Pages

Friday, December 31, 2010

சுய விளக்கம்...!

கொஞ்ச நாளா ஆணி புடுங்கிற வேலை அதிகமா இருந்ததால பதிவு போடா முடியாம போயிருச்சு. நம்ம நாட்டு முதல் குடி மகள் புனேக்கு வர போறாங்க இல்லையா அதனால செம வேலை ,அதுவும் இல்லாமல் நான் கொஞ்ச நாள் லீவ்ல தமிழ்நாடு வந்துட்டேன். அட சாமி வாழ்கையே வெறுத்து போச்சு இந்த ஜனாதிபதி யோட வருகைனால். அத பத்துன பதிவ டீடைல்லா அப்புறமா போடுறேன். இப்போ பதிவ போட்டு "நீ ஏன்டா இப்போ முந்திரிகொட்டை மாதிரி ,அரசாங்க ரகசியத்தை போட்டு உடைத்து விட்டாய்னு" ஏதாவது வம்பு வந்து சேர்ந்தாலும் சேரும். புள்ள குட்டி காரன் அதனால ஜனவரி எட்டாம் தேதிக்கு அப்புறம் போடுறேன். நம்ம Air Force Station க்கு தான் வராங்க. கொஞ்ச நாள் பொறுத்துக்குங்க .

நான் எதோ வெட்டியா இருக்கிற நேரத்துல இப்படி பதிவ போட்டு எனக்கு நானே வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி சரி, நம்மள மாதிரி இன்னும் யார் யார் இருக்காங்கனு பார்க்கும் போது தான் ஒரு விஷயம் நல்லா புரிந்தது.  இப்படி பதிவு  போடுற ஒரு பெரிய தலைமுறையே இருக்குதுன்னு அப்பா தான் தெருஞ்சுச்சு. நான் 2008 இருந்து தான் பதிவ போட்டுட்டு இருக்கேன். ஆனா சில பேர் 2006 ல இருந்து இத பண்ணிட்டு இருக்காங்க .
எப்பா, எவ்ளோ பேர் , ஒவொருவரும் எப்படி எல்லாம் பதிவு போடுறாங்க. ஒரு பெரிய தலைமுறை எழுத்தாளர்களே அங்க இருக்காங்க . அது தனி உலகம்னு அப்போ தான் புரிந்தது. என்ன மாதிரி IT பீல்ட்ல இல்லாம பதிவு போடுறவுங்க ரொம்ப ரொம்ப  கம்மி. அப்புறம் பார்த்தா ,பெரும்பாலும் அனைவரும் வெளி நாட்டில் வேலையில் இருப்பவர்கள். சிறு கதைகள் கூட எழுதுறாங்க . போட்டி வைத்து பரிசு கூட கொடுக்குறாங்க. பதிவு போடுறவங்க எல்லோரும் சுஜாதாவை படித்து இருக்காங்க, இன்னும் பெரிய பெரிய இலக்கிய எழுத்தாளர்களை எல்லாம் படித்து இருக்காங்க. நல்லா வேலைல இருந்து கை நிறைய சம்பாதிக்கிறாங்க.

வயறு வலிக்க சிரிக்கிற மாதிரி பதிவு போடுறதுல டுபுக்கு க்கு ஈடு இணை இல்லன்னு தான் சொல்லுவேன். நல்ல அருமையான அறிவு பூர்வமான மற்றும் கருத்த பதிவு செய்றதுல யுவகிருஷ்ணா நல்லா பண்ணுறார். அவர பத்தி தமிழ் விக்கி பீடியால கூட வந்து இருக்கு.பொற்கொடி, இம்சை அரசி , அப்பாவி தங்க மணி  இப்படி பெண் பதிவு போடுரவங்களும் உண்டு. இதுல இவங்க தொடர் கதை, சிறு கதை கூட எழுதுறாங்க. சுவாரசியம் குறையாம கதை எழுதுறாங்க. போஸ்டன் ஸ்ரீராம் ,வெட்டிப்பயல் இவங்க பதிவு போடுறதோட இல்லாம soft ware engineer க்கு நல்ல அறிவுரையும் தருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் "ராமன் எத்தனை ராமனடி""மதுரையம்பதி" மாதிரி பக்தி பதிவு போடுரவங்களும் உண்டு.பரிசல்காரன்- இவர் என்னக்கு பக்கத்துக்கு ஊர் திருப்பூரை சேர்ந்தவராம். ஆனந்த விகடன்ல பார்த்ததுக்கு அப்புறம் தான் இவரை பின் தொடர்ந்துட்டு இருக்கேன். றேடியோஸ்பதி இவர் இலங்கை நாட்டை சேர்ந்தவர்னு நினைக்கிறன். அப்புறம் வால்பையன் நாம மனசுல சில சமயம் என்ன நினைக்கறமோ அதை அப்படியே எழுத்துல சொல்லுறார். கோயம்பதூர்க்கு பக்கத்துல்ல இருக்கார் போல ,முடிஞ்சா நேர்ல பார்த்து சில அறிவுரை வாங்கணும் ( எப்படி பதிவ சுவாரசியமா போடுறதுன்னு தான் ....)

அப்பப்பா ஒவ்வொருவரும் எப்படி எல்லாம் பதிவு போடுறாங்க ....! ஒவ்வொருவருக்கும் எவ்ளோ அறிவு இருக்கு. என்னமாய் பதிவு போடுறாங்க. இவங்க எல்லோரும் இந்த பதிவு போடுறதுல பழம் தின்று கோட்டை போட்டவர்கள். நான் எல்லாம் சின்ன கத்து குட்டி.  பெரிய யானை கூட்டத்துக்குள்ள புகுந்து விட்ட சுண்டெலி மாதிரியான நிலைமை என்னோடது. இவங்களோட பதிவுக்கு முன்னாடி நான் எல்லாம் ஒன்னும் இல்லை.....! சரி எதுக்கு பதிவ போடுறத நிறுத்திக்கலாம் , இவங்க பதிவ வாசித்தா போதும்னு என் நண்பரிடம் ( லிங்கம் )  சொன்னேன். "வேணாம் அருள் continue பண்ணுங்க , உங்கள நான் படிக்கிறேன்னு" சொன்னார். தங்கமானவர்.( அவருக்கு சனி பகவான், எழாம் இடத்தில இருந்து உக்கிரமாய் பார்க்கிறாராம்... ஜாதகம் பார்த்து சொன்னார்...டைம் சரி இல்லையம்...ஹும்ம்ம் ..விதி ...!). சரி இவ்ளோ பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் இருக்கும் போது ,என்னை மாதிரி சுண்டெலிக்கு ஒரு இடம் இல்லாமலா போய்டும்னு பதிவ தொடரலாம்னு இருக்கேன். அடுத்த வருசத்துல இருந்து நல்ல நல்ல பதிவ மட்டும் போடணும்னு முடிவு பன்னி இருக்கிறேன். அதனால் தான் சில பதிவ நான் நீக்கி விட்டேன்.ஒரு ஸ்டாண்டர்ட் வேணும் இல்ல அதான்...!

Thursday, November 4, 2010

ஞாபகம் வருதே...ஞாபகம் வருதே...!

நாளைக்கு தீபாவளி  ஒவ்வொரு  தீபாவளியீன்   போதும்  நான்  என்  குடும்பத்தாரின்  அருகில்  இல்லாமல் போய் விடுகிறது.நான் டவுசர்  போட்டு  இருந்த  காலத்தில் ,(இப்பவும்  ரூம்ல  அதை  தான்  போட்டுட்டு  இதை  உள் ஈடு   செய்கிறேன் ...)தீபாவளியை  தான்   மிகவும்  மகிழ்ச்சியாய்  கொண்டாடுவேன் . வயது  ஏற  ஏற  இப்போ அந்த கொண்டாட்டங்கள்   எல்லாம்  ஒரு  நினைவாக  மட்டும்   உள்ளது  . இந்த  பெரிய   பெரிய  எழுத்தாளர்கள்  எல்லாம்  சொல்லுவங்கலே , வாழ்கையின் தொலைந்து   போனா  பக்கம் ,தொலைந்து  போனா  பக்கம்னு  அப்படி  ஆகி  போச்சு .

டவுசர்  போட்ட காலத்தில்  தீபாவளின்  ஜுரம்  ஒரு  வாரத்துக்கு   முன்னால்  இருந்தே  ஆரம்பித்து  விடும் .பத்தாததிற்கு  ரேடியோவில்  சேவல்  மார்க்  பட்டாசுகள்  ,சங்கு மார்க் பட்டாசுகள் , ஐயன்  மார்க்  பட்டாசுகள் , என  வித  விதமாக  விளம்பரம்  வேறு  போடுவார்கள் .அப்பா  எப்பாடு  பட்டாவது   தவனை முறைல்லாவது  புது  துனி  எடுத்து  கொடுத்து  விடுவார்.டைலர்  அண்ணாவிடம் , கெஞ்சி  கூத்தாடி ,விரைவாக தைத்து  தர   சொல்லி போரடி வாங்கி  வருவேன் . புது  துணியின் மொற மொறப்புடன்   ,கஞ்சி வாசனையுடன்  அதை  போடும்  போது  ஒரு  புது  விதமான  மகிழ்ச்சி ஏற்படும்.

இந்த  சமயத்தில்  தங்கை  உடனான  சண்டை  பெரிதாக  எடுத்து  கொள்ள  மாட்டேன்  .பின்ன  இன்னும்  கொஞ்ச  நாளில்  பெரிய  பெரிய  யானை  வெடி ,லட்சுமி  வெடி , டபுள்   சாட் ,ராக்கெட்  இப்படி   எல்லாம்  விட  போறவன்   பிச்கோது  தங்கச்சி  கூடவா  வீரத்தை காட்டனும் .நாஹ் ...ஹ.. அப்பிடின்னு ஒரு  சத்யராஜ் வில்ல  தனம் காட்டுவேன்  . தங்கை  ஒரு  அப்புராணி .கொள்ளு  பட்டாசே  கொஞ்சம் சத்தமா வெடிச்சா  பயந்து  போய்டும் .( இப்போ  என் மச்சான் அவளை  கண்டு  நடுங்கறத பார்க்கணும் ..)

சுமாரா   ஒரு  மாசத்திற்கு  முன்பு இருந்தே   காசு  சேகரிக்க  ஆரம்பித்து  விடுவோம்.  டெய்லி  காலண்டர்ல  தீபாவளி   தேதிய  பார்த்து  பார்த்து  ,எப்ப  வரும்  எப்ப  வரும்னு ஆவலா   இருக்கும் .தீபாவளிக்கு  நாலு  நாட்களுக்கு  முன்னாடியே , வெடிகள்  எல்லாம்  வாங்கி  வைத்து  கொள்வோம் . அப்பா  தான்  வாங்கி தருவார். தங்கைக்கு  தனி, எனக்கு  தனி. ரெண்டு  பெரும் ஸ்கூல் விட்டு  வந்தவுடன் , ஒரு  சிமெண்ட்  சாக்கில்  எங்கள்  பட்டாசை எல்லாம்  எடுத்து  போட்டு  வெயியில் காய   வைத்து  கொண்டு  காவல்  இருப்போம்.

