Pages

Thursday, April 28, 2011

த(பி)த்துவம்

'யானை  மேல நாம உக்காந்து போன அது  "saffari", அதே யானை நம்ம மேல உக்காந்து போன ஒப்பாரி...!
---------------------------------------------
நாம் அடிச்சுக்கிட்ட அதுக்கு பேர் மொட்டை ..,அதுவா விழுந்தா அதுக்கு பேர் சொட்டை...
----------------------------------------------
லைப்ல  ஒண்ணுமே  இல்லனா போர்  அடிக்கும் ... தலைல  ஒண்ணுமே இல்லனா  க்ளேர்  அடிக்கும் .. !
----------------------------------------------
பல்  வலி  வந்தா பல்ல  புடுங்கலாம் ....ஆனா ... கால்  வலி  வந்தா  கால  புடுங்க  முடியுமா  ?! இல்ல  தலை  வலி  வந்தா, தலைய தான்  புடுங்க  முடியுமா ?
---------------------------------------------------------
School டெஸ்ட்ல  பிட்  அடிக்கலாம் ...
College டெஸ்ட்ல  பிட்  அடிக்கலாம் ஆனா  ...
Blood Testla பிட்  அடிக்க   முடியுமா ?
---------------------------------------------------------
என்ன  தான்  பிகரு  செவப்பா இருந்தாலும் ,
அவ  நெழல்  கருப்பா தன்  இருக்கும்  
---------------------------------------------------------
ஒருத்தன்  எவ்வளவு  தன்  குண்டா இருந்தாலும் ,
அவன  துப்பாக்கி  குள்ள  போட முடியாஉ .
---------------------------------------------------------
மண்டைய  போட்டா Die
மண்டைல  போட்டா  டை...!
---------------------------------------------------------- 
பின்னாடி  சக்கரம்  எவ்வளவு  வேகமா  போனாலும்  முன்னாடி  சக்கரத்த முந்தி  போக  முடியாது ...!!

தாமதம்

ஸ்..ஸ்..ஸ்...அப்பப்பா நாலு மாசதுள்ள மூன்று  தடவை வீடு மாத்தியாச்சு . மனுஷனுக்கு வாழ்கையே வெறுத்து போச்சு. இப்போ கிடச்ச (2 BHK ) வீடு நிரந்தரம் . போஸ்டிங் போக வரைக்கும் இங்கே இருக்கலாம் . எப்பா... ஒவ்வொரு முறையும் சாமானத்தை தூக்கி கொண்டு அலைவது என்பது நொம்ப கஷ்டம்மடா  சாமி . மிக்ஸி ,கிரைண்டர் , இப்படி பெரிய பெரிய சாமான்களை ஷிபிட் பண்ணுவது என்பதில் ஒரு பெரிய சிரமமே இருப்பது இல்லை.

இந்த சின்ன சின்ன சாமான்கள் தான் பெரிய தலை வலி. அதுல பாருங்க ,இந்த சின்ன சின்ன சாமான்கள் தான் நாம நெறைய நேரம் யூஸ் பண்ணுவோம். உதரணமாக , இந்த பேஸ்ட் , ஷேவிங் கிரீம் , பிரஷ் , சூ பாலிஷ்  இப்படி. வீடு ஷிபிட் பண்ணுன அடுத்த நாள் ஆபிஸ் போக ரெடி ஆகிக்கொண்டு இருக்கும் போது ஷேவிங் ரேசரை எங்கயோ வைத்து விட்டு நொம்ப டென்சன் ஆய்ட்டேன். கடைசில ஒரு மொன்ன  பிளேடுல சரச்சுட்டு போனேன். என்ன மாதிரி 5  வருடங்களுக்கு ஒரு முறை ட்ரான்ஸ்பர் ஆகும் மக்கள் உண்மையிலேயே நொம்ப பரிதாவதுக்கு உரிய ஜீவன்கள். 

