இந்த உலகத்த நான் சும்மா விடுறதா இல்லை.
வெட்டியா இருக்கிற நேரத்துல எதையாவது கிறுக்கினா , அதை இலவசமா பதிவு செய்ய ஆள் இருக்கும் போது...என்ன மாதிரி வெட்டி பயல்கள் எல்லாம் இப்படி தான் கிறுக்குவோம்...குப்பையோடு குப்பையாய் நானும் ஒரு குப்பை. ஏதாவது அறிவு சார்ந்த விசயங்களை இங்கே எதிர் பார்க்க வேண்டாம்....!
Saturday, October 30, 2010
"ப்ரா"பளம்...!
எச்சரிக்கை: வயது வந்தோர் மட்டும் படிக்கவும்.
கடந்த வருடம் “ சொல்லி தருவது எப்படி ” என்று எங்களுக்கு சொல்லி தந்தார்கள் .அந்த பயிற்சிக்காக 03 மாதங்கள் தமிழ் நாட்டின் தலை நகரமாம் சென்னைக்கு இனிய கனவுகளுடன் வந்து இருந்தேன் . பயிற்சி இடம் தாம்பரம் . ஆனால் பெரும்பாலும் கோர்ஸ் நேரம் போக மத்த நேரத்தில் நாங்கள் , ஊர் சுற்றி கொண்டு தான் இருப்போம் . கோடம்பாக்கம், நண்பனுடன் சென்று டைரக்டர் சரவணன் அவர்களை பார்த்தோம் . அது ஒரு தனி எபிசொட் , விவரமாக அப்புறமா சொல்லுறேன் . விசயத்திற்கு வருகிறேன் .
நாங்கள் மூவரும் சேர்ந்து கொண்டு ரங்கநாதன் தெருவில் கிடைப்பதை எல்லாம் வாங்கி கொண்டு இருந்தோம் . எங்கள் மூன்று பேரில் இருவர் ஆயுள் கைதிகள் (திருமணம் ஆனவர்கள் ), ஒருவர் கைதி ஆக போகிறவர் .
சரவணாஸ் ஸ்டோர் இல் இருந்து வெளியே வந்து அருகில் இருந்த பெரிய துனி கடைக்குள் நுழைந்தோம் . உள் ஆடை இருக்கும் தளத்திற்கு விஜயம் செய்தோம் . நண்பன் தன் மனைவிக்கு உள் ஆடை வாங்க செலக்சன் செய்து கொண்டு இருந்தார் . நாகரீகம் கருதி அவரிடம் இருந்து விலகி , கடையில் ஆங் ஆங்கே Bra ,panties மாட்டி தொங்க விட்டு இருந்த பொம்மைகளை பார்த்து கொண்டே டைம் பாஸ் பன்னி கொண்டு இருந்தேன் . என் மானசிக கனவு கண்ணிகள் எல்லோரும் அந்த பொம்மைகளாக கற்பனை பன்னி கொண்டு இருந்தேன். அட அட என்ன ஒரு செக்ஸ்சி . சில பொம்மைகள் போட்டு இருந்த பிரா , பண்டீஸ் , பார்க்கும் போது , போட்டாலும் போடலைனாலும் ஒன்னும் பெரிய வித்தியாசம் தெரிய போவது இல்லை , அந்த அளவிற்கு "ஸீத்ரூ"…! என்ன என்ன வித டிசைன் , கலர் , சைஸ் , …அட அட …. அதுவும் இந்த மெலிதான strap உள்ள பிரா என்றால் நான் மிகவும் ரசிப்பேன்.
“அருள் …அருள் …”கைதி ஆக போகும் நண்பன் என் பின்னல் இருந்து என்னை கூப்பிட்டான் .அருகில் சென்றவுடன்
“அருள் , … என்னக்கு பிரா , பண்டீஸ் வாங்க வேணும் ..”
“அருள் , … என்னக்கு பிரா , பண்டீஸ் வாங்க வேணும் ..”
என்னக்கு 10 வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயம் ஞாபகம் வந்தது . மெதுவாக விட்டதை அண்ணாந்து பார்த்தேன் ....
(இப்போ நீங்கள் ஒரு மார்டின் ஜம்போ கொசுவத்தி சுருளை உங்கள் முகத்துக்கு முன்னாடி சுற்றி கொள்ள வேண்டும் , அப்படியே மெதுவாக விட்டதை அண்ணாந்து பார்க்க வேண்டும்... ஏன்னா இது flash back….)
(இப்போ நீங்கள் ஒரு மார்டின் ஜம்போ கொசுவத்தி சுருளை உங்கள் முகத்துக்கு முன்னாடி சுற்றி கொள்ள வேண்டும் , அப்படியே மெதுவாக விட்டதை அண்ணாந்து பார்க்க வேண்டும்... ஏன்னா இது flash back….)