 காலனியில் இருக்கும்  பசங்கள் வந்து என் பட்டாசுகளை பார்த்தால் பெருமையாக இருக்கும். அதே  போல  நானும் அடுத்தவர் காய போட்டு  இருக்கும்  வெடிகளை  ஒரு  நோட்டம்  பார்த்துட்டு  வருவேன் .என்னைய  கட்டிலும்  நிறைய  வெடியோ  அல்லது ,பெரிய  வெடியோ  இல்லை  வித்தியாசமா  எதாவது  இருந்த  அவ்ளோ  தான்  உடனே  அம்மாவிடம்  வந்து  ஒரே  நச்சு  பண்ணிவிடுவேன்.
"அவன் கூட அந்த வெடி வச்சு இருக்கான் அப்பா  எனக்கு மட்டும் சதி பண்ணிட்டர்னு" ஒரே பொலம்பல் போடுவேன். இவன்  தொந்தரவு  தாங்க  முடியவில்லைன்னு  எதோ  ஒன்னு  ரெண்டு  அய்டம்    கூட கிடைக்கும் . கிடைதவரை   லாபம்னு  நானும்  இருந்துக்குவேன்.

எதுத்த வீடு  ரவி  குமார்  மட்டும்  ஒன்னும்  வாங்காமல் இருப்பான்  .தினமும்  அவன்  அம்மாவிடம்  "அம்மா  அப்பாவை  பட்டாசு  வாங்கி  தர  சொல்லுமா"  னு  நச்சரித்து  கொண்டே  இருப்பான் . என்னோட  பட்டச  பொறாமையாக  பார்ப்பான்  .என்னக்கு  அவனை  பார்க்க  பாவமாக  இருக்கும் . சரி  தீபாவளி அன்றைக்கு  ஒரு  கட்டு  லட்சுமி  வெடி  கொடுதரலாம்னு இருந்தேன் . அவர் அப்பா போலீசில்  இருப்பவர் .தீபாவளிக்கு  முன்னாடி  ஒரு   சாக்கு  பை  நிறைய  வெடி  வாங்கி  வது  அந்த  காலணிலேயே  அதிக  வெடி  வைத்திருப்பவனாக  ரவிக்குமார்  ஆய்ட்டான் . என்னக்கு வயிற்றுக்குள் புஸ்வானம்  எரிந்தது .அப்பா  மேல்  கோவம்  கோவம்மாக  வந்தது  அப்பா  ஏன் போலீஸ்  ஆக  வில்லை  என்று .

இருந்தாலும் , பெரிய  பெரிய வெடிகளில்  நான்  தான்  முன்னனில்   இருப்பேன் .எதுத்த வீட்டில்   நான்கு  அக்காக்கள்  கொண்ட  ஒரு  குடும்பம்  இருந்தது . ஒரு  அக்காவிற்கு  வாய் பேச  வராது . ஆனாலும்  நான்  அவர்களுடன்  கை  ஜடையில் பேசுவேன் ,சண்டை  போடுவேன் ,விளையாடுவேன் . அவர்களை  நான்  ஒரு  போதும்  ஒரு  மாற்று  திறனாளி என்ற  கோணத்தில்  பார்த்தது  இல்லை . அதனால்  என்னவோ  அவர்களுக்கு  என்  மீது  தனி பாசம் உண்டு  .அவர்கள்  வீட்டுக்கு  வரும்  வெடிகளை  என்னக்கு  தந்து  நான்  வெடிப்பதை   வேடிக்கை  பார்த்து  சந்தோஷ  படுவார்கள் .

 தீபாவளி  அன்றைக்கு  காலை யார்  முதலில்   பட்டாசு  வெடிப்பார்கள்  என்று எங்களுக்குள்  ஒரு  போட்டியே இருக்கும்  .நான் அலாரம்  வைத்து  கொண்டு, பொறுக்காமல்  இரவு நாடு நடுவே  எழுந்திரித்து  பார்த்து  கொண்டு  தூங்குவேன்.சரியாய் ஒரு  மணிக்கு  எழுந்திரித்து  ஒரு ஆட்டம் பாம்ப்  வைத்து  விட்டு  வந்து, முதலில்  வெடி  வைத்தேன்  என்ற  வெற்றி  களிப்பில்  மறுபடியும்  தூங்குவேன். ஒரு மணி ஆனா தான் அடுத்த நாள் ஆச்சுனு எங்க காலண்டர்ல கணக்கு.

காலையில் எப்படா  இந்த  சாமி  கும்பிடும்  வைபவம்  முடியும்  எப்போ  வெடி  வைப்பதுன்னு  ஒரே  பர பரப்பா   இருக்கும் . அவசர அவசரமாக ஒரு  தாஜ்  மஹால் கட்ட பிரித்து  கொஞ்சம்  பட்டாசை  பான்ட்  பாக்கெட்டில்  போட்டுகொண்டு நண்பர்கள்  இருக்கும்  இடம்  சென்றால் , அங்கு  எவனாவது  ஒருவன்  நான்  தான் முதலில் பட்டாசு  வெடித்தேன்  என்பான் . அங்கே  ஒரு  சின்ன வாக்குவாதமே வரும் .யார்  முதல  வெடி  வைத்தோம்  என்பதற்கு  அவர்  அவர்  அப்பா  அம்மாவிடம்  சாட்சிக்கு  போவோம் .வாயில்  பலகாரத்தை  திணித்து  "போய்  ஒழுங்கா  வெடிய  வெடிங்கடா " னு  செல்லமா  திட்டு  விழும் .

ஊசி  பட்டாசை  ஊது  வத்தி  கொண்டு  வெடி  வெடிக்கும்  சின்ன  பசங்களை  ஒரு அலட்சிய    பார்வை  பார்த்துட்டு , டேய் இங்க  பாருன்னு  ஒரு  ஊசி  பட்டாசை  கையில்  கொளுத்தி  போடுவேன் . பயல்கள்   மிரண்டு  போய்விடுவார்கள் .தந்கைக்கும் ,அவளின்  தோழிகளுக்கும்  இருக்கவே  இருக்கு  கலர்  தீப்பெட்டி ,சாட்டை ,பாம்பு  மாத்திரை ,இப்படி  . அவங்க  ஏரியா  பக்கமே  போக  மாட்டோம் . ஒரு கேங்கா சேர்ந்து  கொண்டு  வீதி  வீதியாய்  சுற்றுவோம் .யார்  யார்  எப்படி  எப்படி வெடி  வைகிறார்கள்  என்று .

பின்னர் , கொள்ளு  பட்டாசு   வெடிப்போம் .ஒரு  நட்டு  அதான்  நடுவில்  இரண்டு வாசர். அந்த  வாசருக்கு நடுவில் கொள்ளு  பட்டாசை  மூன்று  நான்கை  ஒன்றாக  வைத்து , நன்றாக டைட்டாக மூடி  விட  வேண்டும் ,பின்னர்  ஒரு  பாம்ப்  போடுவது போல  தரையில்  போட்டால்  அது  எதோ  கை  எரி  குண்டு  போல  "டமால் " என வெடிக்கும்   பெண்கள்  அருகில்  இதை  செய்து  காட்டி  அவர்களை  மிரண்டு  ஓட  வைத்து  எங்கள்  வீரத்தை  பறை சாற்றுவோம். அதுவும் நாம்ப டாவு அடிக்கும் பொண்ணு முன்னாடி ஒரு பெரிய ஆட்டம் பாம்ப்யோ இல்லை ஒரு புல்லெட் வெடியோ திரிய கிள்ளாமல் அப்படியே ஸ்டைலா வச்சுட்டு உடனே ஓடி வராம, ஹ இது எல்லாம் என்னக்கு பிஸ்கோத்து ,நா யாரு இதுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன்னு மெதுவா திரும்பி வந்து ஸீன் போட்டா தான் வீரத்துக்கு அழகு . ( ஆனா மனசுக்குள்ள ஆண்டவா,என் ஆளு முன்னாடி மானத்த வாங்கிடாத  நான் அந்த பக்கத்துக்கு போனா அப்புறம் வெடிக்கனும்னு வேண்டிட்டே திரும்பி வருவேன்...! )

பின்னர்  ஆரம்பிக்கும்,திருடன் போலீஸ் விளையாட்டு.இதில் மட்டும்  விதி  விலக்காக  பெண்களையும்  சேர்த்து  கொள்ளவோம் .ஏன்ன நிறைய  திருடன்  போலீஸ்  இருந்தால் தான் விளையாட்டு காலை கட்டும் . சுருள் கேப் வெடியை  துப்பாகியில்  போட்டு  கொண்டு ஒருவரை ஒருவர்  துரத்தி  துரத்தி  "டுமில் ""டாமல் "னு  சுட்டு  கொண்டே  இருப்போம் .

பின்னர்  கொஞ்சம்  ரெஸ்ட் . அப்போ  தான்  அம்மா  என்ன  பலகாரம்  பன்னி  இருக்கானு  மெதுவாக  சமையல் அறை பக்கம்  எட்டி  பார்ப்போம் ."வாடா, தொரைக்கு  இப்போ  தான்  பசி  எடுக்குதோ .." அப்படின்னு  திட்டிதே  பலகாரம்  மற்றும்  காலை உணவை  அம்மா  கொடுப்பாள் . பலகாரங்கள்  ஒரு  வீட்டில்  இருந்து  இன்னொரு  வீட்டுக்கு  பரி  மாற்றம்  செய்யப்படும் . நான்  ஓடி  ஓடி  "aunty ,அம்மா  இத  உங்க  கிட்ட  கொடுக்க  சொன்னங்க " னு  சொல்லி , சொல்லி எங்கள்  வீட்டு  பலகாரத்தை  கொடுப்பதில்  என்னக்கு  அப்படி  ஒரு   சந்தோசம் .

மறுபடியும்  வெடி  வெடிக்கும்  படலம் . யாரும்  கட்டுடன்  வெடி  வெடிக்க  மாட்டோம் .தீர்ந்து போய்விடும்  அதுவும்  இல்லாமல்  அதில்  ஒரு  சுவாரசியம்  இல்லை . மாட்டு  சாணியின்  மேல் , தேங்காய்  ஓட்டின்  மேல் ,கல்  சந்துக்குள் , மணலை  குவித்து  வைத்து மணலுக்குள் , என  வித  விதமாக  ஐடியா வைத்து  வெடிப்போம் .