இப்போ லீவுல தமிழ் நாடு வந்து உள்ளேன். இப்போ தான் எலக்சன் முடிஞ்சு எல்லோரும் அமைதியாக இருக்காங்க .பஸ்சுல கலைஞ்சர் பொன் மொழிகள் " வெள்ளி என்னும் ..." ஸ்டிக்கர்ல கூட மஞ்ச பெயிண்ட் அடிச்சு வச்சு இருக்காங்க .எலக்சன் கமிசன் கண்ணுல விரல விட்டு ஆட்டி இருக்கானகனு தெரிய வருது. ஆனாலும் நொம்ப இடத்துல பணம் விளையாடி இருக்காம். பார்க்கலாம் ரிசல்ட் வர அன்னைக்கு நான் இங்க தான் இருப்பேன். இப்படி நெட் செண்டர்ல உக்காந்து டைப் பண்ணுவது நொம்ப கஷ்டமா இருக்கு. அது போக இங்க கோபில ஒரு மணி நேரத்துக்கு 30 /= ருபாய். நொம்ப அநியாயம். ஈரோட்டுல 15 /=  தான் வாங்குறாங்க . ரெண்டு பதிப்ப போடுறதுக்கு பேப்பருல எழுதி வச்சு இருக்கேன்,அனேகமாக சனிக்கிழமை பதிப்ப போடுவேன் என நினைக்குறேன். அதுவரைக்கும் இப்போ என்னோட அலை பேசி குறுஞ்செய்திகளை படியுங்கள் .

Friday, April 15, 2011

குறுஞ்செய்திகள்

ஆள் 1 : என் மனைவி சமைச்சா நான் மூக்கு பிடிக்க சாய்பிடுவேன்.நீங்க ...?
ஆள் 2 : என் மனைவி சமைச்சா  நான் மூக்க பிடிச்சுட்டு தான் சாப்பிடுவேன் 
--------------------------------------------------------------------------
நேத்து  பஸ்ல  போயிட்டு  இருந்தப்ப ,ஒருத்தர்  சோல்டர்ல அடிச்சு , "ராயபேட்டை "யா 'ன்னு  கேட்டாரா,நான்  இல்ல  என்  "தோள்பட்ட " ன்னு  சொன்னேன் . ஆனா  ஏன்  என்னை  முறைச்சாருனு தெரியல ! 
-------------------------------------------------------------------------
ப்ரோட்யுசர்: "படத்தோட  பேரை  கேட்டாலே ஸ்கூல் ,காலேஜ் ,ஸ்டூடண்ட்ஸ், 
govt & private எம்ப்லாயீஸ் எல்லாம் ஆடிரனும் அப்படி  ஒரு  டைட்டில்  சொல்லுங்க ...."
டைரக்டர் : "sunday Working day"....!
------------------------------------------------------------------------
கலைஞர் : தமிழர்களே  ! தமிழர்களே  !என்னை  கடலில்  தூக்கி  போட்டாலும் கட்டு  மரமாக  தன  மிதப்பேன் !
ஜப்பான்  மினிஸ்டர் : ங்கொய்யால நீ  இங்க  வாடி ! 
-------------------------------------------------------------------------
டைரக்டர் : சினிமா  என்கிறது என்  ரத்தத்துல  ஊரினது .
Fan: அது  சரி , நீங்க  ஏன்  ஒரு  மாதிரியான  படமாவே  எடுகிறீங்க ?
Director: என்  இரத்தம் ‘A’ குரூப்  இரத்தம் , அதான் .
----------------------------------------------------------------------------
"நான்  மியூசிக்  போட்ட இந்த  படத்துல  இடைவேளைக்கு  முன்னாடி  3 பாட்டு , இடைவேளைக்கு  அப்பறம்  2 பாட்டு  இருக்கு ."

"அப்ப  படத்துல  மொத்தம்  6 இடைவேளைன்னு  சொல்லுங்க ! "
---------------------------------------------------------------------------