FLASH BACK:
[ மூக்கின் கீழேயும் ,தாடைலும் கொஞ்சமாக முடி எட்டி பார்த்து கொண்டு இருந்த பதின் வயதின் கால கட்டத்தில் இருந்த நேரம் அது . நண்பன் ஒருவனுக்கு உள்ளாடை வாங்க கடைக்கு போய் இருந்தோம் . ஜட்டி வாங்க வேண்டும் . ஆனால் கடை முழுதும் ஒரே பெண்கள் மயம் . மிகவும் கூச்சமாக இருந்தது.
“மச்சி , பேசாம திரும்பி போயடலம்டா ”
“ச்சே …கம்முனு இரு மடையா , கடைக்குள்ள வந்துட்டு சும்மா போனா கடைக்காரன் நம்மளை பத்தி என்னை நினைப்பான் ?” –நான்
தயங்கி தயங்கி , இங்கும் அங்கும் பார்வையை ஓட விட்டு கொண்டு திரு திருனு முழிப்பதை பார்த்த கடை காரர் ஒரு பெண்ணை எங்களிடம் அனுப்பி வைத்தார் .
( Hello, என்ன வேணும்னு விசாரிக்க தான் …உடனே உங்க புத்தி ஏன் தான் இப்படி போகுதோ …) .கடை காரர் நாசமா போக . ஒரு ஆணை அனுப்பி இருக்க கூடாதா . சரி தைரியத்தை வரவளைத்து கொண்டோம்
.
( Hello, என்ன வேணும்னு விசாரிக்க தான் …உடனே உங்க புத்தி ஏன் தான் இப்படி போகுதோ …) .கடை காரர் நாசமா போக . ஒரு ஆணை அனுப்பி இருக்க கூடாதா . சரி தைரியத்தை வரவளைத்து கொண்டோம்
.
“ Kiya chaiye sir….(என்ன சார் வேணும் ).”…? ( ஹிந்தியில் கேட்டாள் ..)
“ம்ம்ம் ..ம்ம்ம் …வந்து வது …” நண்பன் பயங்கரமாய் திணறினான் .
“ஒரு பனியன் வேணும் ” நான் .
ஒரு பெரிய முறைப்பு பதிலாக வந்தது நண்பனிடம் இருந்து . இருக்காத பின்ன , பனியன் வாங்கறதா ஒரு ஐடியாவே கிடையாது . இருந்தாலும் பேச்சை துவங்க அதை விட்டால் என்னக்கு வேறு வழி தெரியவில்லை
“ என்ன சைஸ் …?”
ஒரு பெரிய முறைப்பு பதிலாக வந்தது நண்பனிடம் இருந்து . இருக்காத பின்ன , பனியன் வாங்கறதா ஒரு ஐடியாவே கிடையாது . இருந்தாலும் பேச்சை துவங்க அதை விட்டால் என்னக்கு வேறு வழி தெரியவில்லை
“ என்ன சைஸ் …?”
“ம்ம் .ம்ம் .இல்லை இல்லை .. பனியன் இல்லை …ஜட்டி வேணும் ”
நண்பன் கடைசியாக சொல்ல வேண்டியதை சொல்லியே விட்டான். பெருமையாக ஒரு ஓர பார்வை வேறு பார்த்தான் .
நண்பன் கடைசியாக சொல்ல வேண்டியதை சொல்லியே விட்டான். பெருமையாக ஒரு ஓர பார்வை வேறு பார்த்தான் .
“ என்ன சைஸ் ”? மறுபடியும் அதே கேள்வி . நண்பனுக்கு ஒன்னும் புரியல . என்னை பார்த்தன்.
“டேய் உன் ஜட்டி சைஸ் என்னடா , சொல்லு ..”
“டேய் உன் ஜட்டி சைஸ் என்னடா , சொல்லு ..”
அந்த பெண் எங்களையே பார்த்து கொண்டு இருந்தாள் ….
நான் தமிழில் “டேய் உன்னோட ஜட்டி சைஸ் என்னனு கேக்குறா , சீக்கிரமா சொல்லி தொலை …”
“தெரியலையேடா , அம்மா தான் எப்பவும் எடுத்து கொடுப்பாங்க , , நான் இந்த கலர் மட்டும் வேணும்னு சொல்லுவேன் அம்மா வாங்கி தருவாங்க …”
என்னைய நானே நொந்து கொண்டேன் , LKG பையன் கூட கடைக்கு வந்ததுக்கு .
‘ஒரு குத்து மதிப்பா சொல்லுடா …”
“ அப்படியா .அப்ப சரி …ம்ம்ம் ..15 cm ”
“ அப்படியா .அப்ப சரி …ம்ம்ம் ..15 cm ”
அந்த பெண் நம்பாமல் எங்களை பார்த்தாள்.
“எவ்ளோ ?”
“15 cm..ஆமா 15 cm தான் .”
அவள் நண்பனின் கீழே இடுப்பை பார்த்தாள் . ( நாங்கள் tuck in பன்னி இருந்தோம் ..)
“இல்லை சார் , உங்களுக்கு 85 இல்லைனா 90 cm தேவைப்படும் ”
நண்பன் வெல வெலத்து போய்ட்டான்
.” டேய் அருள் என்னடா இவ இப்படி சொல்லுறா , என்னோடது அவ்ளோ "நீளம் " இல்லைடா , அதுவும் இல்லாமல் இவளுக்கு எப்படி என்னோட சைஸ் தெரியும் , அதுவும் மேல பேன்ட்ட பார்த்து சொல்லுறா …?’