காலனியில் நான்  தான்  பெரிய  வெடி  வைப்பேன் .லட்சுமி  வெடி , ஆட்டம் பாம்ப் ,புல்லெட் வெடி ,யானை  வெடி ,கல்வெடி ,தாஜ்மகல் ,இப்படி .பட்டாச்சு  வெடிப்பதலயும் ஒரு  முறை  உண்டு . ஒவொரு  பட்டாசின்  திரியையும்  சிறிது கிள்ளி  விட்டு  மருந்தை  எடுத்து  விட  வேண்டும் .அப்போ  தான்  சர்ருனு  பத்தாம மெதுவா  டைம்  பாம்ப்  மாதிரி  வெடிக்கும் .அந்த  தீ  கங்கு  எப்போ  சர்ருன்னு  வேகமா  பத்துதோ  அப்போ  அடி  வயற்றில்  ஒரு  பயம்  வரும்  பாருங்க  அது  தீபாவளில தான்  கிடைக்கும் . நான்  இந்த  திரிய  கிள்ளாமல்  வெடி  வைப்பதில்  கில்லாடி .( "டேய்  அருள்  திரிய  கிள்ளாமலே  வெடிப்பான்  டா ...! )அப்பப்போ ஊதுவத்தியை  ஸ்டைல்  ஆக  ஊதி  விட்டு ஸீன் போட வேணும். அப்போ தான் மதிப்பு.

அன்று  இரவு ,சங்கு  சக்கரம் , கம்பி  மத்தாப்பு ,சாட்டை , ராக்கெட் ,பரசூட்  ராக்கெட் ,புஸ்வானம் ,பென்சில்  இப்படி  மைல்டா வைத்து  அன்றைய தீபவளிய  நிறைவு  செய்வோம். ஒரு தடவை கம்பி மத்தாப்பை தூக்கி எரிந்ததுல அது ஒரு தென்னை மரத்துல போய் சொருகி கொண்டு ஒரு முழு தென்னை ஓலையை எரித்து விட்டு தான் அணைந்தது . அன்றைக்கு அப்பாவிடம் முதுகில் வாங்கிய பல்பு இன்னும் ஞாபகம் இருக்குது. அடுத்த  நாள்  கலையில்  வெடித்த  காகித  குப்பைகளுக்கு  இடையே , வெடிக்காத  பட்டாசுகளை  பொருக்கி  எடுத்து ,அதில்  இருந்து  மருந்தை  ஒரு  பேப்பர்ல   கொட்டி பத்த வைத்து  கையை  சுட்டு  கொண்ட  அனுபவம்  நிறைய .

இப்போது  தீபாவளி  எல்லாம் , காலைல டிவியில் சிறப்பு  நிகழ்ச்சியில் ஆரம்பித்து , இந்திய  தொலைக்காச்சியில் முதன் முறையாகவில் முடிகிறது . அல்லது எதாவது சினிமா  தியேட்டர்ல் ஆரம்பித்து  அங்கே  முடிகிறது . இதில்  டாஸ்மாக்கை  நான்  சேர்க்க  வில்லை . என்ன  கொடுமை  இது .

என்னக்கு  தெரிந்து  எங்கள்  உறவினர்  ஒருவர்  ( அண்ணன்  தம்பிகள்  நாலு  பேர் ..இவர்  தான்  அதிகம்  படித்தவர் . A.E யாக  உள்ளவர் )இரண்டு  மாதங்களுக்கு  முன்பே  திட்டம்  இட்டு ,சிவகாசி சென்று  பட்டாசு  வாங்கி  வந்து  விடுவார்கள் . தீபாவளி  அன்று  மொத்த குடும்பமும் சேர்ந்து  கொண்டு  ரகளையாக  வெடி  வெடிப்பார்கள் .இப்போ  அவரும்  வெடிப்பதை  குறைத்து  கொண்டார் . ஆனால்  குடும்பமாக  ஒன்றாக  கொண்டாடுவதை  விட்டு  விட  வில்லை .

பண்டிகை  நாட்களில் , குடுன்பதாருடன்  ஒன்றாக  கூடி , சொந்த  பந்த்ங்களுடம்  உறவாடி  ,மனம்  விட்டு  பேசி , கலாய்த்து,சந்தோசம்மாக சாப்பிட்டு  கொண்டாடுவது  என்பது  கொஞ்சம்  கொஞ்சமாக  அழிந்து  வருகிறது . இன்னும்  கொஞ்ச நாட்களில் பண்டிகை  என்றாலே  TV யும்  , சினிமாவும்  தான்  என்று  ஆகிவிடும்  போல  இருக்கு . பக்கத்தில் இருப்பதால் உறவுகளின் அருமை தெரிவது இல்லை. என்னை மாதிரி எல்லோரும் இருந்தும் அனாதையாக இருக்கும் ஆட்களுக்கு தான் அது புரியும். இந்த லிஸ்ட்ல வெளி நாடு சென்று சம்பாதிக்கும் நண்பர்களும் ,நண்பிகளும் அடக்கம்.

தீபாவளி நல் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்...!

Saturday, October 30, 2010

உங்களுக்கு ஒரு முக்கியமான தகவல் ( ஏன் முக்ககாத தகவல் இல்லையானு கேக்க கூடாது.) . நான் wordpress.com ல் இரு ப்ளாக் ஆரம்பித்து இருக்கேன் . அதன் உரலி : http://vetipayan.wordpress.com . இன்னும் கொஞ்ச நாட்களில் என்னை அங்கேயும் பார்க்கலாம்.
இந்த உலகத்த நான் சும்மா விடுறதா இல்லை.

"ப்ரா"பளம்...!

எச்சரிக்கை:  வயது வந்தோர் மட்டும் படிக்கவும்.

கடந்த  வருடம்  “ சொல்லி  தருவது   எப்படி ” என்று  எங்களுக்கு  சொல்லி  தந்தார்கள் .அந்த  பயிற்சிக்காக   03 மாதங்கள்  தமிழ்  நாட்டின்  தலை  நகரமாம்  சென்னைக்கு  இனிய  கனவுகளுடன்  வந்து  இருந்தேன் . பயிற்சி  இடம்  தாம்பரம்  . ஆனால்  பெரும்பாலும்  கோர்ஸ்  நேரம்  போக  மத்த   நேரத்தில்  நாங்கள் , ஊர்  சுற்றி  கொண்டு  தான்  இருப்போம் . கோடம்பாக்கம், நண்பனுடன்    சென்று  டைரக்டர்  சரவணன் அவர்களை  பார்த்தோம் . அது  ஒரு  தனி  எபிசொட் , விவரமாக  அப்புறமா  சொல்லுறேன் . விசயத்திற்கு  வருகிறேன்  .
 
நாங்கள்   மூவரும்  சேர்ந்து  கொண்டு  ரங்கநாதன்  தெருவில்  கிடைப்பதை  எல்லாம்  வாங்கி  கொண்டு  இருந்தோம் . எங்கள்  மூன்று  பேரில்   இருவர்  ஆயுள்  கைதிகள்  (திருமணம்  ஆனவர்கள் ), ஒருவர்  கைதி  ஆக  போகிறவர் .
சரவணாஸ்  ஸ்டோர் இல்   இருந்து  வெளியே  வந்து  அருகில்  இருந்த  பெரிய  துனி  கடைக்குள்  நுழைந்தோம் . உள்  ஆடை  இருக்கும்  தளத்திற்கு   விஜயம்  செய்தோம் . நண்பன்  தன்  மனைவிக்கு   உள்  ஆடை  வாங்க   செலக்சன்   செய்து  கொண்டு  இருந்தார் . நாகரீகம்  கருதி  அவரிடம்  இருந்து  விலகி , கடையில்  ஆங்  ஆங்கே  Bra   ,panties   மாட்டி  தொங்க  விட்டு  இருந்த பொம்மைகளை பார்த்து  கொண்டே  டைம்  பாஸ்  பன்னி   கொண்டு  இருந்தேன் . என் மானசிக கனவு  கண்ணிகள்  எல்லோரும்  அந்த  பொம்மைகளாக  கற்பனை  பன்னி  கொண்டு  இருந்தேன். அட அட என்ன   ஒரு  செக்ஸ்சி   . சில   பொம்மைகள்   போட்டு  இருந்த  பிரா , பண்டீஸ் , பார்க்கும்  போது , போட்டாலும்  போடலைனாலும்  ஒன்னும்  பெரிய  வித்தியாசம்  தெரிய  போவது  இல்லை , அந்த  அளவிற்கு  "ஸீத்ரூ"…! என்ன  என்ன  வித  டிசைன் , கலர் , சைஸ் , …அட  அட …. அதுவும் இந்த மெலிதான strap உள்ள பிரா என்றால் நான் மிகவும் ரசிப்பேன்.
 “அருள் …அருள் …”கைதி  ஆக  போகும்  நண்பன்  என்  பின்னல்  இருந்து  என்னை கூப்பிட்டான் .அருகில்  சென்றவுடன் 

“அருள் , … என்னக்கு   பிரா  , பண்டீஸ்  வாங்க  வேணும் ..”
என்னக்கு  10 வருடங்களுக்கு  முன்பு  நடந்த  விஷயம்  ஞாபகம்  வந்தது . மெதுவாக விட்டதை அண்ணாந்து பார்த்தேன் ....

(இப்போ  நீங்கள்  ஒரு  மார்டின்  ஜம்போ  கொசுவத்தி  சுருளை  உங்கள்  முகத்துக்கு  முன்னாடி  சுற்றி  கொள்ள  வேண்டும் , அப்படியே  மெதுவாக  விட்டதை  அண்ணாந்து  பார்க்க  வேண்டும்...  ஏன்னா   இது  flash back….)

  FLASH BACK:
[ மூக்கின்  கீழேயும் ,தாடைலும் கொஞ்சமாக  முடி  எட்டி  பார்த்து  கொண்டு இருந்த  பதின்  வயதின் கால  கட்டத்தில்  இருந்த  நேரம்  அது . நண்பன்  ஒருவனுக்கு  உள்ளாடை  வாங்க  கடைக்கு  போய்  இருந்தோம் . ஜட்டி  வாங்க  வேண்டும் . ஆனால்  கடை  முழுதும்  ஒரே  பெண்கள்  மயம் . மிகவும்  கூச்சமாக  இருந்தது. 
“மச்சி , பேசாம  திரும்பி  போயடலம்டா  ”
“ச்சே  …கம்முனு  இரு  மடையா , கடைக்குள்ள  வந்துட்டு  சும்மா  போனா கடைக்காரன்  நம்மளை  பத்தி  என்னை  நினைப்பான் ?” –நான் 
தயங்கி  தயங்கி , இங்கும்  அங்கும்  பார்வையை  ஓட  விட்டு  கொண்டு திரு   திருனு  முழிப்பதை பார்த்த  கடை  காரர்  ஒரு  பெண்ணை  எங்களிடம்  அனுப்பி  வைத்தார் .

