Pages

Tuesday, June 28, 2011

வகைக் கெழுவும் நானும் ...! (சமச்சீர் கல்வி...!)

சமசீர் கல்வித்திட்டத்தை பரிசீலனை செய்ய தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையீன்  பேரில் ஒரு நிபுணர் குழுவை அமைத்து உள்ளது. நல்லது நடந்தால் சரி. நிபுணர்கள் எந்தவிதமான பார பட்சமும் இன்றி ஒரு நல்ல பாட திட்டத்தை தந்தால் நல்லது.அவர்களுக்கு என்னுடைய சிறிய வேண்டுகோள் கீழே உள்ளது:

(UPDATE: ஒரு வழியாய் சமச் சீர் ,கொண்டு வந்துட்டாங்கையா ...மக்கா ...! )

தமிழ் - நன்கு எழுத்து பிழை இல்லாமல் ,எழுதமுடிகிற மாதிரி புத்தகமும் பாடமும் இருக்க வேண்டும். 'அறுசீர் கடி நெடிலடி கலந்து ஆசிரியப்பாவில் தொடங்கி குரள்பா வழியாக கலிப்பாவில் 'பாட்டு அல்லது கவிதையோ ஒரு ஆறாம் வகுப்பு மாணவன் இல்ல பத்தாம் வகுப்பு மாணவனுக்கு தேவை இல்லை என்பது என்டுடைய சொந்த கருத்து." தமில் வாள்க..! வழர்க" என்ற நிலைக்கு போகாமல் காப்பாத்தனும். பைத்தியம் - பயித்தியம் வித்தியாசம் தெரியற மாதிரி இருக்கட்டும் புதிய சமச்சீர் கல்வி.கதை ,கட்டுரை எழுத மாணவர்களை ஊக்கு விக்கலாம் .

ஆங்கிலம் - மனப்பாடம் செய்து ஒப்பிப்பது மட்டுமே ஆங்கிலம் என்று இல்லாமல்,அடிப்படை இலக்கணம் எங்கனம் எப்படி உபயோக படுகிறது என்பதை திறம் பட சொல்லி தர வேண்டும் . இங்கேயும் கட்டுரை எழுதுவதை ஊக்கு விக்கலாம்.

அறிவியல் - அன்றாட வாழ்வில் எப்படி எல்லாம் அறிவியல் பயன்படுகிறது என்பதை நல்ல உதாரனதுடன் எடுத்து சொல்ல வேண்டும். வெறும் 'மியசிஸ் ' 'மைடசிஸ் ' என்று ஜல்லி அடிக்காமல் இன்டர்நெட்டில் இருந்து நல்ல நல்ல படங்களாக காட்டி அதை புரிய வைக்க வேண்டும். மைடோகாண்டிரியாவை ஒரு ரிப்பன் மாதிரி தான் கற்பனை செய்து வைத்து இருந்தேன். அதே மாதிரி பிரயோபைட்டா, டேரிட்டோபைட்டா ஒரு இருதய வடிவ இலை மாதிரி யூகம் செய்து வைத்து இருந்தேன்.ஆனால் உண்மையில் அதன் வடிவம் வேறு.பால்மர் வரிசை , நியுட்டன் வளையம், இதை எல்லாம் பார்க்காமலே படித்து வந்தேன்.அப்படி இல்லாமல் நிறைய ஆய்வக செயல்கள் இருக்கும்மாறு வேண்டுகிறேன்.

கணிதம்- ஒரு முக்கோணத்தின் இரண்டு பக்கங்கள் அதன் மூன்றாவது பக்கத்தின்...போன்ற பிதாகரஸ் தேற்றங்கள் நடை முறை வாழ்க்கைக்கு எப்படி உதவுகிறது என்பதை விளக்க வேண்டும்.பாய்சன் பரவல் ,அந்த தேற்றம் ,இந்த தேற்றம் எல்லாம் எப்படி உபயோக படிகிறது என்பதை ஒரு இரண்டு வரிகளில் எடுத்துச் சொன்னா நொம்ப புண்ணியமா போகும். வகை கெழு, தொகை கெழு , எல்லாம் எங்கு எப்படி நமக்கு பயன் படுகிறது என்பது தெரியாமலே படித்தேன் நான்.