.” டேய் அருள் என்னடா இவ இப்படி சொல்லுறா , என்னோடது அவ்ளோ "நீளம் " இல்லைடா , அதுவும் இல்லாமல் இவளுக்கு எப்படி என்னோட சைஸ் தெரியும் , அதுவும் மேல பேன்ட்ட பார்த்து சொல்லுறா …?’
அட ஆண்டவா இவனை எல்லாம் வச்சுட்டு என்ன பண்ணுறதுன்னு தெரியல . கடைககுள்ள இறுகோம்னு கூட பாக்காம மண்டைல நச்சுனு ஒரு கொட்டு வைத்தேன் .
“லூசு , ஜட்டி சைஸ் இடுப்போட அளவ வச்சு முடிவு பண்ணுவாங்க , வேற எதையும் வச்சு இல்லை …” கொஞ்சம் கோபமாகவே சொன்னேன் .
எப்படியோ வேர்த்து விர்விர்த்து 3 ஜட்டி வாங்கி விட்டு வெளியே வந்தோம் . அப்போ அந்த அளவிற்கு எங்கள் உள்ளாடை அறிவு இருந்தது .]
FLASH BACK முடிந்தது...!
“என்னது …உன்னைக்கா …பிரா பண்டீஸ்ஸா ? சே சே அதெல்லாம் உன்னக்கு நல்லா இருக்காதுடா …”
“ஜோக்கு ….போடங் …! என் கேர்ள் பிரண்டுக்கு வாங்கணும்டா ,ப்ளீஸ் ஹெல்ப் மீ அவுட் ”
என்னமோ நான் இந்த பிரா , பண்டீஸ் வாங்குறதுல கரை கண்டு விட்ட மாதிரியும் , இந்த விசயத்தில் நான் Phd பட்டம் வாகிய மாதிரியும் அவன் என்னை கேட்டு கொண்டது என்னக்கு பெருமையாக இருந்தாலும் தயங்கினேன் .
“ என்னடா இது உன் கேர்ள் பிரண்டுக்கு, எடுக்க என்னைய போய் கூப்பிடுற , சரியாய் வராது நீயே போய் செலக்ட் பண்ணு ”
“இல்லை அருள் , நான் என்ன நீ எடுத்து தந்தனு சொல்லவா போறேன் , just help me out yaar..”
“வேனான்பா , கேர்ள் பிரண்டுக்கு, பிரா ,பண்டீஸ் எல்லாம் கிப்ட் பண்ணுனா பிரச்னை ஆய்டும்டா ..”
“ஹே ,இல்லபா நாங்க வெரி க்ளோஸ் பிரான்ட் ,அவளுக்கு இதை விட்டா ஒரு ஐடியல் கிப்ட் இருக்க முடியாது . பையனா இருந்தா பனியன் ,ஜட்டி எடுத்து கொடுப்பேன் ,பொண்ண போயிட்டா அதனால பிரா ,பண்டீஸ் எடுத்து தர போறேன் இதுல என்ன இருக்கு ..,..நீ இப்போ வரப் போரீய இல்லையா ?"
சரி விதி வலியது .இங்கேயும் ஒரே பெண்கள் கூட்டம் , ஆனால் இம்முறை அவ்ளோ கூச்சம் இல்லை .
“என்ன சார் வேணும் ..” சேல்ஸ் பெண் வினவினாள் .
“ம்ம்ம் …ம்ம்ம் . நல்ல மாடர்னா , டிசைன்னா , கலர்புல்லா , காஸ்ட்லியா பிரா , பண்டீஸ் வேணும் /…”
(நல்லா பெஸ்ட்டா வாங்கி தந்து அசத்த வேணும்னு நினைப்பு ).
(நல்லா பெஸ்ட்டா வாங்கி தந்து அசத்த வேணும்னு நினைப்பு ).
“ என்ன சைஸ் சார் ,…”
நண்பன் என்னை பார்த்தான் . அட ஆண்டவா , என்னக்கு மட்டும் ஏம்பா இப்படி விதி விளையாடுது .
“ I am sorry dude, நீ தான் பதில் சொல்லணும்,.. என்னைய பார்க்காத …”
“ சைஸ் வந்து … சைஸ் …வந்து …” நண்பன் திணறினான்
அந்த பெண் எங்கள் நிலைமையை புரிந்து கொண்டு அந்த பக்கம் நகர்ந்தாள்,
“Dude, போன்ல நெறைய ஸ்வீட் நத்திங் பேசுவோம் , கொஞ்சம் செக்ஸ்யீயா கூட பேசி இருக்கோம் , ஆனால் சைஸ் என்னனு கேக்க மறந்து போயிட்டேனே ..என்ன பண்ணலாம் ”
“ ஒரு கால் பன்னி கேளு , its that simple…”நான்
“ no..no..அப்புறம் சர்ப்ரைசே இல்லாம போய்டும் ..”