( Hello, என்ன  வேணும்னு  விசாரிக்க  தான் …உடனே  உங்க  புத்தி  ஏன்  தான்  இப்படி  போகுதோ …) .கடை  காரர்  நாசமா  போக . ஒரு  ஆணை  அனுப்பி இருக்க   கூடாதா . சரி  தைரியத்தை  வரவளைத்து  கொண்டோம் 
.
“ Kiya chaiye sir….(என்ன  சார்  வேணும் ).”…? ( ஹிந்தியில்   கேட்டாள் ..)
“ம்ம்ம் ..ம்ம்ம் …வந்து  வது …” நண்பன்  பயங்கரமாய்  திணறினான் .
“ஒரு  பனியன்  வேணும்  ” நான் .
ஒரு  பெரிய  முறைப்பு  பதிலாக  வந்தது  நண்பனிடம்  இருந்து . இருக்காத  பின்ன , பனியன்  வாங்கறதா  ஒரு ஐடியாவே  கிடையாது . இருந்தாலும்  பேச்சை  துவங்க  அதை  விட்டால்  என்னக்கு  வேறு  வழி  தெரியவில்லை

“ என்ன  சைஸ் …?”
“ம்ம் .ம்ம் .இல்லை  இல்லை .. பனியன்  இல்லை …ஜட்டி  வேணும் ” 

நண்பன்  கடைசியாக  சொல்ல  வேண்டியதை  சொல்லியே  விட்டான்.  பெருமையாக  ஒரு  ஓர  பார்வை  வேறு  பார்த்தான் .
“ என்ன  சைஸ் ”? மறுபடியும்  அதே  கேள்வி . நண்பனுக்கு  ஒன்னும்  புரியல . என்னை  பார்த்தன்.
“டேய்   உன்  ஜட்டி  சைஸ்  என்னடா , சொல்லு ..”
அந்த  பெண்  எங்களையே  பார்த்து  கொண்டு  இருந்தாள் ….
நான்  தமிழில்  “டேய்  உன்னோட  ஜட்டி  சைஸ்  என்னனு  கேக்குறா , சீக்கிரமா  சொல்லி  தொலை …” 
“தெரியலையேடா  , அம்மா  தான்  எப்பவும்  எடுத்து  கொடுப்பாங்க , , நான்  இந்த  கலர்  மட்டும்  வேணும்னு  சொல்லுவேன்  அம்மா  வாங்கி  தருவாங்க …” 
என்னைய  நானே  நொந்து  கொண்டேன் , LKG பையன்  கூட  கடைக்கு வந்ததுக்கு .
‘ஒரு  குத்து  மதிப்பா  சொல்லுடா …”

“ அப்படியா .அப்ப  சரி  …ம்ம்ம் ..15 cm ” 
அந்த  பெண்  நம்பாமல்  எங்களை   பார்த்தாள்.

“எவ்ளோ ?”
“15 cm..ஆமா  15 cm தான் .”
அவள்  நண்பனின்  கீழே  இடுப்பை  பார்த்தாள் . ( நாங்கள்  tuck in பன்னி  இருந்தோம் ..)
“இல்லை  சார் , உங்களுக்கு  85 இல்லைனா  90 cm தேவைப்படும் ”
நண்பன்  வெல வெலத்து  போய்ட்டான் 

.” டேய்  அருள்  என்னடா  இவ  இப்படி  சொல்லுறா , என்னோடது  அவ்ளோ  "நீளம் " இல்லைடா  , அதுவும்  இல்லாமல்  இவளுக்கு  எப்படி  என்னோட  சைஸ்  தெரியும் , அதுவும்  மேல  பேன்ட்ட  பார்த்து  சொல்லுறா …?’
அட  ஆண்டவா  இவனை  எல்லாம்  வச்சுட்டு  என்ன  பண்ணுறதுன்னு  தெரியல . கடைககுள்ள  இறுகோம்னு  கூட  பாக்காம  மண்டைல  நச்சுனு  ஒரு  கொட்டு  வைத்தேன் .
“லூசு , ஜட்டி  சைஸ்  இடுப்போட  அளவ  வச்சு  முடிவு  பண்ணுவாங்க , வேற  எதையும்  வச்சு  இல்லை …” கொஞ்சம்  கோபமாகவே  சொன்னேன் .
எப்படியோ  வேர்த்து  விர்விர்த்து  3 ஜட்டி வாங்கி விட்டு  வெளியே  வந்தோம் . அப்போ  அந்த  அளவிற்கு  எங்கள் உள்ளாடை   அறிவு  இருந்தது .]

FLASH BACK முடிந்தது...!

“என்னது  …உன்னைக்கா …பிரா பண்டீஸ்ஸா ? சே  சே  அதெல்லாம்  உன்னக்கு  நல்லா  இருக்காதுடா …”
“ஜோக்கு ….போடங் …! என்  கேர்ள்  பிரண்டுக்கு  வாங்கணும்டா  ,ப்ளீஸ்  ஹெல்ப்  மீ  அவுட்  ”
என்னமோ  நான்  இந்த  பிரா , பண்டீஸ்  வாங்குறதுல  கரை  கண்டு  விட்ட  மாதிரியும் , இந்த  விசயத்தில்  நான்  Phd பட்டம்  வாகிய  மாதிரியும்   அவன்  என்னை  கேட்டு  கொண்டது  என்னக்கு   பெருமையாக  இருந்தாலும்  தயங்கினேன் .
“ என்னடா   இது  உன்  கேர்ள் பிரண்டுக்கு, எடுக்க  என்னைய  போய்  கூப்பிடுற  , சரியாய்  வராது  நீயே  போய்   செலக்ட்  பண்ணு ”
“இல்லை  அருள் , நான்  என்ன  நீ  எடுத்து தந்தனு   சொல்லவா  போறேன் , just help me out yaar..”
“வேனான்பா , கேர்ள் பிரண்டுக்கு, பிரா ,பண்டீஸ்   எல்லாம்  கிப்ட்  பண்ணுனா  பிரச்னை   ஆய்டும்டா ..”
“ஹே ,இல்லபா  நாங்க  வெரி  க்ளோஸ் பிரான்ட் ,அவளுக்கு  இதை  விட்டா   ஒரு  ஐடியல்   கிப்ட்  இருக்க  முடியாது . பையனா  இருந்தா பனியன் ,ஜட்டி  எடுத்து  கொடுப்பேன் ,பொண்ண  போயிட்டா அதனால   பிரா  ,பண்டீஸ்  எடுத்து  தர  போறேன்  இதுல  என்ன  இருக்கு ..,..நீ  இப்போ வரப் போரீய  இல்லையா ?"
சரி  விதி  வலியது .இங்கேயும்  ஒரே  பெண்கள்  கூட்டம் , ஆனால்  இம்முறை  அவ்ளோ  கூச்சம்  இல்லை . 
“என்ன  சார்  வேணும் ..” சேல்ஸ்  பெண்  வினவினாள் .
“ம்ம்ம் …ம்ம்ம் . நல்ல  மாடர்னா , டிசைன்னா , கலர்புல்லா  , காஸ்ட்லியா  பிரா , பண்டீஸ்  வேணும் /…”
(நல்லா பெஸ்ட்டா   வாங்கி  தந்து  அசத்த  வேணும்னு  நினைப்பு ).
“ என்ன   சைஸ்  சார் ,…”
நண்பன்  என்னை  பார்த்தான் . அட  ஆண்டவா , என்னக்கு  மட்டும்  ஏம்பா  இப்படி  விதி  விளையாடுது .
I am sorry dude, நீ  தான்  பதில் சொல்லணும்,..  என்னைய  பார்க்காத …”
“ சைஸ்  வந்து … சைஸ்  …வந்து …” நண்பன்  திணறினான்
அந்த  பெண்  எங்கள்  நிலைமையை  புரிந்து  கொண்டு  அந்த  பக்கம்  நகர்ந்தாள்,
Dude, போன்ல  நெறைய  ஸ்வீட்  நத்திங்  பேசுவோம் , கொஞ்சம்  செக்ஸ்யீயா  கூட  பேசி  இருக்கோம் , ஆனால்  சைஸ்  என்னனு  கேக்க  மறந்து போயிட்டேனே ..என்ன   பண்ணலாம் ”
“ ஒரு  கால்  பன்னி  கேளு , its that simple…”நான்
no..no..அப்புறம்  சர்ப்ரைசே    இல்லாம  போய்டும் ..”
அந்த  பெண்  மீண்டும்  வந்து  எங்களை  பார்த்தாள் ,…அவளை   பார்த்து  அசடு  வழிந்தோம்  . அவளுக்கு  புரிந்து  போய்டுச்சு .
“ஒ  சைஸ்  தெரியலையா  சார் ..?”
ஆமா  ,ஆமா  என்று  தலைய  ஆட்டினோம் …
“ என்ன  மாதிரி  இருப்பங்களா ” னு  கேட்டுட்டு  நெஞ்சை  கொஞ்சம்  நிமிர்த்தி  காட்டினாள்.
நானும் , நண்பனும்  அதிர்ந்து , வெல  வெலத்து  போய்ட்டோம. நண்பன்  அவளின்  மார்பகத்தை  ஒரு  விநாடி  பார்த்துட்டு , என்னை  பார்த்தான் . இருவரும்  திணறுவதை  பார்த்து  அந்த  பெண்  மெலிதாக சிரித்தாள்.
“இல்லை …உங்கள  மாதிரி  இல்லை …இன்னும்  கொஞ்சம்  உயரமா ..”

நண்பன்  மழுப்பினான் ( அட  பாவி  மனுசா , என்ன  மாதிரி இருப்பங்களானு உயரதையா   கேட்டாள் …நாசமா  போறவனே மனதுக்குள்   திட்டினேன்  …) . நண்பனின்  கேர்ள் பிரான்ட்டை போட்டோவில்   பார்த்த  ஞாபகத்தில்
“இல்லை  மேடம்  அதோ  அந்த  பெண்ணை   போல  இருப்பாங்க ”னு  ஒரு  குத்து  மதிப்பாய் சொன்னேன் . நண்பனும்  அந்த  பெண்ணை  பார்த்துட்டு

“ ஆமா  ஆமா  அவங்களை  மாதிரி  தான்  இருப்பாங்க ..ஹி ..ஹி ..ஹி …”
“ ஹே  வாசு  இங்க  கொஞ்சம்  வாடி …” இந்த  பெண்  அந்த  பெண்ணை அழைத்தாள்

.நானும்  நண்பனும்  இதை  எதிர்  பார்க்க  வில்லை . பேசாம  ஓடி  போய் விடலாமானு  கூட  யோசித்தேன் .அந்த  வாசு  என்கிற  வாசுகி  எங்கள்  அருகில்  வந்தாள்.
“வாசுகி  ,இவங்களுக்கு  பிரா  வேணுமாம் , கொஞ்சம்  எடுத்து  கொடுத்துட்டு  இரு   நான்  பில்லிங்  செக்சன்  வரை  போயிட்டு  வந்துறேன் ”

