Pages

Saturday, August 3, 2013

த(பி)த்துவம்

விஸ்கிக்கும் பாய்சனுக்கும்  என்ன வித்தியாசம் ...?

விஸ்கி குடிச்சா நாலு பேருக்கு முன்னாடி நாம ஆடுவோம் ,
பாய்சன் குடிச்சா நாலு பேர் நமக்கு முன்னாடி ஆடுவாங்க.
-----------------------------------------------------------------------------
கோவில் மானிய நாம அடிச்சா சத்தம் வரும்...
கோவில் மணியால நம்மல அடிச்சா ரத்தம் தான் வரும்.
----------------------------------------------------------------------------------
 நீங்க எவ்வளவு தான் பருப்பா இருந்தாலும்
உங்கள வச்சு சாம்பார் வைக்க முடியாது.
----------------------------------------------------------------------------------
மீனுக்கு எவ்வளவு தான் நீந்த தெரிஞ்சாலும்
அதுக்கு மீன் கொழம்புல நீந்த தெரியுமா ...?
--------------------------------------------------------------------------------
கடல் மேலே கப்பல் போனா ஜாலி ஆனா
கப்பல் மேலே கடல் போனா காலி .இது தான் உலக வாழ்க்கை .
-----------------------------------------------------------------------------------
எவ்வளவு தான் பெரிய VVIP யா இருந்தாலும் பஸ்சுல போனா மொத சீட் டிரைவருக்கு தான். அதே தான் ஏரோ பிளேன்லலயும் .
-----------------------------------------------------------------------------------

Saturday, July 21, 2012

பில்லா -2 ( பீலா - 2 ) -விமர்சனம்

எச்சரிக்கை 1 : அஜித் ரசிகர்கள்  இந்த பதிப்பை படிக்க வேண்டாம் என கேட்டு கொள்ள படுகிறார்கள் .
எச்சரிக்கை 2 : ஒரு பென்சிலும் ,நோட்டு புத்தகமும் படம் பார்க்கும்  போது  எடுத்து செல்லவும் . நிறைய தத்துவம்  சொல்லுறாங்க ... !
நன்றி : http://www.ajithfanclub.com

கடந்த வாரத்துல ரெண்டு ( பில்லா -2 , நான் ஈ )  பார்க்கும் வாய்ப்பு . ஒண்ணு ரொம்ப எக்ஸ்பெக்ட் பண்ணி சப்புன்னு போன பில்லா -2 ( பேசாம பீலா -2 ன்னு பேர் வச்சு இருக்கலாம் ). படத்துல எவ்ளோ லாஜிக் ஓட்டை இருந்தாலும் "தல " இருந்தா படம் ஓடிடும்ன்னு  டைரக்டர் நினச்சுட்டார்  போல . சரியான லாஜீக் சொதப்பல் . ( நான் ஈ விமர்சனம்  அடுத்த பதிப்பில் ... )

 தமிழ் நாட்டுல எப்படியும் ஒரு ரெண்டு வாரம் ஓடிடும். அஜித்த இலங்கை அகதிகளாய் காட்டுவதினால்  ஓவர்சீ ( oversea) நாட்டிலும் கொஞ்சம் ஓடிடும் . எப்படியும் கலெக்ஷன் பாத்துரலாம் என்கிற கார்பரேட்  கணிப்பு லாஜீக் வேணா  ஒத்துக்கலாம். பாவம் ப்ரொடியூசர் ( ஆஸ்கர் ரவி சந்திரன் ) . ரஷியா எல்லாம் போயி படம் சூட் பண்ணி இருக்காங்க . மி-17 ஹெலிகாப்டர் , train ல பாம் எல்லாம் வெடிக்க வைத்து பிரமாண்டம் காட்டுறாங்கப்பா ... ! என்ன பண்ணி என்ன பிரயோஜனம் . அஜித்த திரையில்   பார்த்தாலே சந்தோஷ படும் ரசிகர்களுக்கு வேணா பில்லா -2 பிடிக்கலாம் . ஒரு நல்ல படம் பார்க்கணும்னு நெனைக்குற என்ன மாதிரி ஆளுங்களுக்கு ரொம்ப ஏமாற்றம் தான் .

லோக்கல் தாதா கூட கூலி ஆள சேர்ந்து ஒரு இன்டர் நேஷனல் அளவுள்ள பெரிய தாதாவா ஆகிறாராம் . சும்மா பேச்சுலே தான் பில்ட் அப் பண்ணுனாங்க தவிர ஒரு ஸீன்ல கூட அத காச்சியா காட்டுல. காட்டுன்ன ஒரு சீன்னும்  காதுல பூ. கஸ்டம்ஸ் கஷ்டடில பிடிச்சு வச்சு இருக்கிற சரக்க இவிங்க லவட்டிட்டு வராங்கலம். நேவி  ஆளுங்க எல்லாம்  ஸ்டென் கன்  வச்சு சுடுறாங்க ஆனா ஒரு புல்லட் கூட படல. போதாதா குறைக்கு அஜீத் ஷாட் கன்ல   சுட்டுட்டு வரறார் . ஷாட் கன்ல ஒவ்வொரு முறையும் காக் பண்ணி தான் சுட முடியும் . காக் பண்ணுற அந்த 2 செகண்ட் கேப்புல   ஸ்டென் கன் 60 புல்லட்ட துப்பிடும். கடத்தல் சரக்க இப்படியா ஒரு பாதுகாப்பு  இல்லாம  வச்சு இருப்பாங்க ... ! நெறையா  கண்காணிப்பு இருக்குற ஒரு சரக்க புத்திசாலி தனமாய் பிளான் பண்ணி  எடுத்துட்டு வராங்கன்னு சொன்னா ஒரு திரில் இருந்து இருக்கும்.