அந்த பெண் மீண்டும் வந்து எங்களை பார்த்தாள் ,…அவளை பார்த்து அசடு வழிந்தோம் . அவளுக்கு புரிந்து போய்டுச்சு .
“ஒ சைஸ் தெரியலையா சார் ..?”
ஆமா ,ஆமா என்று தலைய ஆட்டினோம் …
“ என்ன மாதிரி இருப்பங்களா ” னு கேட்டுட்டு நெஞ்சை கொஞ்சம் நிமிர்த்தி காட்டினாள்.
நானும் , நண்பனும் அதிர்ந்து , வெல வெலத்து போய்ட்டோம. நண்பன் அவளின் மார்பகத்தை ஒரு விநாடி பார்த்துட்டு , என்னை பார்த்தான் . இருவரும் திணறுவதை பார்த்து அந்த பெண் மெலிதாக சிரித்தாள்.
நானும் , நண்பனும் அதிர்ந்து , வெல வெலத்து போய்ட்டோம. நண்பன் அவளின் மார்பகத்தை ஒரு விநாடி பார்த்துட்டு , என்னை பார்த்தான் . இருவரும் திணறுவதை பார்த்து அந்த பெண் மெலிதாக சிரித்தாள்.
“இல்லை …உங்கள மாதிரி இல்லை …இன்னும் கொஞ்சம் உயரமா ..”
நண்பன் மழுப்பினான் ( அட பாவி மனுசா , என்ன மாதிரி இருப்பங்களானு உயரதையா கேட்டாள் …நாசமா போறவனே மனதுக்குள் திட்டினேன் …) . நண்பனின் கேர்ள் பிரான்ட்டை போட்டோவில் பார்த்த ஞாபகத்தில்
நண்பன் மழுப்பினான் ( அட பாவி மனுசா , என்ன மாதிரி இருப்பங்களானு உயரதையா கேட்டாள் …நாசமா போறவனே மனதுக்குள் திட்டினேன் …) . நண்பனின் கேர்ள் பிரான்ட்டை போட்டோவில் பார்த்த ஞாபகத்தில்
“இல்லை மேடம் அதோ அந்த பெண்ணை போல இருப்பாங்க ”னு ஒரு குத்து மதிப்பாய் சொன்னேன் . நண்பனும் அந்த பெண்ணை பார்த்துட்டு
“ ஆமா ஆமா அவங்களை மாதிரி தான் இருப்பாங்க ..ஹி ..ஹி ..ஹி …”
“ ஆமா ஆமா அவங்களை மாதிரி தான் இருப்பாங்க ..ஹி ..ஹி ..ஹி …”
“ ஹே வாசு இங்க கொஞ்சம் வாடி …” இந்த பெண் அந்த பெண்ணை அழைத்தாள்
.நானும் நண்பனும் இதை எதிர் பார்க்க வில்லை . பேசாம ஓடி போய் விடலாமானு கூட யோசித்தேன் .அந்த வாசு என்கிற வாசுகி எங்கள் அருகில் வந்தாள்.
.நானும் நண்பனும் இதை எதிர் பார்க்க வில்லை . பேசாம ஓடி போய் விடலாமானு கூட யோசித்தேன் .அந்த வாசு என்கிற வாசுகி எங்கள் அருகில் வந்தாள்.
“வாசுகி ,இவங்களுக்கு பிரா வேணுமாம் , கொஞ்சம் எடுத்து கொடுத்துட்டு இரு நான் பில்லிங் செக்சன் வரை போயிட்டு வந்துறேன் ”
அவள் விலகி போனாள். அடி பாவி இப்படி நாடு ஆத்துல விட்டுட்டு போயிட்டாளேனு பதறி போய் பார்த்தோம் .
அவள் விலகி போனாள். அடி பாவி இப்படி நாடு ஆத்துல விட்டுட்டு போயிட்டாளேனு பதறி போய் பார்த்தோம் .
“ என்ன சைஸ் சார் , எந்த மாதிரி வேணும் ..:?” வாசுகி .
“இல்லை …சைஸ் ..வந்து ..” நண்பன் மறுபடியும் என்னை பார்த்தான் .
“இல்லை மேடம் ,சைஸ் தெரியாது , உங்கள மாதிரி இருப்பாங்கனு சொன்னேன் ,அதான் உங்களை கூப்பிட்டு விட்டுட்டு அவங்க போய்ட்டாங்க" நான்
“ ஒ ,அப்படியா ,…அப்போ 32 சைஸ் ..”
“இல்லை ..இல்லை …32 இல்லை …”
நண்பன் அவசர அவசரமாக மறுத்தான் . நான் ஆச்சிர்யமாக அவனை பார்த்தேன். எப்படி 32 இல்லன்னு தெரியும்.நண்பன் அந்த பெண்ணின் நெஞ்சை ஒரு விநாடி பார்த்து விட்டு சொன்னான்
நண்பன் அவசர அவசரமாக மறுத்தான் . நான் ஆச்சிர்யமாக அவனை பார்த்தேன். எப்படி 32 இல்லன்னு தெரியும்.நண்பன் அந்த பெண்ணின் நெஞ்சை ஒரு விநாடி பார்த்து விட்டு சொன்னான்
“ இல்லை 32 இல்லை இன்னும் கொஞ்சம் பெரிய சைஸ் …வந்து …எப்படினா ….கொஞ்சம் பெருசா …அதாவது ….”