அவள்  விலகி   போனாள். அடி  பாவி  இப்படி  நாடு  ஆத்துல  விட்டுட்டு  போயிட்டாளேனு  பதறி  போய்  பார்த்தோம் .
“ என்ன  சைஸ்  சார் , எந்த  மாதிரி  வேணும் ..:?” வாசுகி .
“இல்லை …சைஸ் ..வந்து ..” நண்பன்  மறுபடியும்  என்னை  பார்த்தான் .
“இல்லை  மேடம் ,சைஸ்  தெரியாது , உங்கள  மாதிரி  இருப்பாங்கனு  சொன்னேன்  ,அதான்  உங்களை  கூப்பிட்டு  விட்டுட்டு  அவங்க  போய்ட்டாங்க" நான்
“ ஒ  ,அப்படியா ,…அப்போ  32 சைஸ் ..”
“இல்லை  ..இல்லை …32 இல்லை …”
நண்பன்  அவசர அவசரமாக  மறுத்தான் . நான்  ஆச்சிர்யமாக  அவனை  பார்த்தேன். எப்படி 32 இல்லன்னு தெரியும்.நண்பன்  அந்த  பெண்ணின்  நெஞ்சை  ஒரு  விநாடி  பார்த்து  விட்டு  சொன்னான்
“ இல்லை  32 இல்லை  இன்னும்  கொஞ்சம்  பெரிய  சைஸ் …வந்து …எப்படினா ….கொஞ்சம்  பெருசா …அதாவது ….”
சொல்ல  முடியாமல்  திணறினான் சுற்றும்  முற்றும்  பார்த்தான் . நானும் அவன்  பார்க்கும்  இடம்  பார்த்தேன் . அங்கே  இங்கேனு  பார்த்தவன் ,ஒரு  பெண்ணின் " பின்னழகில்"  பார்வையை  நிறுத்தினான்..
"அய்யோ  ஆண்டவா  அவ்ளோ பெருசா  …!"
என்னையும்  அறியாமல்  கத்தி  விட்டேன் , நண்பன்  தான்  பார்வையை அங்கிருந்து  விலகி , நான்  கத்தியது  ஏன்  என்று   முழு  அர்த்தம்  புரிந்து  கொண்டு 
” ஹே  இல்லைப்பா  …” நான்  ஜஸ்ட்  பார்த்தேன்  “
அட  சண்டாளா , அதுக்குள்ள  ஜொள்ளு  விடணுமா ..கேப்  கிடைச்சா  போதுமே .
“ அதோ , அவங்கள்ள  மாதிரி  இருப்பாங்க ” னு  முன்னழகு  கொஞ்சம் தூக்கலாக  இருந்த  ஒரு  பெண்ணை  கட்டினான்.
“ ஒ  சரி , அப்போ  34,.... A வா ,B யா  ,C யா  சார் ..?’
“ என்னது  A வா ,B யா  ,C யா?” நான் .
“கப்  சைஸ்  சார் ,…!”
என்னக்கு  கொஞ்சம்  புரிந்த  மாதிரியும் , புரியாத  மாதிரியும்  இருந்தது .  ரியாக்சன் எதுவும்  காட்டாமல்  நின்று  இருந்தேன் . நண்பன்  என்னை  இடித்தான்
“ மச்சி , what  is this A,B,C,D..uh ?” இங்கிலிஷ்ல  கேட்டா  அந்த  பெண்ணுக்கு  புரியாதாம் …
“ கப்  சைஸ்  சார் , A,b,C, D ங்கிறது  கப்  சைஸ் .” வாசுகி.
இது  சரி  பட்டு  வராது , டோட்டலா சரண்டர்  ஆகவேண்டியது  தான்.
“ மேடம் , எங்களுக்கு  ஒழுங்கான  சைஸ்ஸே  என்னனு  தெரியாது , இதுல  கப்  சைஸ்னு  தனியா   வேற  ஒன்ன  கேக்குறிங்க , we are sorry, இது  எல்லாம்  தெரிஞ்சு  இருந்தா தான்  பிரா  வாங்க  முடியும்னு  எங்களுக்கு  தெரியாம  போய்டுச்சு  ..” நான.

“ஹ …ஹா ..ஹா ..ஒ  நீங்க  பிரா  எடுகுறது  இது  தான் பர்ஸ்ட்  டைம்மா.. மொதல்லே  சொல்லலாம்  இல்லை . அதோ  அந்த  பொம்மைய  பாருங்க  ,அந்த  மாதிரி  கொஞ்சம்  சின்னதா  இருந்தா  A, பக்கத்துல  இருக்கிற  மாதிரி  இருந்தா  B, இந்த  பக்கம்  இருக்கிற  பொம்மை  மாதிரி  இருந்தா  C, அப்படி  கொஞ்சம்  ஓவர்  சைஸ்ஸா இருந்தா  D. இப்போ  சொல்லுங்க  எந்த  மாதிரி.."

அவள்   என்னைய   பார்த்தாள், நான்  நண்பனை  பார்த்தேன் .
“ ஒ  எஸ்  மேடம் … thanking you, C…மாதிரி  இருக்க்கும்னு நினைகிறேன்(..!!)…ஆமாம்  C தான் ..”
சேல்ஸ்  கேர்ள்  புன்சிரிப்புடன்  வித  விதமான  டிசைன்னுடன்  எடுத்து  போட்டால் . நண்பன்  மிக  ஆர்வமாக செலக்சன் செய்து  கொண்டு  இருந்தான் . நான்  அந்த  C சைஸ்  பொம்மையை  பார்த்தேன் . நீண்ட  பெருமூச்சு  ஒன்று  வெளிப்பட்டது  
( Hello, நிம்மதி  பெரு  மூச்சுங்க …! பொறமையில்  இல்லங்க  அட  நன்புங்கப்பா…!)

( பின்  குறிப்பு : நண்பன்க்கு  ரசனை   அதிகம், …. போட்டாலும்  போடலைனாலும்  ஒன்னும்  பெரிய  வித்தியாசம்   தெரியாதுன்னு  சொன்னேன்  இல்லையா , அதை  தான்  செலக்ட்  பன்னி  இருந்தான்  அந்த  நாசமா  போகிறவன் …! )

Saturday, October 9, 2010

Fibonacci No

என்திரன்  படத்தில்  ரோபோ  ரஜினியை  டெஸ்ட்  பண்ணுவதற்கு  ஒருவர்   ஒரு  நம்பரை  (24157817) சொல்லி  அது  Fibonacci (பிபினோசி ) எண்ணா  என்று  கேப்பார் .
இங்கே  நான்   Fibonacci no ண என்னனு  சொல்ல  போறேன் .
Fibonacci no அப்பிடிங்கிறது  ஒன்னும்  இல்லை , இரண்டு  நம்பரை  கூட்டும்  போது  ஒரு  விடை  வரும் . இப்போ கடைசி   இரண்டு நம்பரை மறுபடியும்  கூட்ட  வேண்டும்
அதாவது, .
1+1= 2 ( இதுல  கடைசி  இரண்டு நம்பர் 1,2)  or  2+5 = 7 ( இதுல  கடைசி  இரண்டு நம்பர் 5,7)
இரண்டு நம்பரையும் கூட்ட வேண்டும்.
1)          1+2=3                                                                                                 5+7=12

2)          2+3=5                                                                                                 7+12=19

3)          3+5=8                                                                                                 12+19=31

4)          5+8=13                                                                                               19+31= 50

5)          8+13= 21                                                                                             31+50 =81

6)         3+21=34                                                                                               50 + 81 =112

7)         21+34=55                                                                                              81+112=193

8)         34+55=89                                                                                              112+193=305

9)         55+89=144                                                                                             193+305=498

10)       89+144=233                                                                                            305+498=803

11)       144+233=377                                                                                          498+803=1301

12)         233+377=610                                                                                        803+1301=2104


இதுல  அப்படி  என்ன  பெரிய  விஷயம்  இருக்குதுன்னு  கேக்குறிங்க .
அதாவது  ஒரு  கட்டத்திற்கு  மேல்  இந்த  கூட்டு தொகை இன்  விகிதாசாரம்  கோல்டன்  ரேசியோ (Golden ratio ) என்று  சொல்லப்படும்  எண்ணான 1.618 ஆக  இருக்கும்   


அதாவது,  

55 / 34 =1.617647058823….( 1.618)

89 / 55 =1.6181818181818181….(1.618)

144 / 89 = 233 / 144=1.618055555555…(1.618)

377 / 233 =1.618025751072….(1.618).

என்ன ஆச்சிரியமாக இருக்கா ...? அது தான் கணிதத்தின் மகிமை....இப்படி நீங்க எந்த எண்ணிற்கும் பார்க்கலாம் .
Golden ratio பற்றி  பிறகு  சொல்லுகிறேன் .

Friday, October 1, 2010

என்திரன்

இனைய தளங்களில்  இருந்தும், மும்பாயில் இருந்து வெளி யாகும்  தமிழ் செய்தி தாள்களில் இருந்தும் என்திரன் படத்திற்கு நிறைய எதிர்பார்ப்பு இருபது  தெரிய வருகிறது.Face Book, Twiteer, மற்றும், இன்ன பிற தளங்களில்  இருந்தும் தமிழ் நாடு மிக பர பரப்பாக இருக்கிறது என்பது தெரிய வருகிறது. அனால் இங்கே புனேயில் அப்படி ஒன்றும் பெரிய பர பரப்பு இல்லை. ஆன் லைன் மூலமாக டிக்கெட் புக் பன்னி ( Rs 260 /= ஒன்லி...! ரொம்ப சீப்பா இருக்கு இல்ல...! )  படம் பார்த்தோம். கொஞ்சம் கூட்டம்  தான்.


படம் பார்த்தல் மட்டும் போதுமா, அதை பற்றி ஒரு வரி கூட விமர்சனம் எழுதாமல் இருந்தால் , இறந்த  பிறகு கொதிக்கும் எண்ணெயில் போடுவார்களாம் . "புருடா" புராணத்தில் இருக்கு. எதுக்கு வம்பு னு தான் இந்த "திரை" விமர்சனம் ( நன்றி: ..un டிவி).
விமர்ச்சனதிக்கு முன் ஒரு விஷயம், இங்கே புனேயில் படம் போடும் முன் " ஜன க ந மன.." தேசிய கீதம் போடுவார்கள். எல்லோரும்  எழுத்து நிற்க வேண்டும். இந்த நல்ல விசயத்தை  ஏன்  தமிழ் நாட்டிலும் பின் பற்ற கூடாது. நமது தேசிய கோடி அவ்ளோ பெரிய ஸ்க்ரீனில் முழுவதும் பார்க்கிறதை பார்க்கும் போது கொஞ்சம் தேச பக்தி வந்தது. 

இனி விமர்சனம்:

 ஷங்கர் படமா, கலாநிதிமாறன் படமா, இல்ல ரஜினி படமானு கேட்ட சந்தேகமே வேண்டாம் இது முழுக்க முழுக்க ரஜினி படம் தான். ரஜினி இவ்ளோ இளமையை சிவாஜில் கூட காட்ட வில்லை என்பேன். படம் ஆரம்பிக்கும் போது சன் பிச்சர்ஸ்  , மற்றும் கலாநிதி மாறன் கிராபிக்ஸ் படு அமர்க்களமாக அமைந்து எங்கே ரஜினின் பெயர் வரும்போது கிராபிக்ஸ் சொதப்பி விடுமோனு சந்தேகம் இருந்தது. ஆனால் வழக்கமாக வரும் சூப்பர் ஸ்டார் சீனை   விட இந்த கிராபிக்ஸ் அம்சமாக உள்ளது. இனி ரஜினி படங்களுக்கு இந்த கிராபிக்ஸ்யை  உபயோகிக்கலாம். 

