லோக் பால்னு பேப்பரல பார்த்து ஏதோ புதுசா ஒரு வகை பால்னு நினச்சுட்டேன். சரி என்ன தான் இதுல விஷயம் இருக்குது பார்ப்போமே என்று அப்படியே பேப்பரை மேஞ்சு பார்த்தேன்.அடங் கொய்யால ...இம்ம்புட்டு விஷயம் இருக்குதான்னு இப்ப தானே தெரியுது . நமக்கு இந்த பேப்பர் படிக்கிறது (அதுவும் இங்க்ளிபீசுல பேப்பர் படிகிறதுனா... காத தூரம் ஓடுவேன்...!), பொது அறிவ வளர்திக்கிறது ,அறிவு சம்பந்தம்மான எந்த விசயமும் அவ்வளவா என் கிட்ட நெருங்க விடாம பார்த்துக்குவேன் .எனக்கு தெரியாத மேட்டர் எதுவும் இல்லை என்பது எனது எண்ணம்.

லோக் பால் சட்டத்தை நமது இந்திய அரசாங்கம் கடந்த 45 வருடங்களாக ,எப்பாடு பட்டாவது நிறைவேத்த கூடாதுன்னு இம்புட்டு நாள் இழுத்தடிசுட்டு இருந்து இருக்கு.இந்த விசயத்துல எல்லா கவர்ன்மெண்ட்டும் ஒரே குட்டைல ஊறின மட்டைகள்.ஊழலை ஒழிக்க CBI, CVC இவங்க ரெண்டு பேரே போதுமானது என்பது எனது கருத்து, ஒழுங்கா நேர்மையாக யாருடைய குறுக்கீடு இல்லாமல் இருந்தால்.ஆனால் இந்த ரெண்டு விசயமும் அவ்வாறு இல்லை. CBI எண்பது ஒரு சுதந்திரமாக இயங்க கூடிய அமைப்பாக இருக்க வேண்டும் .அனால் அவ்வாறு இல்லாமல் மதிய அரசாங்கத்தின் கீழ் இயங்கி வருகிறது.

 

இவிங்க விசாரன பண்ணுற லட்சணம் தான் ஊர் ஒலகத்துக்கே தெரியும் ,அத நான் வேற சொல்லி நாற அடிக்க வேண்டாம்.CVC ஒரு தனிப்பட்ட அமைப்பு தான் . தவறு செய்யும் அதிகாரிகளை தட்டி கேட்க்கும் அதிகாரம் உண்டு. ஆனா பாருங்க இந்த 2G விசயத்துல அவிங்க எப்படி நடந்துட்டாங்கனு நமக்கு நல்லாவே தெரியும். அது போக CVC யால தண்டிக்கும் அதிகாரம் கிடையாது. ஒன்லி பரிதுரை மட்டும் தானாம் . தண்டிக்கும் அதிகாரம் இருந்தாலே நாம அடங்க மாட்டோம் , இதுல ஒன்லி பரிந்துரை மட்டும் தான்னா கேக்கவா வேணும். அதனால ஏதாவது ஒரு அமைப்பு தனிப்பட்ட முறையில் ,தண்டிக்கும் அதிகாரத்துடன் இருந்தால் நல்லா இருக்கும்னு ஏதோ ஒரு புண்ணியவான் யோசனை செய்த்ததால லோக் பால் வந்தது , ஆனா 45 வருடம்... கொஞ்சம் ஓவர் தான்.

கொஞ்ச நாளா அண்ணா ஹசாரே குழுவுக்கும் ,மத்திய அரசாங்கத்துக்கும் ஒரே இழுபறி. ரெண்டு பெரும் என்ன தான் சொல்லுறாங்கனு இங்க கொஞ்சம் பாக்கலாம்.

1. லோக் பால் அமைப்பு :

அண்ணா : 11 பேர் கொண்ட குழு. இந்த 11 பேரை "தேர்ந்தெடுக்கும் கமிட்டி " தேர்வு செய்யும் . தேர்ந்தெடுக்கும் கமிட்டியில் (அ) 2- அரசியல்வாதிகள்
(ஆ) 2 - அரசியல் அமைப்பு அதிகாரிகள் (இ) 4-ஜட்ஜுகள் இருப்பார்கள். CBI, CVC போன்றவை லோக் பால் அமைப்புடன் இணைந்து செயல் படும்.விசாரணை மற்றும் தண்டிக்கும் அதிகாரம் லோக் பாலுக்கு உண்டு.
அரசாங்கம்: 11 பேர் கொண்ட குழு.இந்த 11 பேரை "தேர்ந்தெடுக்கும் கமிட்டி " தேர்வு செய்யும்.ஆனால் 10ல் 6 பேர் -அரசியல்வாதிகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். CBI, CVC போன்றவை லோக் பால் அமைப்புடன் இணைந்து செயல்படாது .விசாரணை மற்றும் தண்டிக்கும் அதிகாரம் லோக் பாலுக்கு இருக்கலாம்.