சொல்ல முடியாமல் திணறினான் சுற்றும் முற்றும் பார்த்தான் . நானும் அவன் பார்க்கும் இடம் பார்த்தேன் . அங்கே இங்கேனு பார்த்தவன் ,ஒரு பெண்ணின் " பின்னழகில்" பார்வையை நிறுத்தினான்..
சொல்ல முடியாமல் திணறினான் சுற்றும் முற்றும் பார்த்தான் . நானும் அவன் பார்க்கும் இடம் பார்த்தேன் . அங்கே இங்கேனு பார்த்தவன் ,ஒரு பெண்ணின் " பின்னழகில்" பார்வையை நிறுத்தினான்..
"அய்யோ ஆண்டவா அவ்ளோ பெருசா …!"
என்னையும் அறியாமல் கத்தி விட்டேன் , நண்பன் தான் பார்வையை அங்கிருந்து விலகி , நான் கத்தியது ஏன் என்று முழு அர்த்தம் புரிந்து கொண்டு
” ஹே இல்லைப்பா …” நான் ஜஸ்ட் பார்த்தேன் “
அட சண்டாளா , அதுக்குள்ள ஜொள்ளு விடணுமா ..கேப் கிடைச்சா போதுமே .
என்னையும் அறியாமல் கத்தி விட்டேன் , நண்பன் தான் பார்வையை அங்கிருந்து விலகி , நான் கத்தியது ஏன் என்று முழு அர்த்தம் புரிந்து கொண்டு
” ஹே இல்லைப்பா …” நான் ஜஸ்ட் பார்த்தேன் “
அட சண்டாளா , அதுக்குள்ள ஜொள்ளு விடணுமா ..கேப் கிடைச்சா போதுமே .
“ அதோ , அவங்கள்ள மாதிரி இருப்பாங்க ” னு முன்னழகு கொஞ்சம் தூக்கலாக இருந்த ஒரு பெண்ணை கட்டினான்.
“ ஒ சரி , அப்போ 34,.... A வா ,B யா ,C யா சார் ..?’
“ என்னது A வா ,B யா ,C யா?” நான் .
“கப் சைஸ் சார் ,…!”
என்னக்கு கொஞ்சம் புரிந்த மாதிரியும் , புரியாத மாதிரியும் இருந்தது . ரியாக்சன் எதுவும் காட்டாமல் நின்று இருந்தேன் . நண்பன் என்னை இடித்தான்
“ மச்சி , what is this A,B,C,D..uh ?” இங்கிலிஷ்ல கேட்டா அந்த பெண்ணுக்கு புரியாதாம் …
“ மச்சி , what is this A,B,C,D..uh ?” இங்கிலிஷ்ல கேட்டா அந்த பெண்ணுக்கு புரியாதாம் …
“ கப் சைஸ் சார் , A,b,C, D ங்கிறது கப் சைஸ் .” வாசுகி.
இது சரி பட்டு வராது , டோட்டலா சரண்டர் ஆகவேண்டியது தான்.
“ மேடம் , எங்களுக்கு ஒழுங்கான சைஸ்ஸே என்னனு தெரியாது , இதுல கப் சைஸ்னு தனியா வேற ஒன்ன கேக்குறிங்க , we are sorry, இது எல்லாம் தெரிஞ்சு இருந்தா தான் பிரா வாங்க முடியும்னு எங்களுக்கு தெரியாம போய்டுச்சு ..” நான.
“ஹ …ஹா ..ஹா ..ஒ நீங்க பிரா எடுகுறது இது தான் பர்ஸ்ட் டைம்மா.. மொதல்லே சொல்லலாம் இல்லை . அதோ அந்த பொம்மைய பாருங்க ,அந்த மாதிரி கொஞ்சம் சின்னதா இருந்தா A, பக்கத்துல இருக்கிற மாதிரி இருந்தா B, இந்த பக்கம் இருக்கிற பொம்மை மாதிரி இருந்தா C, அப்படி கொஞ்சம் ஓவர் சைஸ்ஸா இருந்தா D. இப்போ சொல்லுங்க எந்த மாதிரி.."
அவள் என்னைய பார்த்தாள், நான் நண்பனை பார்த்தேன் .
அவள் என்னைய பார்த்தாள், நான் நண்பனை பார்த்தேன் .
“ ஒ எஸ் மேடம் … thanking you, C…மாதிரி இருக்க்கும்னு நினைகிறேன்(..!!)…ஆமாம் C தான் ..”
சேல்ஸ் கேர்ள் புன்சிரிப்புடன் வித விதமான டிசைன்னுடன் எடுத்து போட்டால் . நண்பன் மிக ஆர்வமாக செலக்சன் செய்து கொண்டு இருந்தான் . நான் அந்த C சைஸ் பொம்மையை பார்த்தேன் . நீண்ட பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது
( Hello, நிம்மதி பெரு மூச்சுங்க …! பொறமையில் இல்லங்க அட நன்புங்கப்பா…!)