ரஜினி ரொம்ப கேஷூவலாக இந்த படத்தில் நடித்து இருக்கிறார். முக்கியமாக ரஜினியை அறிமுகம் படுத்தும் இடத்தில  வழக்கமாக வரும்  டைட்டில் சாங், or அறிவுரை சாங் எதுவும் இல்லாதது மனசுக்கு ஆறுதலை தருகிறது. ரஜினி அறிமுகம் ஆகும் கட்சியில்  அநியாயத்திற்கு எளிமை. சங்கரை பாராட்டனும் . Unnecessary ஓவர் பில்ட் அப் எதுவும் இல்லாமல் பின்புறத்தில் இருந்து முன்புறம் அறிமுகம் ஆகிறார். லேட்டஸ்ட் Trend தாடி, கிருதா வைத்து கொண்டு கலகுகிறார்.. ( ஹலோ, சூர்யா, கார்த்தி, அஜீத், விஜய்... உங்க புண்ணியம் ரஜினி உங்கள் கால கட்டத்தில் இல்லை. இல்லன உங்களுக்கு போட்டியே ரஜினி தான். இப்போ மட்டும் என்னவாம்...) 

ஐஸ்வர்யாராயை மையமாக வைத்து தான் கதை சுற்றி வருகிறது. அனால் ஐஸ்வர்யாவை ஒரு ஸ்டார் வால்யுக்கு  மட்டும் தான் யூஸ்  பன்னி இருகிறார்கள். ஐஸ்வர்யா அழகோ அழகு.... ரஜினி கொடுத்து வைத்தவர் முத்தத்திற்கு மேல் முத்தம் வாங்குகிறார். ( காசும் வாங்கிட்டு முத்தமும் இலவசமாய் வாங்கிட்டு போகிறார், இந்த வயசிலயும் என் வைத்தெரிச்சல்லை வாங்கி காட்டி கொள்கிற ஒரே நடிகர் ரஜினியாக தான் இருக்கும்.. ஹும்ம் அடுத்த ஜென்மத்திலாவது ஒன்னா ரஜினியா, இல்லைனா அபிசேக் பச்சான  பொறந்து ஐஸ் கிட்ட ஒரு முத்தம் வாங்கணும் பா..).  ஐஸ் அழகாக நடனம் ஆடுகிறார்...அழகாக சிரிக்கிறார்...ரஜினியை காதலிக்கிறார். மற்றபடி வேறு விசேசம் எதுவும் இல்லை. ரஜினி சண்டை காட்சிகளிலும் , நடன காட்சிகளிலும் சும்மா தூள் பறக்கிறார். 

படத்தின் முதல் பாதி காமெடியாக போகிறது. இரண்டாம் பதில் விறு விருப்பாக ஆக்சன் . தமிழுக்கு ஹிந்தியில்  இருந்து ஒரு புதிய வில்லன். ரகுவரனை நினைவூட்டுகிறார். சண்டை காட்சில்  அந்நியன் ஜாடை அடிக்கிறது.( ஹாலி வூட்  சினிமா அதிகம் பார்க்காத தமிழ் மக்களுக்கு வேண்டும்மானால் சண்டை மிக சிறப்பாக தெரியும், ஆனால் என்னை போன்ற ஹாலி வூட் சினிமா அதிகம் பார்க்கும் மக்களுக்கு சண்டை காட்சி சாதரணமாக தான் தெரியும்.) ஆனால் ஒரு விசயத்தை ஒத்துக்கொள்ள வேண்டும் , எந்த சண்டை காட்சியும் சும்மா ஒப்புக்கு சப்பாக எடுக்க வில்லை. நிறைய உழைத்து இருக்கிறார்கள்.


"என் கிட்டே இல்லாதது அவனுங்க கிட்டே என்ன இருக்கு?" " Reproduction  & Mensuration க்கு என்ன சனா பண்ணுவ  ?" தண்ணிய போட்டுட்டு ஒட்டுரியனு கேட்டதுக்கு, " இல்ல பெட்ரோல் போட்டுட்டு ஓட்டுறேன்"  போன்ற கால கலப்புக்கு பஞ்சம் இல்லை. ஐஸை கடத்தும் போது எப்படி உயரோடு வந்த என்ற கேள்விக்கு " Up gradation Version 2.0"..போன்ற பஞ்ச் வசனமும் சூப்பர். சுஜாதா வசனம் . கிராபிக்ஸ் சும்மா பின்னி பெடலெடுத்து விட்டார்கள். ஹாலி வூட் ரேஞ்சுக்கு இருக்கிறது. ரஜினி பல துப்பாகிகளை கொண்டு சுடும் கிராபிக்ஸ் " The Mask" ல் வரும் க்ராபிக்ஸ்சை ஞாபகம் படுத்தினாலும் , நன்றாக உள்ளது. மண்ணிற்குள் துளை போட்டு கொண்டு போகும் ஸீன் " Matrix Reloaded " க்ராபிக்ஸ்சை நினைவூட்டுகிறது. " D-war" பட க்ராபிக்ஸ்சும் ஞாபகம் வருகிறது. 

க்ளைமேக்ஸ்ல். இன்னும் கொஞ்சம் டெக்கினிக்கல் விஷயத்தை புகுத்தி இருக்கலாம். வில்லன் ரஜினி அப்படியே மூன்று முகம் அலெக்ஸ் பாண்டியன் தான். ஆனாலும் உறுத்த வில்லை. ரஜினிக்குள் இப்படி ஒரு வில்லன் கதாபாத்திரத்தை "........."( Fill in the Blanks... சரியான பதில் அளிபவர்களுக்கு Rs 100/= ...)படத்திற்கு அப்புறம் இப்போது தான் பார்கிறேன். . படத்தின் இசை ARR . பின்னணி இசையியல்  இருந்து ,பாடல் வரை கலக்கோ கலக்கு என்று கலக்கி உள்ளார். "என்ன்ன்ன்திரா  ..." " கிளிமஞ்சதரோ" போன்ற பாடல்கள் புரிகிறது. இளைய தலைமுறைக்கு ஏற்ற  இசை. 


படம் முடிந்தவுடான் எழுத்து போடும் வரை இருந்து யார் யார் எந்த எந்த  துறையில் பனி யாற்றி உள்ளார்கள் என்று  பார்த்துவிட்டு தான் கூட்டம் நர்ந்தது.நிறைய ஜப்பான் தொழில்  நுட்ப கலஞ்சர்கள் கிராபிக்ஸில் பணியாற்றி உள்ளார்கள். தமிழ் நாட்டு கிராபிக்ஸ் கம்பெனி பெயர் வரும் போது ஒரே கை தட்டல் தான். பெயர் போடும் வரை இருந்து பார்த்து, கை தட்டி போகும் மக்களை இந்த படத்தில் பார்க்கிறேன். சங்கருக்கு கிடைத்த  மரியாதை, கிராபிக்ஸ்க்கு கிடைத்த வெற்றி  இது. 3D இல் எடுத்து இருந்தா  இன்னும் சூப்பர்ரா  இருந்து இருக்கும்.
( ரஜினி மகள் எடுத்துட்டு இருந்த அனிமேஷன்  படம் என்னப்பா ஆச்சு...?)
உடைகள், location , man power, செட்டிங்க்ஸ் என ரொம்ப உழைத்து இருகிறார்கள். உழைப்பின் பலன் நன்கு தெரிகிறது. படம் வசூலிலும் வெற்றி பெற  வாழ்த்துக்கள். திருட்டு DVD வராமல் இருக்க வேண்டும். தயவு செய்து இப்படத்தை தியேட்டரில் பார்க்கவும்.


இனி குறைகள்:
1 . ரோபோ ரஜினி தன் தலையை எடுத்து கட்டும் போது " Flat cable or Bus bar cable " என அழைக்கப்படும் wire தெரிகிறது. Artificial Intelligence ல் வயர் எல்லாம் வராது சாமியோ. "Fiber Optics" வந்து ரொம்ப நாள் ஆச்சு .
2 ரஜினி ஒரு " Scientist" டா காட்ட அவர் ரோபோட்டின் ஒரு நட்ட மட்டும் டைட் பண்ணுகிறார். இன்னும் எதாவது 'gimmicks' வேலை பன்னி இருக்கலாம்.
3  ரோபோ ரஜினிக்கு உணர்ச்சிகளை ஊட்ட , சுவர், தரை, எல்லாம் ஏதோதோ எழுதி காட்டுகிறார். அதற்க்கு பதில் உணர்சிகளை உணர எதாவது சென்சர் மாதிரி அய்டம் பிட் பண்ணுற மாதிரி காட்டி இருக்கலாம்.
4 .  அத்தன போலீஸ் காரங்க எப்படி வாரங்க, செத்துபோரங்க , ஆனா தமிழ் நாட்டுல ஒன்னுமே நடக்கல.
5 . ரோபோ ரஜினிய Defence ஆளுங்க  கிட்ட அறிமுகம் படுத்தும் காட்சி சுத்த சப்  ஸ்டாண்டர்ட். எந்த Defence உயர் அதிகாரிகளும் இப்படி ஓபன் space ல உட்காந்துட்டு Demonstration பாக்க மாட்டாங்க. ( Associate directors  ...Please Note)

Tuesday, September 28, 2010

"கஷ்டம்" மர்

மனுஷனுக்கு சோதனை வரலாம் அனால் இப்படி ஒரு சோதனை வரக்கூடாது . அது சரி சனி பகவான் என் தலைமேல் நின்னுட்டு  பரதநாட்டியம் ஆடினால் என்ன பண்ணுறது...! என்ன நடந்ததுனு சொல்லுறேன். மூன்று நாளைக்கு முன் , என் "LIONS DEN" னை சுத்தம் செய்யும்  போது ( அதாகப்பட்டது நான் தங்கி இருக்கும் ரூம்...இன்னும் தெளிவா சொல்ல போன சிங்கத்தோட   குகை...) ரொம்ப நாளா  use பன்னாத"xxxxxxx....."செல் கம்பனியோட ஒரு சிம் கிடைத்தது.


நான் அதை இப்போது உபயோகிப்பது இல்லை . இருந்தாலும் ஆசை யாரை விட்டது. சரி 'மறுக்கா' (நான் கொங்கு மண்டலத்தை செர்ந்தவனாக்கும்....! ) இன்னொரு தடவை ரீ சார்ஜ் பன்னி ஊபயோகிக்கலாம்னு ரீச்சர்க்ஜ் செய்தேன். கிட்ட தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது .கடைக்காரரிடம் விசாரித்து full டாக் டைம் இருக்கிற மாதிரி ரீ சார்ஜ் பண்ண சொன்னேன். நான் போட்டு இருந்த உடை, தோரனைய பார்த்துட்டு  ( அப்போ தான் ஒரு பிறந்த நாள் பார்ட்டிக்கு போயிட்டு திரும்பி இருந்தேன் ) நான் ஒரு 'HI FI' ஆசாமின்னு நினைச்சுட்டார்  போல...350 க்கு ரீ சார்ஜ் பன்னி விட்டுட்டார் .எனக்கு மயக்கமே வந்து விட்டது.