என் கருத்து : அண்ணாவுடன் ஒத்து போகிறது.10ல 6 பேர் அரசியல்வாதிகள் -இதுல இருந்தே இவங்க எண்ணம் புரியறது . ஏன் அண்ணா சொல்லுற மாதிரி இருந்தா என்னவாம் ...?

2. பிரதம மந்திரி லோக் பாலுக்கு கட்டு பட்டவரா ..?
அண்ணா : கண்டிப்பாக பிரதம மந்திரி லோக் பாலுக்கு கட்டுப்பட்டவர். அதுவும் இல்லாமல் அவர் ஒன்றுக்கு மேற்ப்பட்ட துறைகளை நிர்வாகிக்கிறார் ,எனவே அவரும் இதற்கு கட்டுப்பட்டவர்.

அரசாங்கம் : இல்லை ,பிரதம மந்திரி இதற்கு கட்டுப் பட்டவர் இல்லை . அப்படி செய்தால் அவரின் அன்றாட அலுவலக பணிகள் பாதிக்க படும்.ஒருவர் லோக் பால் சட்டத்தினால்விசாரிக்க படுகிறார் என்றால் அவர் தனது பதவியை ராஜினாம செய்ய வேண்டும் . இது பிரதம மந்திரி செயல் பாட்டை பாதிக்கும்.

என் கருத்து: அதெல்லாம் ஒன்னும் ஆகாது. ஊழல் பண்ணுனா ராஜினாமா தான் பண்ணனும். பிரதம மந்திரினா ஒன்னும் பெரிய கொம்பு இல்ல ... தாராளம லோக் பாலுக்கு கட்டுப்படலாம்


3. நீதி துறை லோக் பால் வரம்பிற்குள் வரலாமா ...?

அண்ணா: ஆமாம் . உயர் ,உச்ச நீதி மன்ற நீதிபதிகளின் ஊழலை விசாரிப்பது மிக முக்கியமானது. ஆனால் 7 பேர் கொண்ட கமிட்டி தான் விசாரிக்கும். இந்த கமிட்டி லோக் பால் கீழே செயல் படும் எனவே வேண்டாத தலையீடுகள் தவிர்க்கப்படும்.

அரசாங்கம் : இல்லை . நீதித்துறையில் தலை இடுவது அவசியம் இல்லை. லோக் பால் மீது விசாரணை நடத்த உச்ச நீதி மன்றத்திற்கு அதிகாரம் உண்டு, உச்ச நீதி மன்ற நீதிபதிகளை விசாரிக்க லோக் பாலுக்கு அதிகாரம் உண்டு . இந்த சுழற்சி முறை நடை முறை சாத்தியம் இல்லை.

என் கருத்து : உச்ச , உயர் நீதி மன்றங்களின் நீதிபதிகளை விசாரிக்க ஒரு உயர் மட்ட குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் . இதில் ஓய்வு பெற்ற நீதிபதிகள், சட்ட
வல்லுனர்கள்,மக்கள் பிரதிநிதிகள் ,ஆகியோர் இடம்பெற வேண்டும். இது அரசாங்கத்தின் செல்பாட்டுக்குள் வராது. இதன் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் . இந்த குழு நீதி துறைக்கு மட்டும் பொருந்தும்.

4. பார்லிமென்டில்- அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் லோக் பாலுக்குள் வருமா...?
அண்ணா: ஆமாம் . அரசியல்வாதிகள் செயல்பாடுகள் ஊழலுக்கு சாதகமாக இருந்தால் அவர் லோக் பாலுக்கு கட்டு பட்டவர் . ( உதாரணம்: பணத்தை வாங்கி கொண்டு அடுத்த அணிக்கு ஓட்டு போடுவது, பணம் வாங்கி கொண்டு ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்காக அல்லது அமைபிற்க்காக பேசுவது,...இப்படி )

அரசாங்கம்: இல்லை .பார்லிமென்ட்டில் நடக்கும் விசயத்தில் தலையிடுவது கூடாது. இது அவர்களின் உரிமையை பறிப்பதாகும் .

என் கருத்து : அண்ணா கருத்து .நரசிம்ம ராவ் ஆட்சியில் பணம் வாங்கி கொண்டு ஓட்டு போட்டு நடந்த ஊழல் விவகாரத்தை நாம் உதாரணமாக கொள்ளலாம்.உரிமை இருக்கிறது என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் என்று இல்லை. கொஞ்ச நாட்களுக்கு முன்னர் ,கேள்வி நேரத்தில் கேள்வி கேக்க பண பேரம் நடந்த விவகாரம் மறக்க முடியாது.

5. தவறு செய்த அரசு அதிகாரிகளை தண்டிக்கும் அதிகாரம் லோக் பாலுக்கு உண்டா...?

அண்ணா: தற்காலிக பனி நீக்கம்,பதவி குறைப்பு , பனி நீக்கம், அபராதம் முதலிய தண்டிக்கும் அதிகாரம் லோக் பாலுக்கு வழங்க பட வேண்டும். ( ஆனால் இப்போது பேச்சு வார்த்தை காரணமாக , வெறும் அபராதம் விதிக்கும் அதிகாரமே உண்டு. இந்த பரிந்துரையை உயர் நீதி மன்றம் விசாரிக்க முடியாது.)