( Hello, நிம்மதி பெரு மூச்சுங்க …! பொறமையில் இல்லங்க அட நன்புங்கப்பா…!)
( பின் குறிப்பு : நண்பன்க்கு ரசனை அதிகம், …. போட்டாலும் போடலைனாலும் ஒன்னும் பெரிய வித்தியாசம் தெரியாதுன்னு சொன்னேன் இல்லையா , அதை தான் செலக்ட் பன்னி இருந்தான் அந்த நாசமா போகிறவன் …! )
தலைப்பு
அனுபவம்
Saturday, October 9, 2010
Fibonacci No
என்திரன் படத்தில் ரோபோ ரஜினியை டெஸ்ட் பண்ணுவதற்கு ஒருவர் ஒரு நம்பரை (24157817) சொல்லி அது Fibonacci (பிபினோசி ) எண்ணா என்று கேப்பார் .
இங்கே நான் Fibonacci no ண என்னனு சொல்ல போறேன் .
Fibonacci no அப்பிடிங்கிறது ஒன்னும் இல்லை , இரண்டு நம்பரை கூட்டும் போது ஒரு விடை வரும் . இப்போ கடைசி இரண்டு நம்பரை மறுபடியும் கூட்ட வேண்டும்
அதாவது, .
1+1= 2 ( இதுல கடைசி இரண்டு நம்பர் 1,2) or 2+5 = 7 ( இதுல கடைசி இரண்டு நம்பர் 5,7)
இரண்டு நம்பரையும் கூட்ட வேண்டும்.
1) 1+2=3 5+7=12
2) 2+3=5 7+12=19
3) 3+5=8 12+19=31
4) 5+8=13 19+31= 50
5) 8+13= 21 31+50 =81
6) 3+21=34 50 + 81 =112
7) 21+34=55 81+112=193
8) 34+55=89 112+193=305
9) 55+89=144 193+305=498
10) 89+144=233 305+498=803
11) 144+233=377 498+803=1301
12) 233+377=610 803+1301=2104
இதுல அப்படி என்ன பெரிய விஷயம் இருக்குதுன்னு கேக்குறிங்க .
அதாவது ஒரு கட்டத்திற்கு மேல் இந்த கூட்டு தொகை இன் விகிதாசாரம் கோல்டன் ரேசியோ (Golden ratio ) என்று சொல்லப்படும் எண்ணான 1.618 ஆக இருக்கும்
அதாவது,
55 / 34 =1.617647058823….( 1.618)
89 / 55 =1.6181818181818181….(1.618)
144 / 89 = 233 / 144=1.618055555555…(1.618)
377 / 233 =1.618025751072….(1.618).
என்ன ஆச்சிரியமாக இருக்கா ...? அது தான் கணிதத்தின் மகிமை....இப்படி நீங்க எந்த எண்ணிற்கும் பார்க்கலாம் .
Golden ratio பற்றி பிறகு சொல்லுகிறேன் .
தலைப்பு
Fibonacci No
Friday, October 1, 2010
என்திரன்
இனைய தளங்களில் இருந்தும், மும்பாயில் இருந்து வெளி யாகும் தமிழ் செய்தி தாள்களில் இருந்தும் என்திரன் படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு இருபது தெரிய வருகிறது.Face Book, Twiteer, மற்றும், இன்ன பிற தளங்களில் இருந்தும் தமிழ் நாடு மிக பர பரப்பாக இருக்கிறது என்பது தெரிய வருகிறது. அனால் இங்கே புனேயில் அப்படி ஒன்றும் பெரிய பர பரப்பு இல்லை. ஆன் லைன் மூலமாக டிக்கெட் புக் பன்னி ( Rs 260 /= ஒன்லி...! ரொம்ப சீப்பா இருக்கு இல்ல...! ) படம் பார்த்தோம். கொஞ்சம் கூட்டம் தான்.
படம் பார்த்தல் மட்டும் போதுமா, அதை பற்றி ஒரு வரி கூட விமர்சனம் எழுதாமல் இருந்தால் , இறந்த பிறகு கொதிக்கும் எண்ணெயில் போடுவார்களாம் . "புருடா" புராணத்தில் இருக்கு. எதுக்கு வம்பு னு தான் இந்த "திரை" விமர்சனம் ( நன்றி: ..un டிவி).
விமர்ச்சனதிக்கு முன் ஒரு விஷயம், இங்கே புனேயில் படம் போடும் முன் " ஜன க ந மன.." தேசிய கீதம் போடுவார்கள். எல்லோரும் எழுத்து நிற்க வேண்டும். இந்த நல்ல விசயத்தை ஏன் தமிழ் நாட்டிலும் பின் பற்ற கூடாது. நமது தேசிய கோடி அவ்ளோ பெரிய ஸ்க்ரீனில் முழுவதும் பார்க்கிறதை பார்க்கும் போது கொஞ்சம் தேச பக்தி வந்தது.