அவரை சொல்லி குற்றம் இல்லை. நான் இருக்கும் இடம் அப்படியாக பட்டது. புனேவில் விமான் நகர் ஏரியா Posh ஏரியா என்று சொல்லப்படும் ஏரியா. வெளி நாட்டு பிகர்கள் நிறைய சுற்றும் இடம். "காபி  டே" கடையே சுமார் ரெண்டு மூணு இருக்கு. ஏகப்பட்ட பார் இருக்கு. ஒரு சமோசா 7 ரூபாய்னா பார்த்துக்கோங்க. இங்க, பழ சரக்கு கடைல ஒரு கிலோ ஆப்பிள் 105 ருபாய்னு  சொல்லுவாங்க. சர்ர்ர்ர் னு கார்ல வந்து ,
" நாலு கிலோ போடுப்பா " னு சொல்லிட்டு ,
அப்படியே 10 ரூபாய்க்கு மூனே மூணு " பாணி பூரி " சாப்ட்டுட்டு போவாங்க.

ஆனா கொஞ்சம் தள்ளி போனா  "மோர் சூப்பர் மார்க்கெட்" ல அதே ஆப்பிள் கிலோ 75 ரூபாய் தான். ஒரு தடவை ஆப்பிள் வாங்கி நொந்து நூலாகி ,வெந்து வெஜ்  பிரியாணி ஆகி, இனி ஆப்பிள் என்ற வார்த்தையே மறந்து போய்டலாம் னு இருக்கேன். சரி விசயத்திற்கு வருகிறேன்., கடைக்காரர் நானும்  அந்த வகையை  சேர்ந்தவர்  என்று நினைத்து விட்டார் போல. நான் எதோ ஒரு 150 ரூபாய்க்கு பண்ணுவார்னு  நெனச்சுட்டேன்.சரி நடப்பது நன்மைக்கே னு வந்துட்டேன் . எப்படியும் புல் டாக் டைம் தானேனு ஒரு ஆறுதல்.

சோதனையே அப்புறமா தான் ஆரம்பிச்சது. ரொம்ப நாள் ஆனதால் ஒரு அழைப்பிற்கு ஒரு ரூபாய் என்ற கணக்கில் என் டாக் டைம் கழிய ஆரம்பித்தது. அருள் குமரா  நீ எந்த காலத்துலடா  இருக்க, ஒரு செகண்டுக்கு ஒரு பைசா னு உலகம் சுத்திட்டு இருக்கு,நீ என்னடானா  இன்னும் பழைய கற்க்காலத்திலேயே   இருகிரியேனு, கஸ்டமர்  ( நெஜமாலுமே "கஷ்டம்" மர் தான் )கால் சென்டர்ல கூப்பிட்டு சொன்னா போதும், என் பிரச்சனைக்கு ஒரு முடிவு வந்தரும் னு கனவு கண்டுட்டு 'கஸ்டமர்' சென்டர் நம்பரை அழைத்தேன். அதுவும்  இல்லாமல்  எத்தனை ரூபாய்க்கு ரீ சார்ஜ் செய்தால் ஒரு பைசா கால் ரேட் வரும் என்று யாருக்கும் தெரியவில்லை.

விதி அங்க தான் விளையாடி விட்டது....!  நான் என்ன நெலமைக்கு ஆளாகி இருப்பேன்னு கீழே உள்ளவற்றை படித்து பார்த்து அறிந்து கொள்ளவும்.முடிந்தால் அந்த கால் சென்டெரில் உள்ளவர்களை கொல்லவும்....( முடிந்த அளவு தமிழாக்கம் கொடுத்து உள்ளேன்...யான் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்...இவ் வையகத்தில் நீங்கள் இருந்து ,இந்த கொடுமையை படிக்க நேர்ந்தால் அதுக்கு என்னை குற்றம் சொல்ல வேண்டாம்... Mr . சனி பகவான் உங்களுக்கும் கருணை காட்டி உள்ளார் என அர்த்தம் கொள்க...) 
" நமஸ்கார் "xxxxxx" வடிக்கையளர் சேவை உங்களை வரவேற்கிறது ( 'பரவ இல்லையே நம்மள  கூட வரவேற்கிரங்கலே..!) இதே மொழியை தொடர ஒன்றை அழுத்தவும், ஹிந்தி என்றால் இரண்டை அழுத்தவும், இங்கிலீஷ் என்றால் மூன்றை அழுத்தவும்..."
எனது ஹிந்தி மற்றும் மராத்தி அறிவு எவ்ளோ என்பது உலகு அறிந்த விஷயம் , எனவே மூன்றை அழுத்தினேன்.( ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீகிங் கோர்ஸ் புக்கை மனப்பாடம் பன்னி உள்ளேன் என்ற தைரியம் தான் )
" பாலன்ஸ் தொகையை அறிய ஒன்றை அழுத்தவும், ரீ சராஜ் செய்ய இரண்டை அழுத்தவும், ஹலோ tune பாடலை தேர்வு செய்ய மூன்றை அழுத்தவும், மதிப்பு கூட்ட பட்ட சேவை பற்றி அறிய நான்கை அழுத்தவும், GPRS பற்றி அறிய ஐந்தை அழுத்தவும், இன்றைய ஆப்ஹர்  பற்றி அறிய 6 அழுத்தவும், முந்தைய மெனுவிற்கு செல்ல 7 அழுத்தவும், "
ஒரு எழவும் புரியல எத அழுத்துவது என்று....மறுக்கா முதலில்  இருந்து கேட்டேன் ...

" நமஸ்கார் "xxxxxx" வடிக்கையளர் சேவை உங்களை வரவேற்கிறது........பாலன்ஸ் தொகையை அறிய ஒன்றை அழுத்தவும், ரீ சராஜ் செய்ய இரண்டை அழுத்தவும், ஹலோ tune பாடலை தேர்வு செய்ய மூன்றை அழுத்தவும், மதிப்பு கூட்ட பட்ட சேவை பற்றி அறிய நான்கை அழுத்தவும், GPRS பற்றி அறிய ஐந்தை அழுத்தவும், இன்றைய ஆப்ஹர்  பற்றி அறிய 6 அழுத்தவும், முந்தைய மெனுவிற்கு செல்ல 7 அழுத்தவும், "
சரி என்ன தான் நடக்கும்னு  4 யை அழுத்தினேன் ..
"மதிப்பு கூட்டப்பட்ட சேவைக்கு வரவேற்கிறோம்...(அப்படி என்னத்த கூட்டுனாங்களோ ... )
மேலும் விபரம் அறிய ஒன்றை அழுத்தவும், Missed கால் பற்றிய விபரம் அறிய 2 அழுத்தவும், இன்டர்நெட் சேவை பற்றி அறிய 3 யை அழுத்தவும், அடுத்த மெனுவிற்கு செல்ல 4 யை அழுத்தவும், முந்தைய மெனுவிற்கு செல்ல 8 யை அழுத்தவும் , மெயின் மெனுவிற்கு செல்ல 9 யை அழுத்தவும்."

இது சரி பட்டு வராது... நாம தான் எங்கையோ தப்பு பண்ணுறோம் னு நெனச்சுட்டு மறுக்கா மொதல இருந்து ரொம்ப உன்னிப்பா கவனமா கேட்டேன்... 

" நமஸ்கார் "xxxxxx" வடிக்கையளர் சேவை உங்களை வரவேற்கிறது....பாலன்ஸ் தொகையை அறிய ஒன்றை அழுத்தவும், ரீ சராஜ் செய்ய இரண்டை அழுத்தவும், ஹலோ tune பாடலை தேர்வு செய்ய மூன்றை அழுத்தவும், மதிப்பு கூட்ட பட்ட சேவை பற்றி அறிய நான்கை அழுத்தவும், GPRS பற்றி அறிய ஐந்தை அழுத்தவும், இன்றைய ஆப்ஹர்  பற்றி அறிய 6 அழுத்தவும், முந்தைய மெனுவிற்கு செல்ல 7 அழுத்தவும், "

இம்முறை ரொம்ப உசாரா  5 யை அழுத்தினேன் 

" xxxxxx' GPRS சேவை உங்களை வரவேற்கிறது ..GPRS சேவையை activate செய்ய ஒன்றை அழுத்தவும், deaactivate செய்ய இரண்டை அழுத்தவும், 10 நாள் ப்ளானை  தேர்வு செய்ய 3 யை அழுத்தவும், 500 MB ப்ளானை தேர்வு செய்ய 4 யை  அழுத்தவும்., அன்லிமிடெட் ப்ளானை தேர்வு செய்ய 5 யை  அழுத்தவும், முந்தைய மெனுவிற்கு செல்ல 6 யை அழுத்தவும், மெயின் மெனுவிற்கு செல்ல 9 யை அழுத்தவும்..."

அட பாவமே இப்போ என்ன பண்ணுறது ...மறுக்கா முதலில்  இருந்து கேட்டேன்...

" நமஸ்கார் "xxxxxx" வடிக்கையளர் சேவை உங்களை வரவேற்கிறது........"

இம்முறை அது சொன்ன எந்த எண்ணையும் அழுத்தாமல் குருட்டாம் போக்கில் 8 யை   அழுத்தினேன்..

'மன்னிக்கவும் நீங்கள் தேர்வு செய்த என் தவறானது... பாலன்ஸ் தொகையை அறிய ஒன்றை அழுத்தவும், ரீ சராஜ் செய்ய இரண்டை அழுத்தவும், ஹலோ tune பாடலை தேர்வு செய்ய...." 

அய்யோ ஆண்டவா இந்த கஸ்டமர் சென்டர் ஆள்காரங்க கிட்ட எப்படி தான் தொடர்பு கொள்வது ...மறுபடியும் முதலில்  இருந்து கேட்டேன் ...

 " நமஸ்கார் "xxxxxx" வடிக்கையளர் சேவை உங்களை வரவேற்கிறது........"
இந்த தடவை 5 யை  அழுத்தினேன்.. என்ன சொன்னது என்பதில் அக்கரை காட்ட வில்லை...

மறுபடியும் 5 யை அழுத்தினேன்...

" அன்லிமிடெட் இன்டர்நெட் சேவையை activate  செய்ய ஒன்றை அழுத்தவும், முந்தைய மெனுவிற்கு செல்ல 8 யை அழுத்தவும், மெயின் மெனுவிற்கு செல்ல * யை அழுத்தவும்..."

கோவத்தில் எதை அமுக்குகிறேன்னு பார்க்காமல் ஒன்றை அழுத்திவிட்டேன். 

" அன்லிமிடெட் இன்டர்நெட் சேவையை activate செய்ததிற்கு மிக்க நன்றி. இந்த சேவையை பெற உங்கள் அக்கௌன்ட்ல்  இருந்து ரூபாய் 98 மட்டும் கழிக்கப்படும் . தயவு செய்து நாங்கள் அனுப்பும் செட்டிங்கை save செய்து விடுங்கள். முந்தைய  மெனுவிற்கு செல்ல 8 யை அழுத்தவும்..மெயின் மெனுவிற்கு செல்ல 9 யை அழுத்தவும்.."

(அட சே ! என்ன முட்டாள் தனம் பண்ணிட்டேன்... வட போச்சே... 98 ரூபாய் அநியாயமாய் போச்சே...)"

மறுபடியும் முதலில் இருந்து கேட்டேன்....

