Pages

Friday, December 31, 2010

சுய விளக்கம்...!

கொஞ்ச நாளா ஆணி புடுங்கிற வேலை அதிகமா இருந்ததால பதிவு போடா முடியாம போயிருச்சு. நம்ம நாட்டு முதல் குடி மகள் புனேக்கு வர போறாங்க இல்லையா அதனால செம வேலை ,அதுவும் இல்லாமல் நான் கொஞ்ச நாள் லீவ்ல தமிழ்நாடு வந்துட்டேன். அட சாமி வாழ்கையே வெறுத்து போச்சு இந்த ஜனாதிபதி யோட வருகைனால். அத பத்துன பதிவ டீடைல்லா அப்புறமா போடுறேன். இப்போ பதிவ போட்டு "நீ ஏன்டா இப்போ முந்திரிகொட்டை மாதிரி ,அரசாங்க ரகசியத்தை போட்டு உடைத்து விட்டாய்னு" ஏதாவது வம்பு வந்து சேர்ந்தாலும் சேரும். புள்ள குட்டி காரன் அதனால ஜனவரி எட்டாம் தேதிக்கு அப்புறம் போடுறேன். நம்ம Air Force Station க்கு தான் வராங்க. கொஞ்ச நாள் பொறுத்துக்குங்க .

நான் எதோ வெட்டியா இருக்கிற நேரத்துல இப்படி பதிவ போட்டு எனக்கு நானே வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி சரி, நம்மள மாதிரி இன்னும் யார் யார் இருக்காங்கனு பார்க்கும் போது தான் ஒரு விஷயம் நல்லா புரிந்தது.  இப்படி பதிவு  போடுற ஒரு பெரிய தலைமுறையே இருக்குதுன்னு அப்பா தான் தெருஞ்சுச்சு. நான் 2008 இருந்து தான் பதிவ போட்டுட்டு இருக்கேன். ஆனா சில பேர் 2006 ல இருந்து இத பண்ணிட்டு இருக்காங்க .
எப்பா, எவ்ளோ பேர் , ஒவொருவரும் எப்படி எல்லாம் பதிவு போடுறாங்க. ஒரு பெரிய தலைமுறை எழுத்தாளர்களே அங்க இருக்காங்க . அது தனி உலகம்னு அப்போ தான் புரிந்தது. என்ன மாதிரி IT பீல்ட்ல இல்லாம பதிவு போடுறவுங்க ரொம்ப ரொம்ப  கம்மி. அப்புறம் பார்த்தா ,பெரும்பாலும் அனைவரும் வெளி நாட்டில் வேலையில் இருப்பவர்கள். சிறு கதைகள் கூட எழுதுறாங்க . போட்டி வைத்து பரிசு கூட கொடுக்குறாங்க. பதிவு போடுறவங்க எல்லோரும் சுஜாதாவை படித்து இருக்காங்க, இன்னும் பெரிய பெரிய இலக்கிய எழுத்தாளர்களை எல்லாம் படித்து இருக்காங்க. நல்லா வேலைல இருந்து கை நிறைய சம்பாதிக்கிறாங்க.

வயறு வலிக்க சிரிக்கிற மாதிரி பதிவு போடுறதுல டுபுக்கு க்கு ஈடு இணை இல்லன்னு தான் சொல்லுவேன். நல்ல அருமையான அறிவு பூர்வமான மற்றும் கருத்த பதிவு செய்றதுல யுவகிருஷ்ணா நல்லா பண்ணுறார். அவர பத்தி தமிழ் விக்கி பீடியால கூட வந்து இருக்கு.பொற்கொடி, இம்சை அரசி , அப்பாவி தங்க மணி  இப்படி பெண் பதிவு போடுரவங்களும் உண்டு. இதுல இவங்க தொடர் கதை, சிறு கதை கூட எழுதுறாங்க. சுவாரசியம் குறையாம கதை எழுதுறாங்க. போஸ்டன் ஸ்ரீராம் ,வெட்டிப்பயல் இவங்க பதிவு போடுறதோட இல்லாம soft ware engineer க்கு நல்ல அறிவுரையும் தருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் "ராமன் எத்தனை ராமனடி""மதுரையம்பதி" மாதிரி பக்தி பதிவு போடுரவங்களும் உண்டு.பரிசல்காரன்- இவர் என்னக்கு பக்கத்துக்கு ஊர் திருப்பூரை சேர்ந்தவராம். ஆனந்த விகடன்ல பார்த்ததுக்கு அப்புறம் தான் இவரை பின் தொடர்ந்துட்டு இருக்கேன். றேடியோஸ்பதி இவர் இலங்கை நாட்டை சேர்ந்தவர்னு நினைக்கிறன். அப்புறம் வால்பையன் நாம மனசுல சில சமயம் என்ன நினைக்கறமோ அதை அப்படியே எழுத்துல சொல்லுறார். கோயம்பதூர்க்கு பக்கத்துல்ல இருக்கார் போல ,முடிஞ்சா நேர்ல பார்த்து சில அறிவுரை வாங்கணும் ( எப்படி பதிவ சுவாரசியமா போடுறதுன்னு தான் ....)

அப்பப்பா ஒவ்வொருவரும் எப்படி எல்லாம் பதிவு போடுறாங்க ....! ஒவ்வொருவருக்கும் எவ்ளோ அறிவு இருக்கு. என்னமாய் பதிவு போடுறாங்க. இவங்க எல்லோரும் இந்த பதிவு போடுறதுல பழம் தின்று கோட்டை போட்டவர்கள். நான் எல்லாம் சின்ன கத்து குட்டி.  பெரிய யானை கூட்டத்துக்குள்ள புகுந்து விட்ட சுண்டெலி மாதிரியான நிலைமை என்னோடது. இவங்களோட பதிவுக்கு முன்னாடி நான் எல்லாம் ஒன்னும் இல்லை.....! சரி எதுக்கு பதிவ போடுறத நிறுத்திக்கலாம் , இவங்க பதிவ வாசித்தா போதும்னு என் நண்பரிடம் ( லிங்கம் )  சொன்னேன். "வேணாம் அருள் continue பண்ணுங்க , உங்கள நான் படிக்கிறேன்னு" சொன்னார். தங்கமானவர்.( அவருக்கு சனி பகவான், எழாம் இடத்தில இருந்து உக்கிரமாய் பார்க்கிறாராம்... ஜாதகம் பார்த்து சொன்னார்...டைம் சரி இல்லையம்...ஹும்ம்ம் ..விதி ...!). சரி இவ்ளோ பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் இருக்கும் போது ,என்னை மாதிரி சுண்டெலிக்கு ஒரு இடம் இல்லாமலா போய்டும்னு பதிவ தொடரலாம்னு இருக்கேன். அடுத்த வருசத்துல இருந்து நல்ல நல்ல பதிவ மட்டும் போடணும்னு முடிவு பன்னி இருக்கிறேன். அதனால் தான் சில பதிவ நான் நீக்கி விட்டேன்.ஒரு ஸ்டாண்டர்ட் வேணும் இல்ல அதான்...!
Blogger Widgets