இனி விமர்சனம்:
ஷங்கர் படமா, கலாநிதிமாறன் படமா, இல்ல ரஜினி படமானு கேட்ட சந்தேகமே வேண்டாம் இது முழுக்க முழுக்க ரஜினி படம் தான். ரஜினி இவ்ளோ இளமையை சிவாஜில் கூட காட்ட வில்லை என்பேன். படம் ஆரம்பிக்கும் போது சன் பிச்சர்ஸ் , மற்றும் கலாநிதி மாறன் கிராபிக்ஸ் படு அமர்க்களமாக அமைந்து எங்கே ரஜினின் பெயர் வரும்போது கிராபிக்ஸ் சொதப்பி விடுமோனு சந்தேகம் இருந்தது. ஆனால் வழக்கமாக வரும் சூப்பர் ஸ்டார் சீனை விட இந்த கிராபிக்ஸ் அம்சமாக உள்ளது. இனி ரஜினி படங்களுக்கு இந்த கிராபிக்ஸ்யை உபயோகிக்கலாம்.
ரஜினி ரொம்ப கேஷூவலாக இந்த படத்தில் நடித்து இருக்கிறார். முக்கியமாக ரஜினியை அறிமுகம் படுத்தும் இடத்தில வழக்கமாக வரும் டைட்டில் சாங், or அறிவுரை சாங் எதுவும் இல்லாதது மனசுக்கு ஆறுதலை தருகிறது. ரஜினி அறிமுகம் ஆகும் கட்சியில் அநியாயத்திற்கு எளிமை. சங்கரை பாராட்டனும் . Unnecessary ஓவர் பில்ட் அப் எதுவும் இல்லாமல் பின்புறத்தில் இருந்து முன்புறம் அறிமுகம் ஆகிறார். லேட்டஸ்ட் Trend தாடி, கிருதா வைத்து கொண்டு கலகுகிறார்.. ( ஹலோ, சூர்யா, கார்த்தி, அஜீத், விஜய்... உங்க புண்ணியம் ரஜினி உங்கள் கால கட்டத்தில் இல்லை. இல்லன உங்களுக்கு போட்டியே ரஜினி தான். இப்போ மட்டும் என்னவாம்...)
ஐஸ்வர்யாராயை மையமாக வைத்து தான் கதை சுற்றி வருகிறது. அனால் ஐஸ்வர்யாவை ஒரு ஸ்டார் வால்யுக்கு மட்டும் தான் யூஸ் பன்னி இருகிறார்கள். ஐஸ்வர்யா அழகோ அழகு.... ரஜினி கொடுத்து வைத்தவர் முத்தத்திற்கு மேல் முத்தம் வாங்குகிறார். ( காசும் வாங்கிட்டு முத்தமும் இலவசமாய் வாங்கிட்டு போகிறார், இந்த வயசிலயும் என் வைத்தெரிச்சல்லை வாங்கி காட்டி கொள்கிற ஒரே நடிகர் ரஜினியாக தான் இருக்கும்.. ஹும்ம் அடுத்த ஜென்மத்திலாவது ஒன்னா ரஜினியா, இல்லைனா அபிசேக் பச்சான பொறந்து ஐஸ் கிட்ட ஒரு முத்தம் வாங்கணும் பா..). ஐஸ் அழகாக நடனம் ஆடுகிறார்...அழகாக சிரிக்கிறார்...ரஜினியை காதலிக்கிறார். மற்றபடி வேறு விசேசம் எதுவும் இல்லை. ரஜினி சண்டை காட்சிகளிலும் , நடன காட்சிகளிலும் சும்மா தூள் பறக்கிறார்.
படத்தின் முதல் பாதி காமெடியாக போகிறது. இரண்டாம் பதில் விறு விருப்பாக ஆக்சன் . தமிழுக்கு ஹிந்தியில் இருந்து ஒரு புதிய வில்லன். ரகுவரனை நினைவூட்டுகிறார். சண்டை காட்சில் அந்நியன் ஜாடை அடிக்கிறது.( ஹாலி வூட் சினிமா அதிகம் பார்க்காத தமிழ் மக்களுக்கு வேண்டும்மானால் சண்டை மிக சிறப்பாக தெரியும், ஆனால் என்னை போன்ற ஹாலி வூட் சினிமா அதிகம் பார்க்கும் மக்களுக்கு சண்டை காட்சி சாதரணமாக தான் தெரியும்.) ஆனால் ஒரு விசயத்தை ஒத்துக்கொள்ள வேண்டும் , எந்த சண்டை காட்சியும் சும்மா ஒப்புக்கு சப்பாக எடுக்க வில்லை. நிறைய உழைத்து இருக்கிறார்கள்.