"நமஸ்கார் "xxxxxx" வடிக்கையளர் சேவை உங்களை வரவேற்கிறது....பாலன்ஸ் தொகையை அறிய ஒன்றை அழுத்தவும், ரீ சராஜ் செய்ய இரண்டை அழுத்தவும், ஹலோ tune பாடலை தேர்வு செய்ய மூன்றை அழுத்தவும், மதிப்பு கூட்ட பட்ட சேவை பற்றி அறிய நான்கை அழுத்தவும், GPRS பற்றி அறிய ஐந்தை அழுத்தவும், இன்றைய ஆப்ஹர்  பற்றி அறிய 6 அழுத்தவும், முந்தைய மெனுவிற்கு செல்ல 7 அழுத்தவும், "

இம்முறை வருவது வரட்டும் னு 3 யை  அழுத்தினேன் ...

"ஹலோ tune சேவையை பெற ஒன்றை அழுத்தவும், மெயின் மெனுவிற்கு செல்ல 9 யை அழுத்தவும்..."
so , நோ option , ஒன்றை அழுத்தினேன். 

"ஹலோ tune சேவையை activate செய்ததிற்கு வாழ்த்துக்கள் , இதற்க்கு கட்டணமாக வெறும் 30 ரூபாய் மட்டும் ஒரு மாதத்திற்கு கழிக்க படும்...முந்தைய மெனுவிற்கு செல்ல 9 யை அழுத்தவும், எங்கள் வடிக்கையளர் மையத்தை தொடர்பு  கொள்ள * யை அழுத்தவும்...."

கடைசியாக நான் கஸ்டமர் கேர் சென்டர் ஆட்களுடன் பேச முடியும் என்ற நம்பிக்கை வந்தது....எனவே * யை அழுத்தினேன்...

"நீங்கள் எங்களுக்கு மிகவும் முக்கியமான நபர்...லைன்லேயே காத்திருக்கவும்..எங்கள் வடிக்கையளர் அதிகாரி உங்களை தொடர்பு கொள்வார். உங்கள் உரையாடல்கள் பதிவு செய்ய படுகிறது.."

ஏதோதோ பாட்டு கேட்டது... ரொம்ப உன்னிப்பாக கவனித்து கொண்டு இருந்தேன் யாராவது அட்டென்ட் பண்ணுவார்கள் என்று.... சரியாக இரண்டு நிமிடங்கள் கழித்து செல் தொடர்பு முறிந்தது...


மறுபடியும் முதலில் இருந்து........
"நமஸ்கார் "xxxxxx" வடிக்கையளர் சேவை உங்களை வரவேற்கிறது...."

< சரியாக 58 நிமிடங்கள் நான் செலவு செய்து ,கஸ்டமர் கேர் ஆட்களுடன் பேசி தேவையான விரங்களை நான் பெற்றேன்... இனி "xxxxxxx" செல் சிம்மை வாழ் நாள் முழுவதும் தொடுவது இல்லை என்ற முடிவிற்கு வந்து உள்ளேன்...>

Tuesday, September 21, 2010

Google cell search '9773300000"

கூகுள் புதிய செல் சேவையை தொடங்கி உள்ளது. நீங்கள் இன்டர்நெட்டில் எப்படி சர்ச் பன்னுவிர்களோ அதே மாதிரி உங்கள் செல்லில் இருந்தே உங்களுக்கு வேண்டிய தகவல்களை பேர முடியும். என்ன தகவல் வேண்டுமோ அதை உங்கள் செல்லில் Message ஆக டைப் செய்து " 9773300000" என்ற எண்ணிற்கு அனுப்பினால் உடனே நீங்கள் தேடிய விபரங்கள் உங்களுக்கு கிடைக்கும். சேவை இலவசம் தான். இந்த என் பூனேக்கு மட்டும் தனா இல்லை இந்தியா முழுவதும் தான என்று நண்பர்கள் தான் சொல்ல வேண்டும். நான் என் பெயரை டைப் செய்து அனுப்பி பார்த்தேன் என்ன ரிசல்ட் வத்து என்று....
.....
......
.....
.....
.....
......
......
.......
.......
.....
...........
அப்படி ஒரு ஆசாமியே உலகத்தில் இல்லை என்று காறி துப்பி விட்டது.... " என்ன கொடுமை சார் இது..." எதிர் கால சாகித்திய அகடாமி விருது வாங்க போற ஆசமிகே இந்த நிலமைனா, உங்க பேர எல்லாம் போட்டா என்னத்துக்கு ஆவறது...

Saturday, September 18, 2010

Germany Bakery blast

"ஹிமாயத் மிர்சா பயக்"
(Himayat Mirza Baig) யார் இந்த புண்ணியவான்னு  தெரியுமா ...? இங்க புனேல , சும்மா டீ சாபிட்டுட்டு, பேசிட்டு இருந்த 17 பேர போன போகுதுன்னு பாம் வச்சு கொன்ன அண்ணன் தான் அவர் ... இது கடந்த FEB மாதம் நடந்தது . அந்த கடையீன் பெயர் 'ஜேர்மன் பாகிரி ". (நான் கூட ஒரு கேக் அங்க சாப்பிட்டு இருக்கேன் .)  அண்ணாத்தே பாம் வைக்க என்ன காரணம்  தெரியுமா ,புனே போலீஸ் காஷ்மீர் தீவிரவாதிகள் கொஞ்ச பேர கைது பண்ணினார்கள். அண்ணனுக்கு பாசம் பொத்துகுட்டு  வந்துருச்சு. பலி வாங்க பாம் வச்சுட்டாரு. எதோ புண்ணியம் இந்தியன் போலீஸ் கஷ்ட்டப்பட்டு (???) கைது பன்னி இருக்காங்க.

இப்போ அவர் இந்திய ஜனநாயக நாட்டுல இருகார்  இல்லையா.., எனவே  ஒரு வக்கீல்  அண்ணனுக்கு ஆஜர் அகனுமாம். Pune Bar Association  ல ( தண்ணி அடிக்கிற பார் இல்லைங்க , இவங்க வக்கீல் ஜாதி...)இருந்து சுஷில் மஞ்சர்கர் (Sushil மஞ்சர்கர்) னு ஒரு சமுக ஆர்வலர் அண்ணனுக்கு ஆஜர் ஆக முடிவு பன்னி இருகார். 
" ஹிமாயத் மிர்சா , குற்றவளியா இல்லையானு கோர்ட் தான் முடிவு பண்ணனும்,அது வரை குற்றம் சார்தப்பட்டவருக்கு  எல்லா உரிமையும் உள்ளது..." னு டயலாக்  வேற விட்டு இருகார்.

சரி, நமது நட்டு நீதி மன்றங்கள் ரொம்ப நல்லு முறையாக செயல் பட்டு வந்தால், இதை நம் ஒத்துகொள்ளலாம். இந்த வழக்கு நீதி மன்றத்தில் நடக்கும் போது எத்தனை முறை வாய்தா  வாங்க போகுதோ...? தப்பி தவறி எதாவது தீர்ப்பு வந்தால் கூட மேல் கோர்ட், கீழ் கோர்ட் ,சைடு கோர்ட் ,  ஹை கோர்ட்,சுப்ரீம்கோர்ட் னு  மாறி மாறி வழக்கு இழுத்து அடிச்ட்டே இருக்கும். அது வரை மிர்சா அண்ணன் ஜெயில்ல ஜாலியா சிக்கனோட விருந்து சாப்பிட்டு இருப்பர். அப்படியே சுப்ரீம்  கோர்ட் நீதி வழங்கினாலும் ( 12 வருஷம்  கழிச்சுதான்....! ) இருக்கவே இருக்கு ஜனாதிபதி கருணை மனு...ஒரு தடவை மனு போட்டுட்டு ,நம்ம ஜாலியா இருந்தரலாம். அப்புறம் ஜனாதிபதி மண்டைய  போட்டு குழப்பிட்டு இருப்பார். முடிவு எடுக்க ரொம்ப சிரம படுவர். அது போக அவருடைய கால தாமதத்திற்கு யாரும் கேள்வி வேற கேட்க  முடியாது ( என்ன கொடும சார் இது...? ) ஒரு வருசமோ இல்லை 10 வருசமோ ..எப்ப தோணுதோ அப்போ அவர் முடிவு எடுக்கலாம். கருணை மனுவை நிரகரிசுட்டா  அப்புறம் ஜனாதிபதிக்கு பேர் கெட்டு போய்டுமே...

17 பேரை பாம் வைத்து கொன்ன ஒரு மனித விலங்கிற்கு இவ்ளோ முக்கியத்துவம் தேவை தான என்பது தான் என் கேள்வி. இது போன்ற குற்றம் செய்பவர்களுக்கு எந்த வக்கீலும் ஆஜர் ஆக கூடாது.குற்ரம் சாட்டப்பட்டவரே வழக்காட முடியும் என்ற பிரிவு இருக்கும் போது,எதுக்கு வக்கீல் தேவை.மேலும் இது போன்ற குற்றங்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்க வேண்டும், அதுவும் மிக விரைவாக. இந்த தண்டனை மற்றவர்களுக்கு  ஒரு பாடமாக அமைய வேண்டும். குற்றம் புரிந்தால் யாரும் நமக்கு வக்கீல் வர மாட்டர்கள், தண்டனை கடுமையாக இர்ருக்கும், கருணை மனு இல்லை...என்ற சூலில் தான் குற்றம் புரிய தயங்குவார்கள்.

சுஷில் மஞ்சர்கர் .இவர் மிர்சாவிற்கு ஆஜர் ஆவது ஒன்னுனும் மனிதாபிமான அடிப்படையில் அல்ல என்பது என் கருத்து. இதற்க்கு பின்னல் பணம் விளையாடி இருக்கும் என்பதில் யாருகாவது சந்தேகம் இருக்கா ...? அந்த 17 பேரின் சொந்த பந்தங்கள் எவ்ளோ கஷ்ட பட்டு இருக்கும். அந்த 17 பேரின் உயிர் இலப்பு திரும்ப வர கூடியதா என்ன. வழக்கு முடியும் வரை  மிர்சா " இன்னொசென்ட்" ஆம் . மண்ணாங்கட்டி . சுத்த பேத்தல். பேசாம இந்த போலீஸ் கைது பண்ணுறதுக்கு பதில் என்க்கௌன்ட்டர்ல போட்டு தள்ளி இருக்கலாம். 

இந்த பாம் வெடிக்கும் போது சுஷில் மஞ்சர்கர்ரோட  பையனோ, இல்லை பெண்ணோ  அங்க இல்லாம போனது சுஷில் மஞ்சர்கர் செய்த புண்ணியம் or அவர் மனைவி செய்த புண்ணியம். மஞ்சர்கர் வக்கீலுக்கு ஒரு விஷயம் புரியல..."எல்லாமே தமாஸ் தான்....தனக்கு நடக்காத வரை...". அவருக்கு எந்த விசயம்மும் நடக்கல இல்லையா அது தான் அவருக்கு தமாசா இருக்கு.... நல்ல இருயா வக்கீல் நல்ல இரு ....!

Blogger Widgets