த(பி)த்துவம்

இருமல்  வந்தா  இரும முடியும் ஆனா காய்ச்சல் வந்தா காச்ச முடியாது இது தான் வாழ்க்கை.
-----------------------------------------------------------------------------------------
என்னதான் பாடத்துள்ள 100 க்கு 100  வாங்கினாலும் , ஆம்லேட் போட 'முட்டை 'வாங்கி தான் ஆகணும்.
----------------------------------------------------------------------------------------
டிக்கெட்  வாங்கிட்டு  உள்ளே  போன  அது  சினிமா  தியேட்டர் ,உள்ளே  போயி  டிக்கெட்  வாங்கினா  அது  ஆபரேஷன்  தியேட்டர்.
---------------------------------------------------------------------------------------
வாழ்க்கைல  ஒன்னுமே  இல்லன  போர்  அடிக்கும் ,
மண்டையில  ஒன்னுமே  இல்லன  கிளார் அடிக்கும்
----------------------------------------------------------------------------------------
மின்னல்ல  பார்த்தா கண்ணு  போயிரும் , பார்க்கலேனா  மின்னல்   போயிரும்
----------------------------------------------------------------------------------------
டீ மாஸ்டர்  எவ்வளவு  தான் லைட்டா டீ போட்டாலும் ,அதுல  இருந்து  வெளிச்சம்  அடிக்காது .
----------------------------------------------------------------------------------------
என்னதான்  நாய்க்கு  நாலு  கால்  இருந்தாலும் ,அதால ஒரு லோக்கல் கால் கூட பண்ண முடியாது.
----------------------------------------------------------------------------------------
நாய்  கிட்ட  போய் டைகர்  பிஸ்கட்  போட்டா, அது  உங்கள  விட்டுட்டு  பிஸ்கட்ட சாபிட்டுடும் ,ஆனா  டைகர்  கிட்ட  போய்  நாய்  பிஸ்கட்  போட்டா , அது  பிஸ்கட்ட விட்டுட்டு  உங்கள சாபிட்டுடும்.
---------------------------------------------------------------------------------------
நாய் எவ்வளவு  தான்  நன்றி  உள்ள  பிராணியா இருந்தாலும் ,அதால 'thank you' சொல்ல  முடியாது .
----------------------------------------------------------------------------------------
என்னதான்  நெருப்பு  கோழியா இருந்தாலும் , முட்டைய  "ஹால்ப் பாயில்லா"  போடாது.
----------------------------------------------------------------------------------------

Thursday, April 7, 2011

என் அலை பேசி குறுஞ்செய்திகள்

கோர்ட்ல , சென்னை   தமிழ்  யூஸ்   பண்ணின   எப்படி  இருக்கும் : 
1.Yes my lord- ஆமா  நைனா 
2.Objection my lord- அமிக்கி  வாசி  அண்ணாத்தே ,
3.Court adjourned- உன்னொரு    தபா  வெச்சுக்கலாம் 
4.Objection over ruled- மூடிக்குனு   குந்து .
5.Order Order- கம்முனு  கிடமே.
------------------------------------------
உயிர்  இல்லாத  மலரை  கூட  நாம் நேசிக்கிறோம் ,
ஆனால்  நமக்க  உயிரையே  கொடுபவர்களை  மட்டும்  நேசிக்க  ஏன் யோசிக்கிறோம்  .
So love

.
.
.
.
.

சிக்கன் , மட்டன்   & பிஷ் ..!
------------------------------------------------
கம்பி  1,கம்பி  2,கம்பி  3,கம்பி  4,கம்பி  5,கம்பி  6,கம்பி  7,கம்பி  8,கம்பி, ...
எப்படி  பிளான்  பண்ணி   உங்கள  கம்பி ( என்ன ) எண்ண வச்சேன்  பார்த்தீங்களா?


Tuesday, April 5, 2011

எலக்சன் ...!

எலக்சன் ...!

டுபுக்கு அவர்கள் தன்னுடைய பதிவில் இந்த எலக்சன் எப்படி முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஒரு சிறிய குறும்படம் தந்து உள்ளார் . 
 அதை காண இங்கு வரவும் அல்லது யூ டூபில் பார்க்கவும்.

Sunday, April 3, 2011

த(பி)த்துவம்

லஞ்ச் பேக்ல லஞ்ச் கொண்டு போக முடியும் ,ஆனா ஸ்கூல் பேக்ல ஸ்கூல்ல கொண்டு போக முடியாது . இது தான் வாழ்க்கை .

-------------------------------------------------------
ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்தி ஒன்னு தான் பெருசு. 
--------------------------------------------------------
கார்க்குள்ள டயர் இருந்தா அதன் பெயர் ஸ்ட்ப்புனி, ஆனா அதே டயர் நம்ம மேல இருந்தா  நாம சட்டினி . 
-------------------------------------------------------
நம்ம வாயல "நாய்னு " சொல்ல முடியும் ,ஆனா நாய் வாயால " வாய்னு சொல்ல முடியாது. 
-------------------------------------------------------
சைக்கிள்ல போன சைக்கிள் ஸ்டான்ட் கூட வரும், பைக்ல போனாலும் பைக் ஸ்டான்ட் கூட வரும் , அட ஸ்கூட்டர்ல போன கூட ஸ்கூட்டர் ஸ்டான்ட் கூட வரும் ஆனா பஸ்ல போன பஸ் ஸ்டான்ட் கூட வரத்து . இது தான் வாழ்க்கையின் தத்துவம். 
-------------------------------------------------------
பஸ்ல நாம ஏறினாலும் , பஸ் நம்ம மேல ஏறினாலும் டிக்கெட் வாங்க போறது என்னவோ நாம தான் ...!
--------------------------------------------------------