அரசாங்கம்: இல்லை .லோக் பாலுக்கு வெறும் பரிந்துரைக்கும் அதிகாரமே உண்டு. UPSC இந்த பரிந்துரையை பரிசீலிக்கும் .

என் கருத்து : அபராதம் விதிக்கும் அதிகாரம் வழங்கலாம். பனி நீக்கம் , பதவி குறைப்பு போன்றவற்றை அந்தந்த இலாக முடிவெடுக்கலாம் லோக் பாலின் பரிந்துரயீன் பேரில் .ஏன் எனில் பதவி குறைப்பு , பனி நீக்கம் போன்றவற்றில் லோக் பால் இயங்கினால் ,அப்புறம் அந்த இலாகாவிற்கு என்ன வேலை. அதுவும் இல்லாமல் இந்த தண்டனையை எதிர்த்து உயர் ,உச்ச நீதிமன்றத்தை அணுக பணியாளர்களுக்கு உரிமை உண்டு.அப்படி செய்தால் லோக் பாலின் செயல்பாடுகள் பாதிக்கும்.
6. CBI - ஊழல் தடுப்பு பிரிவு லோக் பாலுடன் இணைந்து செயல் படுமா ..?

அண்ணா: ஆமாம் .அப்படி செயல்பட்டால் தான் அமைப்பு சுதந்திரமாக இருக்கும். அதுவும் இல்லாமல் CBI-அனுபவமும் ,ஆட்களும் லோக் பால் உடனடியாக நடைமுறைக்கு வர ஏதுவாக இருக்கும்.

அரசாங்கம்: இல்லை .CBI - ஊழல் தடுப்பு பிரிவு லோக் பாலுடன் இணைந்து செயல்படாது. Group A -(சுமார் 65000) அதிகாரிகளை மட்டும் லோக் பால் கவனித்தால் போதாது .கீழ் நிலை அதிகாரிகளையும் , NGO களையும் கவனிக்க வேண்டும்.( லட்சத்திற்கும் மேல்...!!??. அப்படி செய்தால் தானே..வழக்கு பெருகி போய் , லோக் பால் ஸ்தம்பித்து போய் நிக்கும்.அப்போ 'லோக் பால் எல்லாம் சரி பட்டு வராதுன்னு' சொல்லி கழிக்க முடியும். )

என் கருத்து : அண்ணா கருத்து தான்.
7. லோக் பால் அமைப்பினர் மீது குற்றம் சுமத்த முடியுமா ..?

அண்ணா: எந்த ஒரு இந்திய குடிமகனும் /குடிமகளும் உச்ச நீதிமன்றத்தில் எந்த ஒரு லோக் பால் அமைப்பினர் மீதும் குற்றம் சுமதி விசாரிக்கலாம் . ஒரு தனிப்பட்ட அமைப்பு இந்த குற்ற சாட்டை விசாரிக்கும் , உச்ச நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் .( உதாரணம் :2G- ராசாவை விசாரிப்பது போல ...)

அரசாங்கம் : லோக் பால் அமைப்பினரை சாதாரண புகாரால் விசாரிக்க முடியாது. அரசாங்கத்தின் பரிதுரயீன் பேரில் தான் விசாரணை நடத்த முடியும். இதனால் போலியான ,அனாவசியமான புகார் வருவதை தவிர்க்க முடியும்.

என் கருத்து :அரசாங்க கருத்தின் பிரகாரம் லோக் பால் அமைப்பினரை நியமிப்பதும் /விளக்குவதும் அரசாங்கத்திடம் தான் இருக்கும் ...!!??. அதாவது நாம லோக் பால் அமைப்பினர் மீது நினைத்தாலும் குற்றம் சுமத்த முடியாது. அதுக்கு அரசாங்க உத்தரவு வேணும்.அடங்கப்பா என்ன ஒரு தகிடுதத்தம்...! DMK ஆட்சிக்கு வந்தால் ஒரு லோக் பால் அமைப்பும் ,ADMK ஆட்சிக்கு வந்தால் இன்னொரு லோக் அமைப்பும் இருக்கும். இப்போ இருக்குற சட்ட சபை கட்டிடம் மாதிரி தான் லோக் பால் நிலைமையும் இருக்கும்.


அப்புறம் எதுக்கு லோக் பால் ,லீக் பால் எல்லாம் ... ! போங்கப்பா போய் வேலைய பாருங்க.

 

இதுல இருந்தே அரசாங்கம் என்ன சொல்ல வருதுன்னு நீங்களே புரிஞ்சுக்கோங்க ...! மொத்தத்தில் அரசியல்வாதிகள் சொந்த காசில் சூனியம் வச்சுக்க மாட்டாங்க ...! நொம்ப உஷாரா இருப்பாய்ங்க...!

1 comment:

  1. நல்லா சொன்னீங்க . அணைத்து கட்சி கூட்டத்திலும் ஒருமித்தமான முடிவு எடுக்க முடியாததில் இருந்தே ,இது தெளிவாகிறது.

    ReplyDelete

ஏதாவது சொல்லிட்டு போங்களேன்...!

Blogger Widgets