மாமா ,மாமானு  கதா  நாயகி உயிரை  எடுத்து தொப்புளை காட்டி ரெண்டு பாட்டு பாடிட்டு உயிரை விடுகிறார். வில்லன்  நாயகியின்  கழுத்தை கத்தியால் அறுத்து கொல்லுற  சீன் மெல் கிப்சன்  நடிச்ச 'பேற்றியாட் ' படத்தோட  தமிழ் வெர்சன் . அதே  மாதிரி நாயகியை அஜீத்  நாலஞ்சு காருல வந்து புழுதிய  பறக்க விட்டு காப்பாத்தி கூட்டுட்டு போற சீன்   டி- காஃபிரியோ நடிச்ச  " Body of Lies " படதுல  இருந்து சுட்டது . டிமிதிரி, டிமிதிரி னு  ரஷியா கேங் லீடற  காட்டுறாங்க ...ஹூ ஹூம்  நம்ப முடியல . பாலிவுட்  வில்லன் மாதிரி தான்  இருக்கான் . கொஞ்சம் செம்பட்டை முடி. செம்பட்டை மீசை வச்சு காட்டி இருக்கலாம். ரகுமான் வந்து" ஹேலோ டிமிதிரி  " னு ரெண்டே ரெண்டு டயலாக் பேசிட்டு போய்டுறார் . என்ன ரோல் ?  இண்டர்போல்ல என்ன பண்ணுறார் ... இப்படி செம  கேள்வி பாக்கி இருக்கு.

டிமிதிரி சரக்க  இந்தியாக்கு கடத்தி வந்து நல்ல பேர சம்பாதிக்கிறார்  அஜித் . எப்படி கடத்தி வந்தாருனு அந்த டைரக்ட்டருக்கே தெரியாதுன்னு நினைக்குறேன்.  அப்புறம் ஸ்னை ஃபர்  ஆளுங்க அஜீத் வர கார பார்த்ததும் சுடுறதுக்கு பதுங்குறாங்கலாம் ... ! ஸ்னை ஃபர்  ஆளுங்களுக்கு மொத பாடமே  எதிரிக்கு தெரியாம மணி கணக்குல பதுங்கி இருந்து போட்டு தள்ளுறது தான் .

டிமிதிரி ஃபேக்டரில பூந்து கண்  ஃபைட்  நடக்குது ( பயங்கிரமான ஒரு ரஷியா தாதாவோட கோட்டைக்குள்ள எப்படி அவ்ளோ ஈஸியா பூந்தாங்கனு தான் தெரியல ) ஒரு குண்டு கூட படல . இந்த லச்சணத்ல கிரேன் மேல எல்லோரும் பார்க்கிற மாதிரி  நின்னுட்டு சுடுறாராம் . நம்ம ஆளுங்களுக்கு இன்னும் கன் ஃபைட் ஒழுங்கா எடுக்க தெரியல . அஜீத் ஃபேக்டரில  கண் ஃபைட்  பண்ணிட்டு தான் இருந்தார் . எப்போ  டிமிதிரியோட  டிரைன்ல பாம் வச்சார்னு  டைரக்டர் அடுத்த ( பீலா -3) படத்துல சொல்லுவார் போல ... ! . சும்மா அஜித் நடந்து வரதுலயும் , மீசிக்லயும்  திரில்லர்ல காட்டிடலாம்  அதே இந்த கூறு கெட்ட சனங்களுக்கு அதிகம்னு டைரக்டர்  நினைச்சுட்டார்  போல
 ( கோவம் வராதுங்களா  பின்ன ... இங்க புனேல ஒரு டிக்கெட் விலை  280 ரூபாய் ... சும்மா இல்ல ...280 குடுத்துட்டு இப்படி ஒரு மொக்கைய பார்த்தா ...) 

எல்லாத்தையும் விட படத்துல ஒரு பெரிய லாஜீக் ஓட்டை  " அஜித், அந்த ஹெலிகாப்டர்  உள்ள  எப்படி வந்தார்  ...? " . (எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும் ...? !!! ) கடைசி கிளைமாக்ஸ் சண்டைல , வில்லன் கூட்டம் ஹெலிகாப்டர்ல வராங்க , டிரெய்ன் முன்னாடி இறங்குறாங்க , டிரெய்ன் டிரைவர போட்டு தள்ளிட்டு ஹெலிகாப்டர்  உள்ள மறுபடியும் வந்தா ...அட நம்ம தல உள்ள ரெடியா இருக்கார் அப்புறம் என்ன வழக்கம் போல சண்டை தான்...

"தல"  ஹெலிகாப்டர் உள்ள எப்படி வந்த்தார்னு கேட்டா  உம்மச்சி கண்ண  குத்திடுமாம் ...!
கால கொடுமைடா சாமி . இப்படியே ஒரு ரெண்டு படம் அஜித் நடிச்ச போதும் ... ! அப்புறம் அஜித்னு  ஒரு நடிகர்  இருந்தாராம் ... அப்படின்கிற நெலமை ஆயிடும் . மொத்ததுள்ள பில்லா அப்பிடிகின்ற பேர எவ்ளோ  சொதப்ப முடியுமோ அவ்ளோ சொதப்பி இருக்காங்க .
Blogger Widgets