Saturday, April 2, 2011

சூரிய கிரண்

சூரிய கிரண்

சூரிய கதிர் என்று ஹிந்தியில் சொல்லப்படும் சூரிய கிரண் என்ற வார்தைகளுக்கு ஒரு தனி பெருமை இந்திய விமான படையில் உண்டு. சூரிய கிரண் என்பது 09 விமானங்கள் சேர்ந்த ஒரு ஏரோபடிக் குழு . உலகதில் 09 விமானங்களை கொண்ட ஏரோபடிக் குழு மொத்தம் மூன்று தான் உள்ளது. அதில் இந்தியாவும் ஒன்று. ( மற்ற இரண்டு ப்ரிடீஷ்- ரெட் ஏரோஸ், கனடா -ஸ்னௌ பேர்ட்ஸ் ) சூரிய கிரண் 1996 ல் ஆரம்பிக்க பட்டது. அதற்க்கு முன்னர் "தண்டெர் போல்ட் " என்ற பெயரில் ஹாவக் ஹன்டெர் விமானங்களை கொண்டு இருந்தது. விமான படையின் தூதுவராகவும் , இந்திய விமான படையின் திறமையை காட்டவும் சூரிய கிரண் அமைக்கப்பட்டது.




குறிப்பு : இந்த விடியோவை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SLOW DOWNLOAD   பட்டனை அமுக்கவும் , ஒரு 65 வினாடிகள் பொருத்து டவுன்லோட் ஆரம்பிக்கும் VLC பிளேயர்ரில் ப்ளே செய்யவும் .

விமான படையில் விமானியாக சேரும் அதிகாரிகள் முதலில் HP-32 என்று அழைக்கப்படும் ப்ரொபெல்லர் ( மூக்கின் முன் ஒரு காத்தாடி வச்சுட்டு விர் ரும்..ம்ம்..ம்..ம்ம்.ம்.ம்..சத்தம் போட்டுட்டு போகுமே அது தான் )விமானதில் பயிற்ச்சி பெருவார்கள். அதுக்கு அப்புறம் பெரிய ஜெட் விமானகளை ஒட்டி பழகும் முன் இந்த கிரணை பழக வேனும் .அதாவது புல்லெட் பைக்கை ஒட்டி பழகரதுக்கு முன்னாடி டிவிஎஸ் 50 ஒட்டி பழகரது மாதிரினு வசுக்கோங்க. இந்த சூரிய கிரண்ல இருக்குற பைலட்டுங்க எல்லாம் பறக்கறதுல பழம் தின்னு கொட்டை போட்டவங்க .குறைட்ந்த பட்சம் 2000 மனி நேரம் வானத்தில் பறந்த அனுபவம் வேண்டும் அது போக கடுமையான சோதனைகளுக்கு அப்புறம் தான் இதில் சேர்துக்குவாங்க. Fighter Pilot மட்டுமே சேர முடியும். பொதுவாக MIG-27,MIG-29,MIRAGE 2000 ல் பைலட்டாக இருந்தவர்கள் கிரணில் வருவார்கள். இதில் இன்னொரு விசேசம் எண்ணனா இது இரண்டு பெர் அமரகூடியது. ஆன எல்லா பயிற்சி விமானங்களில் முன்னாடி ,பின்னாடி என்ற அமைப்பில் தான் சீட் இருக்கும். ஆனல் இதில் பக்கது பக்கதில் இருக்கும். அதாவது இரண்டு பேர் போர கார் மாதிரி.

நல்லா கண்ணை பறிக்கும் விதமான ஆரஞ்சு மற்றும் வெள்ளை கலந்த வண்ணத்தில் இருக்கும். இவர்கள் செய்யும் ஏரோபடிக்கை பார்த்தாள் மயிர் கூச்செரியும்.மேலோட்டமாக பார்கையில் ஏதோ பறப்பது போல தோனும். ஆனால் ஒரு முலுமையான மன ஒருமைப்பாடு மற்றும் குழுவுகலுக்கு இடையேயான ஒத்துலைப்பு மிக மிக அவசியம். கரணம் தப்பினானால் ( கிரணில் ) மரணம் என்பது மிக உண்மை இங்கே. ( 2006 , 2009 ல் இரண்டு விபத்து நடந்து, விமானிகள் மரணம் அடைந்து உள்ளனர். )
Blogger Widgets