என் பரிச்சை பேப்பர் 
உத்திர  பிரதேசம் எங்கு உள்ளது என்பது தெரியாமலேயே நான் அங்கு கரும்பு விளைச்சலைப் பற்றி படித்தேன். ஒவ்வொரு வகுப்பிலும் கண்டிப்பாக ஒரு இந்திய வரைபடமும் , உலக வரைபடமும் இருக்க வேண்டும்.எல்லாவற்றையும் விட ஆசிரியர்கள் தங்களுடைய அறிவை இந்த காலத்திற்கு ஏற்ப அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.அணுக்கரு உலையை பற்றி பாடம் எடுக்கும் போது கூடங்குளம், ஜப்பானின் கதிரியக்கம் ஆகியவற்றையும் சொல்ல வேண்டும்.

லீவில் உள்ள போது +2 க்கு ரிசல்ட் வந்து இருந்தது . நிறைய பேர் சதம் அடித்து இருந்தார்கள். வழக்கம் போல பெண்கள் பையன்களை விட அதிக மதிப்பெண்கள் வாங்கி இருந்தார்கள். எப்படி இதனை பேர் சதம் அடித்தார்கள் என்று தெரிய வில்லை. ஒன்று பாடத்  திட்டம் ரொம்ப எளிமையாக இருந்திருக்க வேண்டும் இல்லை எனில் பேப்பரை எளிதாக திருத்தி இருக்க வேண்டும்.இயற்பியல் , வேதியல் , உயிரியல் போன்ற பாடத்திலும் சதம் போட்டு இருந்தார்கள். நான் படித்த காலத்தில் கணிதத்தில் சதம் எடுத்தால் அவனை  தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள்.இண்டர்நெட், டிவி ,மீடியா என்று டெக்னாலஜி வளர்ந்துவரும் இந்த கால கட்டத்தில் பாடங்களை புரிந்து கொள்வது என்பது அவ்வளவு கடினமான காரியம் இல்லை.வாத்தியார் நல்லா புரியும் படி சொல்லி தர வில்லை என்றால் , இன்டர்நெட்டில் வேண்டிய அளவிற்கு அதை பற்றிய தகல்கள் அவனுக்கு கிடைத்து விடும்.( கிராம புற மாணவர்களை தவிர )

Monday, June 27, 2011

ஊழல்

photo courtesy :http://www.indiavision.com
கொஞ்ச நாளா லோக் பால் லோக் பால்னு பேப்பரல பார்த்து ஏதோ புதுசா ஒரு வகை பால்னு நினச்சுட்டேன். சரி என்ன தான் இதுல விஷயம் இருக்குது பார்ப்போமே என்று அப்படியே பேப்பரை மேஞ்சு பார்த்தேன்.அடங் கொய்யால ...இம்ம்புட்டு விஷயம் இருக்குதான்னு இப்ப தானே தெரியுது . நமக்கு இந்த பேப்பர் படிக்கிறது (அதுவும் இங்க்ளிபீசுல பேப்பர் படிகிறதுனா... காத தூரம் ஓடுவேன்...!), பொது அறிவ வளர்திக்கிறது ,அறிவு சம்பந்தம்மான எந்த விசயமும் அவ்வளவா என் கிட்ட நெருங்க விடாம பார்த்துக்குவேன் .எனக்கு தெரியாத மேட்டர் எதுவும் இல்லை என்பது எனது எண்ணம்.

லோக் பால் சட்டத்தை நமது இந்திய அரசாங்கம் கடந்த 45 வருடங்களாக ,எப்பாடு பட்டாவது நிறைவேத்த கூடாதுன்னு இம்புட்டு நாள் இழுத்தடிசுட்டு இருந்து இருக்கு.இந்த விசயத்துல எல்லா கவர்ன்மெண்ட்டும் ஒரே குட்டைல ஊறின மட்டைகள்.ஊழலை ஒழிக்க CBI, CVC இவங்க ரெண்டு பேரே போதுமானது என்பது எனது கருத்து, ஒழுங்கா நேர்மையாக யாருடைய குறுக்கீடு இல்லாமல் இருந்தால்.ஆனால் இந்த ரெண்டு விசயமும் அவ்வாறு இல்லை. CBI எண்பது ஒரு சுதந்திரமாக இயங்க கூடிய அமைப்பாக இருக்க வேண்டும் .அனால் அவ்வாறு இல்லாமல் மதிய அரசாங்கத்தின் கீழ் இயங்கி வருகிறது.