"என் கிட்டே இல்லாதது அவனுங்க கிட்டே என்ன இருக்கு?" " Reproduction & Mensuration க்கு என்ன சனா பண்ணுவ ?" தண்ணிய போட்டுட்டு ஒட்டுரியனு கேட்டதுக்கு, " இல்ல பெட்ரோல் போட்டுட்டு ஓட்டுறேன்" போன்ற கால கலப்புக்கு பஞ்சம் இல்லை. ஐஸை கடத்தும் போது எப்படி உயரோடு வந்த என்ற கேள்விக்கு " Up gradation Version 2.0"..போன்ற பஞ்ச் வசனமும் சூப்பர். சுஜாதா வசனம் . கிராபிக்ஸ் சும்மா பின்னி பெடலெடுத்து விட்டார்கள். ஹாலி வூட் ரேஞ்சுக்கு இருக்கிறது. ரஜினி பல துப்பாகிகளை கொண்டு சுடும் கிராபிக்ஸ் " The Mask" ல் வரும் க்ராபிக்ஸ்சை ஞாபகம் படுத்தினாலும் , நன்றாக உள்ளது. மண்ணிற்குள் துளை போட்டு கொண்டு போகும் ஸீன் " Matrix Reloaded " க்ராபிக்ஸ்சை நினைவூட்டுகிறது. " D-war" பட க்ராபிக்ஸ்சும் ஞாபகம் வருகிறது.
க்ளைமேக்ஸ்ல். இன்னும் கொஞ்சம் டெக்கினிக்கல் விஷயத்தை புகுத்தி இருக்கலாம். வில்லன் ரஜினி அப்படியே மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியன் தான். ஆனாலும் உறுத்த வில்லை. ரஜினிக்குள் இப்படி ஒரு வில்லன் கதாபாத்திரத்தை "........."( Fill in the Blanks... சரியான பதில் அளிபவர்களுக்கு Rs 100/= ...)படத்திற்கு அப்புறம் இப்போது தான் பார்கிறேன். . படத்தின் இசை ARR . பின்னணி இசையியல் இருந்து ,பாடல் வரை கலக்கோ கலக்கு என்று கலக்கி உள்ளார். "என்ன்ன்ன்திரா ..." " கிளிமஞ்சதரோ" போன்ற பாடல்கள் புரிகிறது. இளைய தலைமுறைக்கு ஏற்ற இசை.
படம் முடிந்தவுடான் எழுத்து போடும் வரை இருந்து யார் யார் எந்த எந்த துறையில் பனி யாற்றி உள்ளார்கள் என்று பார்த்துவிட்டு தான் கூட்டம் நர்ந்தது.நிறைய ஜப்பான் தொழில் நுட்ப கலஞ்சர்கள் கிராபிக்ஸில் பணியாற்றி உள்ளார்கள். தமிழ் நாட்டு கிராபிக்ஸ் கம்பெனி பெயர் வரும் போது ஒரே கை தட்டல் தான். பெயர் போடும் வரை இருந்து பார்த்து, கை தட்டி போகும் மக்களை இந்த படத்தில் பார்க்கிறேன். சங்கருக்கு கிடைத்த மரியாதை, கிராபிக்ஸ்க்கு கிடைத்த வெற்றி இது. 3D இல் எடுத்து இருந்தா இன்னும் சூப்பர்ரா இருந்து இருக்கும்.
( ரஜினி மகள் எடுத்துட்டு இருந்த அனிமேஷன் படம் என்னப்பா ஆச்சு...?)
உடைகள், location , man power, செட்டிங்க்ஸ் என ரொம்ப உழைத்து இருகிறார்கள். உழைப்பின் பலன் நன்கு தெரிகிறது. படம் வசூலிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள். திருட்டு DVD வராமல் இருக்க வேண்டும். தயவு செய்து இப்படத்தை தியேட்டரில் பார்க்கவும்.
இனி குறைகள்:
1 . ரோபோ ரஜினி தன் தலையை எடுத்து கட்டும் போது " Flat cable or Bus bar cable " என அழைக்கப்படும் wire தெரிகிறது. Artificial Intelligence ல் வயர் எல்லாம் வராது சாமியோ. "Fiber Optics" வந்து ரொம்ப நாள் ஆச்சு .
2 ரஜினி ஒரு " Scientist" டா காட்ட அவர் ரோபோட்டின் ஒரு நட்ட மட்டும் டைட் பண்ணுகிறார். இன்னும் எதாவது 'gimmicks' வேலை பன்னி இருக்கலாம்.
3 ரோபோ ரஜினிக்கு உணர்ச்சிகளை ஊட்ட , சுவர், தரை, எல்லாம் ஏதோதோ எழுதி காட்டுகிறார். அதற்க்கு பதில் உணர்சிகளை உணர எதாவது சென்சர் மாதிரி அய்டம் பிட் பண்ணுற மாதிரி காட்டி இருக்கலாம்.
4 . அத்தன போலீஸ் காரங்க எப்படி வாரங்க, செத்துபோரங்க , ஆனா தமிழ் நாட்டுல ஒன்னுமே நடக்கல.
5 . ரோபோ ரஜினிய Defence ஆளுங்க கிட்ட அறிமுகம் படுத்தும் காட்சி சுத்த சப் ஸ்டாண்டர்ட். எந்த Defence உயர் அதிகாரிகளும் இப்படி ஓபன் space ல உட்காந்துட்டு Demonstration பாக்க மாட்டாங்க. ( Associate directors ...Please Note)
தலைப்பு
திரை விமர்சனம்
Subscribe to:
Posts (Atom)