 

இவிங்க விசாரன பண்ணுற லட்சணம் தான் ஊர் ஒலகத்துக்கே தெரியும் ,அத நான் வேற சொல்லி நாற அடிக்க வேண்டாம்.CVC ஒரு தனிப்பட்ட அமைப்பு தான் . தவறு செய்யும் அதிகாரிகளை தட்டி கேட்க்கும் அதிகாரம் உண்டு. ஆனா பாருங்க இந்த 2G விசயத்துல அவிங்க எப்படி நடந்துட்டாங்கனு நமக்கு நல்லாவே தெரியும். அது போக CVC யால தண்டிக்கும் அதிகாரம் கிடையாது. ஒன்லி பரிதுரை மட்டும் தானாம் . தண்டிக்கும் அதிகாரம் இருந்தாலே நாம அடங்க மாட்டோம் , இதுல ஒன்லி பரிந்துரை மட்டும் தான்னா கேக்கவா வேணும். அதனால ஏதாவது ஒரு அமைப்பு தனிப்பட்ட முறையில் ,தண்டிக்கும் அதிகாரத்துடன் இருந்தால் நல்லா இருக்கும்னு ஏதோ ஒரு புண்ணியவான் யோசனை செய்த்ததால லோக் பால் வந்தது , ஆனா 45 வருடம்... கொஞ்சம் ஓவர் தான்.

கொஞ்ச நாளா அண்ணா ஹசாரே குழுவுக்கும் ,மத்திய அரசாங்கத்துக்கும் ஒரே இழுபறி. ரெண்டு பெரும் என்ன தான் சொல்லுறாங்கனு இங்க கொஞ்சம் பாக்கலாம்.

1. லோக் பால் அமைப்பு :

அண்ணா : 11 பேர் கொண்ட குழு. இந்த 11 பேரை "தேர்ந்தெடுக்கும் கமிட்டி " தேர்வு செய்யும் . தேர்ந்தெடுக்கும் கமிட்டியில் (அ) 2- அரசியல்வாதிகள்
(ஆ) 2 - அரசியல் அமைப்பு அதிகாரிகள் (இ) 4-ஜட்ஜுகள் இருப்பார்கள். CBI, CVC போன்றவை லோக் பால் அமைப்புடன் இணைந்து செயல் படும்.விசாரணை மற்றும் தண்டிக்கும் அதிகாரம் லோக் பாலுக்கு உண்டு.
அரசாங்கம்: 11 பேர் கொண்ட குழு.இந்த 11 பேரை "தேர்ந்தெடுக்கும் கமிட்டி " தேர்வு செய்யும்.ஆனால் 10ல் 6 பேர் -அரசியல்வாதிகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். CBI, CVC போன்றவை லோக் பால் அமைப்புடன் இணைந்து செயல்படாது .விசாரணை மற்றும் தண்டிக்கும் அதிகாரம் லோக் பாலுக்கு இருக்கலாம்.

என் கருத்து : அண்ணாவுடன் ஒத்து போகிறது.10ல 6 பேர் அரசியல்வாதிகள் -இதுல இருந்தே இவங்க எண்ணம் புரியறது . ஏன் அண்ணா சொல்லுற மாதிரி இருந்தா என்னவாம் ...?

2. பிரதம மந்திரி லோக் பாலுக்கு கட்டு பட்டவரா ..?
அண்ணா : கண்டிப்பாக பிரதம மந்திரி லோக் பாலுக்கு கட்டுப்பட்டவர். அதுவும் இல்லாமல் அவர் ஒன்றுக்கு மேற்ப்பட்ட துறைகளை நிர்வாகிக்கிறார் ,எனவே அவரும் இதற்கு கட்டுப்பட்டவர்.

அரசாங்கம் : இல்லை ,பிரதம மந்திரி இதற்கு கட்டுப் பட்டவர் இல்லை . அப்படி செய்தால் அவரின் அன்றாட அலுவலக பணிகள் பாதிக்க படும்.ஒருவர் லோக் பால் சட்டத்தினால்விசாரிக்க படுகிறார் என்றால் அவர் தனது பதவியை ராஜினாம செய்ய வேண்டும் . இது பிரதம மந்திரி செயல் பாட்டை பாதிக்கும்.

என் கருத்து: அதெல்லாம் ஒன்னும் ஆகாது. ஊழல் பண்ணுனா ராஜினாமா தான் பண்ணனும். பிரதம மந்திரினா ஒன்னும் பெரிய கொம்பு இல்ல ... தாராளம லோக் பாலுக்கு கட்டுப்படலாம்

Blogger Widgets